today astrology 06/09/2014மேஷம்
இன்றைய தினம் எதிர்பார்த்த உதவிகள் தக்க சமயத்தில் கிடைக்கும். தெளிவான முடிவுகளால் தொல்லைகள் நீங்கும். குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். பிள்ளை களின் உடல் நிலை சீராக இருக்கும். புண்ணிய ஸ்தலங்கள்ஸ் சென்று வருவீர்கள். பேச்சால் தடைபட்ட காரியங்களை முடிப்பீர்கள். வாகனச்செலவுகள் நீங்கும். பால்ய நண்பர்களைச் சந்திப்பீர்கள். அதிர்ஷ்ட எண்: 3 அதிர்ஷ்ட நிறங்கள்: மெரூண், வெள்ளை
ராசி குணங்கள்
ரிஷபம்
திறமைகளை வெளிப்படுத்த நல்ல சந்தர்ப்பங்கள் அமையும். உடன்பிறந்தவர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வியாபாரத்தில் மகிழ்ச்சியுண்டு. நட்பு வட்டாரம் விரியும். குடும்பத்தினரின் எண்ணங்களைக் கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். அரசுக் காரியங்களில் இருந்து வந்த தடைகள் விலகும். வெளிவட்டாரத்தொடர்பு அதிகரிக்கும். பயணங்கள் மகிழ்ச்சி தரும். அதிர்ஷ்ட எண்: 2 அதிர்ஷ்ட நிறங்கள்: மயில்நீலம், பிங்க்
ராசி குணங்கள்
மிதுனம்
சந்திராஷ்டமம் நீடிப்பதால் சிலரின் விமர்சனங்களுக்கும், கேலிப் பேச்சிற்கும் ஆளாவீர்கள். குடும்பத்தில் எல்லாவற்றையும் இழுத்துப் போட்டுப் பார்க்க வேண்டியிருக்கும். மற்றவர்களுடன் உங்களை ஒப்பிட்டுக் கொண்டிருக்காதீர்கள். உங்களின் தனித்ததன்மையையே பின்பற்றுவது நல்லது. வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் கனிவாகப் பழகுங்கள். உத்தியோகத்தில் யாரையும் பகைத்துக் கொள்ள வேண்டாம். அதிர்ஷ்ட எண்: 7 அதிர்ஷ்ட நிறங்கள்: ஆலிவ்பச்சை, ரோஸ்
ராசி குணங்கள்
கடகம்
இன்றைய தினம் கையில் காசுபணம் புரளும். குடும்பத்தினரின் ஆதரவு கிட்டும். உடன்பிறந்தவர் களின் நீண்டநாள் ஆசைகளை நிறைவேற்றுவீர்கள். வியாபார ரீதியாக சிலரை சந்திப்பீர்கள். வெளிவட்டாரத் தொடர்பு அதிகரிக்கும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். அரசியல்வாதிகளின் சந்திப்பு நிகழும். அடிக்கடி செலவு வைத்த வாகனம் இனி சீராகும். பெற்றோரின் ஆதரவு கிட்டும். அதிர்ஷ்ட எண்: 1 அதிர்ஷ்ட நிறங்கள்: இளஞ்சிவப்பு, க்ரீம்வெள்ளை
ராசி குணங்கள்
சிம்மம்
வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். குடும்பாத்தாருடன் மனம் விட்டுப்பேசுவீர்கள். ஆன்மீகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். வெளியூர் பயணங்களால் ஆதாயம் உண்டு. எதிர்பார்த்தபடி உதவிகள் கிடைக்கும். தாயாரின் உடல் நிலை சீராகும். மறைமுக போட்டிகளை வெல்வீர்கள். பிள்ளைகளால் உறவினர்கள் மத்தியில் மதிக்கப் படுவீர்கள். அதிர்ஷ்ட எண்: 8 அதிர்ஷ்ட நிறங்கள்: அடர்சிவப்பு, கிரே
ராசி குணங்கள்
கன்னி
முகப்பொழிவுடன் காணப்படுவீர்கள். முடியாமல் போன சில காரியங்களை இன்று முடிப்பீர்கள். உத்தியோகத்தில் சகஊழியர்களின் ஆதரவு கிட்டும். கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். கண் எரிச்சல், தூக்கமின்மை விலகும். பழைய நண்பர்களின் சந்திப்பு நிகழும். பிள்ளைகளின் எண்ணங்களைக் கேட்டறிவீர்கள். பேச்சில் கம்பீரம் பிறக்கும். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவு கிட்டும். அதிர்ஷ்ட எண்: 3 அதிர்ஷ்ட நிறங்கள்: ரோஸ், வைலெட்
ராசி குணங்கள்
துலாம்
உங்களின் வெளிப்படையான பேச்சை அனைவரும் ரசிப்பார்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். பிள்ளைகளின் விருப்பங்களை பூர்த்தி செய்வீர்கள். ஆன்மீகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். வியாபாரத்தில் மறைமுகப் போட்டிகளை வெல்வீர்கள். வேலையாட்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரியிடம் அனுசரித்துப்போவிர்கள். புதிய எண்ணங்கள் மனதில் தோன்றும். அதிர்ஷ்ட எண்: 6 அதிர்ஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, ஊதா
ராசி குணங்கள்
விருச்சிகம்
இன்றைய தினம் மனக்குழப்பங்கள் நீங்கி தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். கணவன் – மனைவிக்குள் நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகள் பொறுப்பாக நடந்து கொள்வார்கள். அவர்களின் உடல் நிலை சீராக அமையும். வெளிவட்டாரத்தில் மதிப்பு மரியாதை கூடும். வியாபார ரீதியாக முக்கிய பிரமுகர்களைச் சந்திப்பீர்கள். வீட்டை அலங்கரிப்பீர்கள். தாய்வழி உறவினர்களால் ஆதரவு உண்டு. அதிர்ஷ்ட எண்: 5 அதிர்ஷ்ட நிறங்கள்: இளஞ்சிவப்பு, பிங்க்
ராசி குணங்கள்
தனுசு
பரபரப்புடன் காணப்பட்ட நீங்கள் இன்று குடும்பத்தினருடன் மனம் விட்டுப்பேசுவீர்கள். அவர்களின் எண்ணங்களை பூர்த்தி செய்வீர்கள். அரசுக் காரியங்களில் அனுகூலமான நிலை காணப்படும். வியாபார ரீதியாக பிரபலங்களைச் சந்திப்பீர்கள். தலைவலி, இடுப்பு வலி நீங்கும். அக்கம்-பக்கம் வீட்டாரின் அனபுத்தொல்லைகள் விலகும். ஆடம்பரச் செலவுகளை தவிர்ப்பீர்கள். கோபம் நீங்கும். அதிர்ஷ்ட எண்: 9 அதிர்ஷ்ட நிறங்கள்: ப்ரவுன், வெளிர் நீலம்
ராசி குணங்கள்
மகரம்
ராசிக்குள் சந்தரன் தொடர்வதால் மற்றவர்களை நம்பி எந்த பொறுப்புகளையும் ஒப்படைக்க வேண்டாம். குடும்பத்தில் சலசலப்புகள் வந்து நீங்கும். சில விஷயங்களுக்கு அனுபவ அறிவை பயன்படுத்துவது நல்லது. யாரையும் தூக்கி எறிந்து பேசாதீர்கள். வாயுப் பதார்த்தங்களை தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் வேலையாட்களை பகைத்துக் கொள்ளாதீர்கள். உத்தியோகத்தில் தானுண்டு தன் வேலையுண்டு என்றிருக்கப்பாருங்கள். அதிர்ஷ்ட எண்: 4 அதிர்ஷ்ட நிறங்கள்: கிரே, இளஞ்சிவப்பு
ராசி குணங்கள்
கும்பம்
எளிதாக முடிய வேண்டிய விஷயங்கள் கூட பலமுறை போராடி முடிப்பீர்கள். வாகனத்தில் அதிக வேகம் வேண்டாம். பிள்ளைகளை அன்பால் அரவணைத்துப் போங்கள். யோகா, தியானம் என மனம் செல்லும். வரவுக்கு மிஞ்சிய செலவுகள் இருக்கும். வியாபாரத்தில் வேலையாட்களால் பிரச்னைகள் வரக்கூடும். உத்தியோகத்தில் சக ஊழியர்களிடம் விவாதம் வந்துப் போகும். அதிர்ஷ்ட எண்: 1 அதிர்ஷ்ட நிறங்கள்: ப்ரவுன், கிளிப்பச்சை
ராசி குணங்கள்
மீனம்
முகமலர்ச்சியுடன் காணப்படுவீர்கள். வியாபாரத்தில் இருந்துவந்த சிக்கலுக்கு முடிவு கட்டுவீர்கள். நீண்டநாள் ஆசைகளை பூர்த்தி செய்துக்கொள்வீர்கள். கணவன் -மனைவிக்குள் மகிழ்ச்சியுண்டு. தந்தையின் உடல்நிலை சீராக இருக்கும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். வாகனப்பழுது நீங்கும். வெளியூர் பயணங்களால் சந்தோஷமடைவிர்கள். உத்தியோகத்தில் மன உளைச்சல் விலகும். அதிர்ஷ்ட எண்: 7 அதிர்ஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, ஊதா