தினபலன் 04/10/2015
மேஷம்
திட்டவட்டமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். பூர்வீக சொத்து பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் உங்கள் கருத்துக்கு ஆதரவு பெருகும். அதிஷ்ட எண்: 9 அதிஷ்ட நிறங்கள்: கிரே, இளஞ்சிவப்பு
ராசி குணங்கள்
ரிஷபம்
கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த பிணக்குகள் நீங்கும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள். உறவினர்கள் ஒத்துழைப்பார்கள். இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். வியாபாரத்தில் போட்டிகள் குறையும். உத்யோகத்தில் திருப்தி உண்டாகும். அதிஷ்ட எண்: 7 அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், கிளிப்பச்சை
ராசி குணங்கள்
மிதுனம்
ராசிக்குள் சந்திரன் செல்வதால் மனதில் இனம்புரியாத பயம் வந்துப் போகும். குடும்பத்தாரை குறைக் கூறிக் கொண்டிருக்க வேண்டாம். அடுத்தவர்கள் மனசு காயப்படும்படி பேசாதீர்கள். உதவி செய்வதாக வாக்குக் கொடுத்தவர்கள் சிலர் இழுத்தடிப்பார்கள். புது முதலீடுகளை தவிர்க்கவும். வியாபாரத்தில் அலைச்சல் இருக்கும். உத்யோகத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. அதிஷ்ட எண்: 4 அதிஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, ஊதா
ராசி குணங்கள்
கடகம்
திட்டமிட்ட காரியங்களை அலைந்து முடிக்க வேண்டி வரும். பிள்ளைகள் பிடிவாதமாக இருப்பார்கள். அண்டை, அயலார் சிலரின் செயல்பாடுகளால் கோபம், எரிச்சல் அடையலாம். வெளிவட்டாரத்தில் விமர்சனங்களை தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்யோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் வந்து நீங்கும். அதிஷ்ட எண்: 2 அதிஷ்ட நிறங்கள்: மஞ்சள், வெளீர்நீலம்
ராசி குணங்கள்
சிம்மம்
ஆன்மிகப் பெரியோரின் ஆசி கிட்டும். பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். எங்குச் சென்றாலும் நல்ல வரவேற்பு கிடைக்கும். வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள். அதிஷ்ட எண்: 5 அதிஷ்ட நிறங்கள்: மிண்ட்கிரே, வைலெட்
ராசி குணங்கள்
கன்னி
கடந்த கால சுகமான அனுபவங்களெல்லாம் மனதில் நிழலாடும். பிள்ளைகளின் பொறுப்புணர்வு அதிகமாகும். பொது அறிவை வளர்த்துக் கொள்வீர்கள். பயணங்கள் சிறப்பாக அமையும். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் புது அதிகாரி உங்களை மதிப்பார். அதிஷ்ட எண்: 3 அதிஷ்ட நிறங்கள்: க்ரீம் வெள்ளை, நீலம்
ராசி குணங்கள்
துலாம்
கடந்த இரண்டு நாட்களாக இருந்த அலைச்சல், டென்ஷன் யாவும் நீங்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். நேர்மறை எண்ணங்கள் பிறக்கும். எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். உத்யோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவுக் கிட்டும். அதிஷ்ட எண்: 1 அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, கிரே
ராசி குணங்கள்
விருச்சிகம்
சந்திராஷ்டமம் தொடங்குவதால் அநாவசிய பேச்சை தவிர்ப்பது நல்லது. குடும்பத்தில் உள்ளவர்களுடன் வளைந்துக் கொடுத்துப் போவது நல்லது. உங்களைப் பற்றி அவதூறாகப் பேசுவார்கள். அதை பெரிது படுத்த வேண்டாம். கொஞ்சம் சிக்கனமாக இருங்கள். வியாபாரத்தில் வேலையாட்களுடன் போராட வேண்டி வரும். உத்யோகத்தில் மறைமுக நெருக்கடிகள் வந்து நீங்கும். அதிஷ்ட எண்: 6 அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், கிளிப் பச்சை
ராசி குணங்கள்
தனுசு
உங்கள் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். தாயார் ஆதரித்து பேசுவார். மனைவிவழி உறவினர்கள் மதிப்பார்கள். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் உங்களின் திறமையை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். அதிஷ்ட எண்: 9 அதிஷ்ட நிறங்கள்: வெளிர் மஞ்சள், ப்ரவுன்
ராசி குணங்கள்
மகரம்
எதிர்பாராத பணவரவு உண்டு. நண்பர்கள், உறவினர்களின் சந்திப்பால் உற்சாகமடைவீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் வெற்றி பெறுவீர்கள். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் புது பொறுப்பை ஒப்படைபார்கள். அதிஷ்ட எண்: 8 அதிஷ்ட நிறங்கள்: ஆலிவ் பச்சை, வெள்ளை
ராசி குணங்கள்
கும்பம்
புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். பிள்ளைகள் வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறைவேறும். நட்பால் ஆதாயம் உண்டு. அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவுப் பெருகும். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் உங்களின் நிர்வாகத்திறமை வெளிப்படும். அதிஷ்ட எண்: 5 அதிஷ்ட நிறங்கள்: அடர் சிவப்பு, இளம்மஞ்சள்
ராசி குணங்கள்
மீனம்
நட்பு வட்டம் விரியும். பழைய கடனைப் பற்றி அவ்வப்போது யோசிப்பீர்கள். தாயாருடன் கருத்து மோதல்கள் வந்துப் போகும். கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் லாபமடைவீர்கள். உத்யோகத்தில் விமர்சனங்களையும் தாண்டி முன்னேறுவீர்கள். அதிஷ்ட எண்: 2 அதிஷ்ட நிறங்கள்: ஊதா, ரோஸ்