இன்றைய ராசிபலன். 04/11/2014

astrologyமேஷம்
எளிதில் முடித்துவிடலாம் என நினைத்த காரியங்கள் கூட இழுபறியில் போய் முடியும். பிள்ளைகள் எதிர்த்துப் பேசுவார்கள். பழைய கடன் பிரச்சனை அவ்வப் போது மனசை வாட்டும். வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் பெறுவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் நெருக்கடிகள் வந்து நீங்கும். அதிர்ஷ்ட எண்:4 அதிர்ஷ்ட நிறங்கள்:இளஞ்சிவப்பு, க்ரீம்வெள்ளை
 
 
ராசி குணங்கள்
ரிஷபம்
பிரச்னைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். பெற்றோரின் நீண்ட நாள் ஆசைகளை நிறைவேற்றுவீர்கள். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். ஆடை, ஆபரணம் சேரும். வியாபாரத்தில் கமிஷன், புரோக்கரேஜ் வகைகளால் ஆதாயமடைவீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் தொடர்ந்து உங்களுக்கு ஆதரவுத் தருவார்கள். அதிர்ஷ்ட எண்:7 அதிர்ஷ்ட நிறங்கள்:அடர்சிவப்பு, கிரே
 
 
ராசி குணங்கள்
மிதுனம்
எதிர்பார்த்த காரியங்கள் வெற்றியடையும். உறவினர், நண்பர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். வி.ஐ.பிகள் அறிமுகமாவார்கள். அரசால் அனுகூலம் உண்டு. பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றவீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் உங்களை கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பார்கள். அதிர்ஷ்ட எண்:2 அதிர்ஷ்ட நிறங்கள்:ரோஸ், வைலெட்
 
 
ராசி குணங்கள்
கடகம்
கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த மனக்கசப்பு நீங்கும். நேர்மறை எண்ணங்கள் பிறக்கும். யோகா, தியானத்தில் மனம் லயிக்கும். உறவினர்களால் நன்மை உண்டு. வியாபாரத்தில் இழந்ததை மீட்பீர்கள். உத்தியோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். அதிர்ஷ்ட எண்:8 அதிர்ஷ்ட நிறங்கள்:ஆரஞ்சு, ஊதா
 
 
ராசி குணங்கள்
சிம்மம்
சந்திராஷ்டமம் தொடர்வதால் பல வேலைகள் தடைப்பட்டு முடியும். குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்ற போராட வேண்டியிருக்கும். அவசரப்பட்டு அடுத்தவர்களை விமர்சிக்க வேண்டாம். முன்கோபத்தால் பகை உண்டாகும். கொஞ்சம் சிக்கனமாக இருங்கள். வியாபாரத்தில் வேலையாட்களால் விரயம் வரும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் தாமதமாக கிடைக்கும். அதிர்ஷ்ட எண்:4 அதிர்ஷ்ட நிறங்கள்:இளஞ்சிவப்பு, பிங்க்
 
 
ராசி குணங்கள்
கன்னி
உங்களின் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். சகோதரங்களால் பயனடைவீர்கள். விலை உயர்ந்த ஆபரணம் வாங்குவீர்கள். கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். வியாபார ரீதியாக சில முக்கியஸ்தர்களை சந்திப்பீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் உங்கள் வேலைகளைப் பகிர்ந்துக் கொள்வார்கள். அதிர்ஷ்ட எண்:3 அதிர்ஷ்ட நிறங்கள்:ப்ரவுன், வெளிர் நீலம்
 
 
ராசி குணங்கள்
துலாம்
சாதுர்யமாகவும், சமயோஜிதமாகவும் பேசி காரியம் சாதிப்பீர்கள். பிள்ளைகளால் சமூக அந்தஸ்து உயரும். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் உங்களின் திறமையைக் கண்டு மேலதிகாரி வியப்பார். அதிர்ஷ்ட எண்:7 அதிர்ஷ்ட நிறங்கள்:கிரே, இளஞ்சிவப்பு
 
 
ராசி குணங்கள்
விருச்சிகம்
குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். பழைய கடன் பிரச்னையில் ஒன்று தீரும். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். அதிர்ஷ்ட எண்:6 அதிர்ஷ்ட நிறங்கள்:ப்ரவுன், கிளிப்பச்சை
 
 
ராசி குணங்கள்
தனுசு
எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். புதியவர்கள் நண்பர்களாவார்கள். தாயாருடன் வீண் விவாதம் வந்துப் போகும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். வியாபாரத்தில் பங்குதாரர்கள் ஒத்துழைப்பார்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் நிம்மதி கிடைக்கும். அதிர்ஷ்ட எண்:1 அதிர்ஷ்ட நிறங்கள்:சில்வர் கிரே, ஊதா
 
 
ராசி குணங்கள்
மகரம்
திடமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். அரசாங்கத்தாலும், அதிகாரப் பதவியில் இருப்பவர்களாலும் ஆதாயமடைவீர்கள். வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். உத்தியோகத்தில் உங்களின் புது முயற்சியை மூத்த அதிகாரி பாராட்டுவார். அதிர்ஷ்ட எண்:5 அதிர்ஷ்ட நிறங்கள்:மஞ்சள், வெளீர்நீலம்
 
 
ராசி குணங்கள்
கும்பம்
கடந்த இரண்டு நாட்களாக இருந்த மனஉளைச்சல் நீங்கி எதிலும் ஒரு தெளிவு பிறக்கும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் திருப்தி உண்டாகும். அதிர்ஷ்ட எண்:2 அதிர்ஷ்ட நிறங்கள்:மிண்ட்கிரே, வைலெட்
 
 
ராசி குணங்கள்
மீனம்
ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் அவசர முடிவுகள் எடுக்காமல் இருப்பது நல்லது. குடும்ப அந்தரங்க விஷயங்களை வெளி நபர்களிடம் பகிர்ந்துக் கொள்ள வேண்டாம். யாரும் உங்களை புரிந்துக் கொள்ளவில்லை என ஆதங்கப்படுவீர்கள். உங்களை நீங்களே குறைத்து மதிப்பிடாதீர்கள். வியாபாரத்தில் ஒப்பந்தங்கள் தள்ளிப் போகும். உத்தியோகத்தில் அதிகாரிகளைப் பகைத்துக் கொள்ளாதீர்கள். அதிர்ஷ்ட எண்:9 அதிர்ஷ்ட நிறங்கள்:க்ரீம் வெள்ளை, நீலம்

Leave a Reply