இன்றைய ராசிபலன் 02/04/2017

இன்றைய ராசிபலன் 02/04/2017

மேஷம்
குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். ஆடை, ஆபரணம் சேரும். வர வேண்டிய பணம் கைக்கு வரும். உறவினர்கள் மதிப்பார்கள். வாகனப் பழுதை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்யோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவுக் கிட்டும். அதிஷ்ட எண் : 7 அதிஷ்ட நிறங்கள் : ரோஸ்,ப்ரவுன்
 
 
ராசி குணங்கள்
ரிஷபம்
மாலை 6.00 மணி வரை ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் சில காரியங்களை போராடி முடிப்பீர்கள். குடும்பத்தில் சண்டை, சச்சரவு வந்துப் போகும். சில விஷயங்களுக்கு அனுபவ அறிவை பயன்படுத்துவது நல்லது. நயமாகப் பேசுபவர்களை நம்பாதீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு சுமாராக இருக்கும். உத்யோகத்தில் அதிகாரிகளுடன் பனிப்போர் வந்து நீங்கும். அதிஷ்ட எண் : 5 அதிஷ்ட நிறங்கள் : வைலெட்,இளஞ்சிவப்பு
 
 
ராசி குணங்கள்
மிதுனம்
குடும்பத்தினருடன் வீண் விவாதங்கள் வந்துப் போகும். புதியவர்களை நம்பி ஏமாற வேண்டாம். சகோதர வகையில் மனத்தாங்கல் வரும். வரவுக்கு மிஞ்சிய செலவுகள் இருக்கும். வியாபாரத்தில் வேலையாட்களிடம் கனிவாகப் பேசப்பாருங்கள். உத்யோகத்தில் பணிகளை போராடி முடிப்பீர்கள். மாலை 6.00 மணி முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் தடைகளை தாண்டி முன்னேறுவீர்கள். அதிஷ்ட எண் : 2 அதிஷ்ட நிறங்கள் : க்ரீம் வெள்ளை,ப்ரவுன்
 
 
ராசி குணங்கள்
கடகம்
குடும்பத்தாரின் ஆதரவுப் பெருகும். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். பால்ய நண்பர்களை சந்திப்பீர்கள். மனைவிவழியில் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களை தேடுவீர்கள். உத்யாகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். அதிஷ்ட எண் : 4 அதிஷ்ட நிறங்கள் : மஞ்சள்,பிங்க்
 
 
ராசி குணங்கள்
சிம்மம்
புதிய பாதையில் பயணிக்கத் தொடங்குவீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். அதிஷ்ட எண் : 1 அதிஷ்ட நிறங்கள் : சில்வர் கிரே,ப்ரவுன்
 
 
ராசி குணங்கள்
கன்னி
கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். நவீன சாதனங்கள் வாங்குவீர்கள். நண்பர்கள் ஒத்துழைப்பார்கள். எதிர்பாராத காரியங்கள் முடியும். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் தலைமையின் நம்பிக்கையை பெறுவீர்கள். அதிஷ்ட எண் : 2 அதிஷ்ட நிறங்கள் : ஆரஞ்சு,பச்சை
 
 
ராசி குணங்கள்
துலாம்
மாலை 6.00 மணி வரை சந்திராஷ்டமம் தொடர்வதால் ஒரே முயற்சியில் முடிக்க வேண்டிய விஷயங்களை பல முறை அலைந்து முடிப்பீர்கள். சிறுசிறு ஏமாற்றம் வந்து நீங்கும். விமர்சனங்களை கண்டு அஞ்சாதீர்கள். வியாபாரத்தில் ஒப்பந்தங்கள் தள்ளிப் போகும். உத்யோகத்தில் அலுவலக ரகசியங்களை வெளியிட வேண்டாம். அதிஷ்ட எண் : 6 அதிஷ்ட நிறங்கள் : மெரூண்,ப்ரவுன்
 
 
ராசி குணங்கள்
விருச்சிகம்
பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக் கொள்வார்கள். பயணங்களால் ஆதாயம் உண்டு. பழைய பிரச்னைகளை தீர்ப்பீர்கள். மனைவிவழியில் நல்ல செய்தி உண்டு. வியாபாரத்தில் புது சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்யோகத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். மாலை 6.00 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் எதிலும் கவனமுடன் செயல்பட வேண்டும். அதிஷ்ட எண் : 8 அதிஷ்ட நிறங்கள் : மெரூண்,ஆரஞ்சு
 
 
ராசி குணங்கள்
தனுசு
குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். விருந்தினர் வருகை அதிகரிக்கும். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்யோகத்தில் உங்களின் திறமையைக் கண்டு மேலதிகாரி வியப்பார். அதிஷ்ட எண் : 7 அதிஷ்ட நிறங்கள் : கிரே,மஞ்சள்
 
 
ராசி குணங்கள்
மகரம்
குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவுப் பெருகும். நட்பால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் புது பங்குதாரரை சேர்ப்பீர்கள். உத்யோகத்தில் உங்களின் புதிய முயற்சிகளை அதிகாரி பாராட்டுவார். அதிஷ்ட எண் : 3 அதிஷ்ட நிறங்கள் : ஆரஞ்சு,ஊதா
 
 
ராசி குணங்கள்
கும்பம்
புதிய கோணத்தில் சிந்தித்து பழைய சிக்கலை தீர்ப்பீர்கள். பிள்ளைகளால் நிம்மதி அடைவீர்கள். தாய்வழி உறவினர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். எதிர்பாராத சந்திப்பு நிகழும். வியாபாரத்தில் ஏற்பட்ட இழப்புகளை சரி செய்வீர்கள். அலுவலகத்தில் அமைதி நிலவும். அதிஷ்ட எண் : 9 அதிஷ்ட நிறங்கள் : மஞ்சள்,கருநீலம்
 
 
ராசி குணங்கள்
மீனம்
தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் பக்க பலமாக இருப்பார்கள். சொத்துப் பிரச்னைக்கு நல்ல தீர்வு கிடைக்கும். வேற்றுமதத்தவர் அறிமுகமாவார். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் முன்வைத்த கோரிக்கைகள் நிறைவேறும். அதிஷ்ட எண் : 5 அதிஷ்ட நிறங்கள் : ரோஸ்,கிரே 

Leave a Reply