இன்றைய ராசிபலன் 03.01.2016
மேஷம்
பணப்புழக்கம் அதிகரிக்கும். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். உதவி கேட்டு வருபவர்களுக்கு உங்களாலானவற்றை செய்து கொடுப்பீர்கள். புது பொருள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் புது வேலையாட்கள் அமைவார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் உங்கள் வேலைகளை பகிர்ந்துக் கொள்வார்கள். அதிஷ்ட எண்: 3 அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், கிரே
ராசி குணங்கள்
ரிஷபம்
குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். உங்களைச் சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தை புரிந்துக் கொள்வீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவுப் பெருகும். வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். உத்யோகத்தில் புது பொறுப்பை ஏற்பீர்கள். அதிஷ்ட எண்: 1 அதிஷ்ட நிறங்கள்: க்ரீம் வெள்ளை, ஆரஞ்சு
ராசி குணங்கள்
மிதுனம்
தடைகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். மகளுக்கு நல்ல வரன் அமையும். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். புது வேலை கிடைக்கும். வியாபாரத்தில் புது பங்குதாரரை சேர்ப்பீர்கள். உத்யோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். அதிஷ்ட எண்: 8 அதிஷ்ட நிறங்கள்: வெள்ளை, நீலம்
ராசி குணங்கள்
கடகம்
குடும்பத்தினருடன் கலந்தாலோசித்து பழைய பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். மற்றவர்களுக்காக சில செலவுகளை செய்து பெருமைப்படுவீர்கள். உறவினர், நண்பர்களின் வருகையால் வீடு களைக்கட்டும். வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்யோகத்தில் தலைமைக்கு நெருக்கமாவீர்கள். அதிஷ்ட எண்: 6 அதிஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, மயில் நீலம்
ராசி குணங்கள்
சிம்மம்
சுறுசுறுப்புடன் செயல்பட்டு தேங்கிக் கிடந்த வேலைகளை முடிப்பீர்கள். பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். இங்கிதமானப் பேச்சால் எல்லோரையும் கவர்வீர்கள். நேர்மறை எண்ணங்கள் பிறக்கும். வியாபாரம் தழைக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். அதிஷ்ட எண்: 5 அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், மஞ்சள்
ராசி குணங்கள்
கன்னி
மதியம் 1.00 மணி வரை ராசிக்குள் சந்திரன் இருப்பதால் முன்கோபத்தை குறையுங்கள். இரண்டாவது முயற்சியில் சில காரியங்கள் முடியும். சொந்த-பந்தங்களால் அன்புத் தொல்லைகள் உண்டு. பண விஷயத்தில் சாக்கு போக்கு சொல்லி சமாளிப்பீர்கள். வியாபாரத்தில் பற்று வரவு சுமார்தான். உத்யோகத்தில் பணிகளை போராடி முடிப்பீர்கள். அதிஷ்ட எண்: 3 அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், ப்ரவுன்
ராசி குணங்கள்
துலாம்
குடும்பத்தினரை அனுசரித்துப் போங்கள். முக்கிய கோப்புகளை கையாளும் போது அலட்சியம் வேண்டாம். அசைவ, கார உணவுகளை தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்யோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். மதியம் மணி 1.00 முதல் ராசிக்குள் சந்திரன் செல்வதால் எதிலும் முன்யோசனையுடன் செயல்பட வேண்டும். அதிஷ்ட எண்: 1 அதிஷ்ட நிறங்கள்: வைலெட், இளஞ்சிவப்பு
ராசி குணங்கள்
விருச்சிகம்
குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். பயணங்களால் மகிழ்ச்சி தங்கும். வியாபார ரீதியாக சில முக்கியஸ்தர்களை சந்திப்பீர்கள். உத்யோகத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். அதிஷ்ட எண்: 9 அதிஷ்ட நிறங்கள்: க்ரீம் வெள்ளை, ப்ரவுன்
ராசி குணங்கள்
தனுசு
எதையும் சாதிக்கும் துணிச்சல் வரும். உடன்பிறந்தவர்கள் உங்கள் வளர்ச்சிக்கு சாதகமாக இருப்பார்கள். பழைய பிரச்னைகளை தீர்ப்பீர்கள். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். வியாபாரத்தில் சூட்சுமங்களை உணருவீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரிகள் உங்களை மதித்துப் பேசுவார்கள். அதிஷ்ட எண்: 2 அதிஷ்ட நிறங்கள்: மஞ்சள், பிங்க்
ராசி குணங்கள்
மகரம்
கடந்த கால சுகமான அனுபவங்களெல்லாம் மனதில் நிழலாடும். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் தலைமையின் நம்பிக்கையை பெறுவீர்கள். அதிஷ்ட எண்: 4 அதிஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, ப்ரவுன்
ராசி குணங்கள்
கும்பம்
மதியம் மணி 1.00 வரை சந்திராஷ்டமம் நீடிப்பதால் திட்டமிடாத செலவுகளும், பயணங்களும் குறுக்கிட்டாலும் சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். பிள்ளைகளை அவர்கள் போக்கில் விட்டுப் பிடிப்பது நல்லது. யோகா, தியானம் என மனம் செல்லும். வியாபாரத்தில் லாபம் மந்தமாக இருக்கும். உத்யோகத்தில் விமர்சனங்களையும் தாண்டி முன்னேறுவீர்கள். அதிஷ்ட எண்: 6 அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, பச்சை
ராசி குணங்கள்
மீனம்
கணவன்-மனைவிக்குள் ஆரோக்யமான விவாதங்கள் வந்துப் போகும். தாய்வழியில் மதிப்புக் கூடும். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். வாகனத்தை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். உத்யோகத்தில் மேலதிகாரி ஆதரிப்பார். மதியம் மணி 1.00 முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் எதிலும் கவனமுடன் செயல்பட வேண்டும். அதிஷ்ட எண்: 7 அதிஷ்ட நிறங்கள்: மெரூண், ப்ரவுன்
Chennai Today News: Today Astrology 03.01.2016