இன்றைய ராசிபலன் 03/10/2015

இன்றைய ராசிபலன் 03/10/2015
astrology
மேஷம்
கணவன்&மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். உறவினர்கள் சிலர் வலிய வந்து பேசுவார்கள். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளைக் கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்ளதில் சக ஊழியர்களின் ஆதரவுக் கிட்டும். அதிஷ்ட எண்: 1 அதிஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, பச்சை
 
 
ராசி குணங்கள்
ரிஷபம்
ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் அடுக்கடுக்கான வேலைகளால் அவதிபடுவீர்கள். அக்கம்&பக்கம் இருப்பவர்களை அனுசரித்துப் போங்கள். நீங்கள் ஒன்று பேசப் போய் மற்றவர்கள் அதை வேறுவிதமாகப் புரிந்துக் கொள்வார்கள். லேசாக தலை வலிக்கும். வியாபாரத்தில் அவசர முடிவுகளை தவிர்க்கவும். உத்யோகத்தில் அதிகாரிகளால் அலைகழிக்கப்படுவீர்கள். அதிஷ்ட எண்: 5 அதிஷ்ட நிறங்கள்: பிங்க், க்ரீம் வெள்ளை
 
 
ராசி குணங்கள்
மிதுனம்
கணவன்&மனைவிக்குள் விவாதங்கள் வந்துப் போகும். வாகனத்தை எடுக்கும் முன் எரிபொருள் இருக்கிறதா என பார்த்துக் கொள்ளுங்கள். யாருக்கும் சாட்சி கையப்பமிட வேண்டாம். வியாபாரத்தில் பங்குதாரர்களால் பிரச்னைகள் வரக்கூடும். உத்யோகத்தில் சக ஊழியர்களுடன் மோதல்கள் வந்து நீங்கும். அதிஷ்ட எண்: 6 அதிஷ்ட நிறங்கள்: பிஸ்தா பச்சை, மஞ்சள்
 
 
ராசி குணங்கள்
கடகம்
குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வெளிவட்டாரத்தில் மதிப்புக் கூடும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். நெருங்கியவர்களுக்காக மற்றவர்களின் உதவியை நாடுவீர்கள். வியாபாரத்தில் புது வேலையாட்கள் அமைவார்கள். உத்யோகத்தில் உங்களின் புதிய முயற்சிகளை அதிகாரி பாராட்டுவார். அதிஷ்ட எண்: 3 அதிஷ்ட நிறங்கள்: மெரூண், வெள்ளை
 
 
ராசி குணங்கள்
சிம்மம்
தன்னம்பிக்கையுடன் பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். சகோதரர்களால் நன்மை உண்டு. நெடுநாட்களாக நீங்கள் பார்க்க நினைத்த ஒருவர் உங்களை தேடி வருவார். வியாபாரத்தில் சந்தை ரகசியங்களை தெரிந்து கொள்வீர்கள். உத்யோகத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். அதிஷ்ட எண்: 4 அதிஷ்ட நிறங்கள்: மயில்நீலம், பிங்க்
 
 
ராசி குணங்கள்
கன்னி
குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். பழைய பிரச்னைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். புதியவரின் நட்பால் பயனடைவீர்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கிகாரம் கிடைக்கும். அதிஷ்ட எண்: 8 அதிஷ்ட நிறங்கள்: ஆலிவ்பச்சை, ரோஸ்
 
 
ராசி குணங்கள்
துலாம்
சந்திராஷ்டமம் இருப்பதால் சில விஷயங்களில் திட்டமிட்டது ஒன்றாகவும், நடப்பது ஒன்றாகவும் இருக்கும். நண்பர்கள், உறவினர்களுடன் உரிமையில் வரம்பு மீறிப் பேச வேண்டாம். மற்றவர்களை நம்பி பெரிய முடிவுகள் எடுக்காதீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த பணம் தாமதமாக வரும். உத்யோகத்தில் சக ஊழியர்களை பகைத்துக் கொள்ள வேண்டாம். அதிஷ்ட எண்: 7 அதிஷ்ட நிறங்கள்: இளஞ்சிவப்பு, க்ரீம்வெள்ளை
 
 
ராசி குணங்கள்
விருச்சிகம்
பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக் கொள்வார்கள். மனைவிவழியில் ஆதாயம் உண்டு. கல்யாண பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். வேற்றுமதத்தவர் உதவுவார். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் அதிகாரியின் நம்பிக்கையைப் பெறுவீர்கள். அதிஷ்ட எண்: 2 அதிஷ்ட நிறங்கள்: அடர்சிவப்பு, கிரே
 
 
ராசி குணங்கள்
தனுசு
சமயோஜிதமாகவும், சாதுர்யமாகவும் பேசி காரியம் சாதிப்பீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். உறவினர்கள், நண்பர்கள் உங்களை கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பார்கள். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும் படி நடந்துக் கொள்வீர்கள். அதிஷ்ட எண்: 6 அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், வைலெட்
 
 
ராசி குணங்கள்
மகரம்
குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். உறவினர்கள் தேடி வந்துப் பேசுவார்கள். அக்கம்&பக்கம் வீட்டாரின் ஆதரவுப் பெருகும். வியாபாரத்தை விரிவுப்படுத்துவீர்கள். உத்யோகத்தில் புதிய சலுகைகள் கிடைக்கும். அதிஷ்ட எண்: 9 அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, ஊதா
 
 
ராசி குணங்கள்
கும்பம்
தடைகளைக் கண்டு தளரமாட்டீர்கள். தாய்வழி உறவினர்களால் அலைச்சல் ஏற்படும். பணப்பற்றாக்குறை நீடித்தாலும் கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். மகளுக்கு நல்ல வரன் அமையும். வியாபாரத்தில் பங்குதாரர்கள் ஒத்துழைப்பார்கள். உத்யோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். அதிஷ்ட எண்: 4 அதிஷ்ட நிறங்கள்: இளஞ்சிவப்பு, பிங்க்
 
 
ராசி குணங்கள்
மீனம்
குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். அரசால் ஆதாயம் உண்டு. உறவினர்கள் மதிப்பார்கள். வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்யோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். அதிஷ்ட எண்: 8 அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், வெளிர் நீலம்

Leave a Reply