இன்றைய ராசிபலன். 03.02.2015

 daily astrology ctnமேஷம்
பால்ய நண்பர்கள் உதவுவார்கள். மகளுக்கு நல்ல வரன் அமையும். புது வேலை அமையும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். எதிர்பாராத சந்திப்பு நிகழும். வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் லாபமடைவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். அதிஷ்ட எண்:3 அதிஷ்ட நிறங்கள்:ஊதா, இளஞ்சிவப்பு
 
 
ராசி குணங்கள்
ரிஷபம்
குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். அரசால் ஆதாயம் உண்டு. சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு பாராட்டுக் கிடைக்கும். அதிஷ்ட எண்:2 அதிஷ்ட நிறங்கள்:மயில் நீலம், ப்ரவுன்
 
 
ராசி குணங்கள்
மிதுனம்
கடந்த இரண்டு நாட்களாக இருந்த அலைச்சல், டென்ஷன், கோபம் யாவும் நீங்கும். குடும்பத்தில் அமைதி திரும்பும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் ஏற்பட்ட இழப்புகளை சரி செய்வீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரி மதிப்பார். அதிஷ்ட எண்:7 அதிஷ்ட நிறங்கள்:சில்வர் கிரே, பச்சை
 
 
ராசி குணங்கள்
கடகம்
ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் வேலைச்சுமையால் உடல் அசதி, மனச் சோர்வு வந்து நீங்கும். குடும்பத்தாருடன் ஈகோ பிரச்னை வந்து நீங்கும். மற்றவர்களைப் பற்றி வீண் விமர்சனங்களை தவிர்ப்பது நல்லது. உதவி செய்வதாக வாக்குக் கொடுத்தவர்கள் சிலர் இழுத்தடிப்பார்கள். வியாபாரத்தில் அவசர முடிவுகள் வேண்டாம். உத்யோகத்தில் உங்களைப் பற்றி வதந்திகள் வரும். அதிஷ்ட எண்:1 அதிஷ்ட நிறங்கள்:பிங்க், க்ரீம் வெள்ளை
 
 
ராசி குணங்கள்
சிம்மம்
திட்டமிட்ட காரியங்களை அலைந்து, திரிந்து முடிக்க வேண்டி வரும். உறவினர், நண்பர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். எவ்வளவு பணம் வந்தாலும் பற்றாக்குறை நீடிக்கும். வாகனம் தொந்தரவு தரும். வியாபாரத்தில் பாக்கிகளை போராடி வசூலிப்பீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களால் சங்கடங்கள் வரும். அதிஷ்ட எண்:8 அதிஷ்ட நிறங்கள்:பிஸ்தா பச்சை, மஞ்சள்
 
 
ராசி குணங்கள்
கன்னி
எதிலும் வெற்றி பெறுவீர்கள். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். புது ஏஜென்சி எடுப்பீர்கள். வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்துக் கொள்வீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் முன்வைத்த கோரிக்கைகள் நிறைவேறும். அதிஷ்ட எண்:3 அதிஷ்ட நிறங்கள்:மெரூண், வெள்ளை
 
 
ராசி குணங்கள்
துலாம்
எதையும் சமாளிக்கும் மனோபலம் கிடைக்கும். பழைய உறவினர், நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். வியாபாரம் சூடுபிடிக்கும். உத்யோகத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். அதிஷ்ட எண்:6 அதிஷ்ட நிறங்கள்:மயில்நீலம், பிங்க்
 
 
ராசி குணங்கள்
விருச்சிகம்
கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த கசப்புணர்வுகள் நீங்கும். வர வேண்டிய பணம் கைக்கு வரும். அரைக்குறையாக நின்ற வேலைகள் முடியும். சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். வியாபாரத்தில் புது முதலீடு செய்வீர்கள். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். அதிஷ்ட எண்:5 அதிஷ்ட நிறங்கள்:ஆலிவ்பச்சை, ரோஸ்
 
 
ராசி குணங்கள்
தனுசு
சந்திராஷ்டமம் தொடர்வதால் வெளுத்ததெல்லாம் பாலாக நினைத்து சிலரிடம் பேசி சிக்கிக் கொள்ளாதீர்கள். குடும்பத்தில் எல்லாவற்றையும் இழுத்துப் போட்டுப் பார்க்க வேண்டியிருக்கும். முன்கோபத்தால் நல்லவர்களின் நட்பை இழக்க வேண்டி வரும். வியாபாரத்தில் ஒப்பந்தங்கள் தள்ளிப் போகும். உத்யோகத்தில் சக ஊழியர்களால் உங்கள் பெயர் கெடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். அதிஷ்ட எண்:9 அதிஷ்ட நிறங்கள்:இளஞ்சிவப்பு, க்ரீம்வெள்ளை
 
 
ராசி குணங்கள்
மகரம்
கடினமான காரியங்களையும் எளிதாக முடிப்பீர்கள். சகோதர வகையில் ஒற்றுமை பிறக்கும். கல்யாணப் பேச்சு வார்த்தை வெற்றியடையும். மனைவிவழியில் நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். உத்யோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். அதிஷ்ட எண்:4 அதிஷ்ட நிறங்கள்:அடர்சிவப்பு, கிரே
 
 
ராசி குணங்கள்
கும்பம்
எதிர்பாராத பணவரவு உண்டு. உறவினர், நண்பர்கள் உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் வெற்றி பெறுவீர்கள். வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களை தேடுவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவால் நினைத்தை முடிப்பீர்கள். அதிஷ்ட எண்:1 அதிஷ்ட நிறங்கள்:ரோஸ், வைலெட்
 
 
ராசி குணங்கள்
மீனம்
புதிய முயற்சிகள் யாவும் வெற்றியடையும். பிள்ளைகளின் உயர்கல்வி, உத்யோகம் குறித்து யோசிப்பீர்கள். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். வேற்றுமதத்தவர் அறிமுகமாவார். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்யோகத்தில் உங்களின் திறமைகள் வெளிப்படும். அதிஷ்ட எண்:7 அதிஷ்ட நிறங்கள்:ஆரஞ்சு, ஊதா

Leave a Reply