மேஷம்: உற்சாக மனப்பான்மையுடன் செயலாற்றுவீர்கள். தொழில், வியாபாரத்தில், வருமானம் அதிகரிக்கும். நண்பருக்கு உதவி செய்து மகிழ்வீர்கள். எதிர்பார்த்த சுபச்செய்தி வந்து சேரும்.
ரிஷபம்: பெற்றோரின் கருத்தை ஏற்று நடப்பீர்கள். தொழில், வியாபாரத்தில், ஆதாயம் உயரும். விருந்து, விழாவில் கலந்து கொள்வீர்கள். மாணவர்கள் ஆர்வத்துடன் படித்து முன்னேறுவர்.
மிதுனம்: குடும்ப விஷயம் குறித்து பிறரிடம் பேச வேண்டாம். தொழில், வியாபாரத்தில், சுமாரான லாபம் கிடைக்கும். பெண்கள், பிள்ளைகளின் நலனில் அக்கறை கொள்வர். பணியாளர்கள் பணி விஷயமாக வெளியூர் செல்வர்.
கடகம்: உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவி வந்து சேரும். தொழில், வியாபாரத்தில், சுமாரான லாபம் கிடைக்கும். பெண்கள், பணம் இரவல் கொடுக்க, வாங்க வேண்டாம். வாகன பாதுகாப்பில் கவனம் செலுத்துவது நல்லது.
சிம்மம்: பேச்சிலும், செயலிலும், நேர்மை நிறைந்திருக்கும். தொழில், வியாபாரத்தில், வருமானம் அபிவிருத்தியாகும். இஷ்ட தெய்வ வழிபாடு சிறப்பாக நடந்தேறும். மாணவர்கள் படிக்கும் நேரத்தை அதிகப்படுத்துவர்.
கன்னி: பிறரது அதிருப்திக்கு உட்படாத வகையில் நடந்து கொள்ளவும். தொழில், வியாபாரம், சராசரி அளவில் இருக்கும். சேமிப்பு பணம் செலவுக்கு பயன்படும். வெளியூர் பயணத்தில் மாற்றம் இருக்கும். ஒவ்வாத உணவை உண்ண வேண்டாம்.
துலாம்: சிறிய முயற்சியும் அதிக நன்மையை தரும். சமூகத்தில் புகழ் பெறுவீர்கள். தொழில், வியாபாரத்தில், அபிவிருத்தி பணி நிறைவேறும். உபரி பண வருமானம் கிடைக்கும். சொத்து வாங்க அனுகூலம் உண்டு. உறவினர் இல்லம் சென்று வருவீர்கள்.
விருச்சிகம்: புதிய முயற்சிகளை செயல்படுத்துவீர்கள். தொழில், வியாபாரத்தில், கூடுதல் நேரம் பணிபுரிய நேரிடலாம். சராசரி அளவில் பணவரவு இருக்கும். எதிர்பார்த்த சுபச் செய்தி கிடைக்க தாமதமாகலாம். உணவுப் பழக்கத்தில் கட்டுப்பாடு நல்லது.
தனுசு: திட்டமிட்ட லட்சியம் நிறைவேறும். நண்பர் உறவினர் பாராட்டுவர். தொழில், வியாபாரம், திருப்திகரமான அளவில் முன்னேற்றம் பெறும். பணப் பரிவர்த்தனை அதிகரிக்கும். அரசியல்வாதிகளுக்கு அனுகூலத் தீர்வு கிடைக்கும்.
மகரம்: பேச்சில் வசீகரம் இருக்கும். புதியவர்களின் நட்பு கிடைக்கும். தொழில், வியாபாரத்தில், வளர்ச்சி ஏற்படும். பணவரவும், நன்மையும் அதிகரிக்கும். வீட்டு உபயோகப் பொருள் வாங்குவீர்கள்.
கும்பம்: அகங்கார எண்ணத்துடன் சிலர் உங்களிடம் பேசுவர். பொறுமை குணத்தை பின்பற்றவும். தொழிலில், பணிச்சுமை அதிகரிக்கும். பணச் செலவில் சிக்கனம் அவசியமாகும். தாயின் ஆறுதல் வார்த்தை நம்பிக்கையை வளர்க்கும்.
மீனம்: வீண் பேச்சு பேசுபவரிடம் இருந்து விலகவும். முழு முயற்சியால் பணிகள் நிறைவேறும். தொழிலில், உற்பத்தி, விற்பனை, சராசரி அளவில் இருக்கும். பணவரவு சிறு செலவுகளுக்கு பயன்படும். குடும்ப உறுப்பினாகள் கூடுதல் அன்பு பாராட்டுவர்.