இன்றைய ராசிபலன். 02/06/2015

 astrologyமேஷம்
சந்திராஷ்டமம் தொடர்வதால் முக்கிய விஷயங்களை நீங்களே நேரடியாக சென்று முடிப்பது நல்லது. குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்ற போராட வேண்டியிருக்கும். யாரையும் தூக்கி எறிந்து பேசாதீர்கள். மற்றவர்களை முழுமையாக நம்பிக் கொண்டிருக்க வேண்டாம். வியாபாரத்தில் பணியாட்களால் டென்ஷன் ஏற்படும். உத்யோகத்தில் அதிகாரிகளால் அலைகழிக்கப்படுவீர்கள். அதிஷ்ட எண்: 4 அதிஷ்ட நிறங்கள்: வெளிர் மஞ்சள், ப்ரவுன்
 
 
ராசி குணங்கள்
ரிஷபம்
உங்களின் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். கல்யாணப் பேச்சு வார்த்தை கூடி வரும். மனைவிவழியில் நல்ல செய்தி உண்டு. ஆடை, ஆபரணம் சேரும். வியாபாரத்தில் எதிர்பாராத தனலாபம் உண்டு. உத்யோகத்தில் அதிகாரிகளுக்கு பல ஆலோசனைகள் தருவீர்கள். அதிஷ்ட எண்: 7 அதிஷ்ட நிறங்கள்: ஆலிவ் பச்சை, வெள்ளை
 
 
ராசி குணங்கள்
மிதுனம்
குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளைப் புரிந்துக் கொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றிக் கொள்வீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு பாராட்டுக் கிடைக்கும். அதிஷ்ட எண்: 2 அதிஷ்ட நிறங்கள்: அடர் சிவப்பு, இளம் மஞ்சள்
 
 
ராசி குணங்கள்
கடகம்
வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறைவேறும். பிள்ளைகளால் மகிழ்ச்சியும், உறவினர்களால் ஆதாயமும் உண்டு. சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். அதிஷ்ட எண்: 8 அதிஷ்ட நிறங்கள்: ஊதா, ரோஸ்
 
 
ராசி குணங்கள்
சிம்மம்
தடைகளைக் கண்டு தளர மாட்டீர்கள். தாயாருடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். பழைய கடனைப் பற்றி அவ்வப்போது யோசிப்பீர்கள். நவீன மின்னணு சாதனங்கள் வாங்குவீர்கள். புது வேலை அமையும். தொழிலில் லாபம் அதிகரிக்கும். உத்யோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். அதிஷ்ட எண்: 4 அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், கிரே
 
 
ராசி குணங்கள்
கன்னி
பேச்சில் முதிர்ச்சி தெரியும். சவால்கள், விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். வாகனப் பழுதை சரி செய்வீர்கள். அரசால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். உத்யோகத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். அதிஷ்ட எண்: 3 அதிஷ்ட நிறங்கள்: க்ரீம் வெள்ளை, ஆரஞ்சு
 
 
ராசி குணங்கள்
துலாம்
கடந்த இரண்டு நாட்களாக இருந்து வந்த அலைச்சல், டென்ஷன், கோபம் யாவும் நீங்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். கடனாக கொடுத்த பணத்தை வசூலிப்பீர்கள். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். வியாபாரத்தில் தள்ளிப் போன வாய்ப்புகள் தேடி வரும். உத்யோகத்தில் அமைதி நிலவும். அதிஷ்ட எண்: 7 அதிஷ்ட நிறங்கள்: வெள்ளை, நீலம்
 
 
ராசி குணங்கள்
விருச்சிகம்
இன்றையதினம் ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் புதிய முயற்சிகள் தள்ளிப் போய் முடியும். குடும்பத்தில் சண்டை, சச்சரவு வந்து நீங்கும். அவசரப்பட்டு அடுத்தவர்களை விமர்சிக்க வேண்டாம். பணம், நகையை கவனமாக கையாளுங்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறையும். உத்யோகத்தில் அதிகாரிகளுடன் அளவாக பழகுங்கள். அதிஷ்ட எண்: 6 அதிஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, மயில் நீலம்
 
 
ராசி குணங்கள்
தனுசு
எடுத்த வேலையை முடிப்பதற்குள் அலைச்சல் அதிகரிக்கும். பிள்ளைகளை அன்பால் அரவணைத்துப் போங்கள். நெருங்கியவர்கள் சிலரால் தர்மசங்கடமான சூழ்நிலையை சமாளிக்க வேண்டி வரும். உடல் நலத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் புது முதலீடு செய்யலாம். உத்யோகத்தில் வேலைச்சுமையால் சோர்வடைவீர்கள். அதிஷ்ட எண்: 1 அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், மஞ்சள்
 
 
ராசி குணங்கள்
மகரம்
குடும்பத்தாரின் ஆதரவுப் பெருகும். பயணங்களால் மகிழ்ச்சி தங்கும். சேமிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். மனைவிவழியில் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தை பெருக்குவீர்கள். புது ஏஜென்சி எடுப்பீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் முன்வைத்த கோரிக்கைகள் நிறைவேறும். அதிஷ்ட எண்: 5 அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், ப்ரவுன்
 
 
ராசி குணங்கள்
கும்பம்
தவறு செய்தவர்களை தட்டிக் கேட்பீர்கள். உறவினர்கள், நண்பர்கள் ஆதரவாகப் பேசத் தொடங்குவார்கள். பிரபலங்கள் உதவுவார்கள். பழைய கடன் பிரச்னை கட்டுப்பாட்டிற்குள் வரும். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் அதிகாரியின் நம்பிக்கையைப் பெறுவீர்கள். அதிஷ்ட எண்: 2 அதிஷ்ட நிறங்கள்: வைலெட், இளஞ்சிவப்பு
 
 
ராசி குணங்கள்
மீனம்
கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த மோதல்கள் விலகும். அரைக்குறையாக நின்ற வேலைகள் முடிவடையும். பணப்புழக்கம் கணிசமாக உயரும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். அதிஷ்ட எண்: 9 அதிஷ்ட நிறங்கள்: க்ரீம் வெள்ளை, ப்ரவுன்

Leave a Reply