இன்றைய ராசிபலன் 07/06/2017
மேஷம்
ஆரோக்கியமான விவாதங்கள் வந்து போகும். மனைவிவழி உறவினர்கள் மதிப்பார்கள். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். உத்யோகத்தில் தலைமையின் நம்பிக்கையை பெறுவீர்கள். மாலை 6. 15 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் எதிலும் நிதானத்துடன் செயல்பட வேண்டும். அதிஷ்ட எண்: 1 அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், மஞ்சள்
ராசி குணங்கள்
ரிஷபம்
குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். அரசால் அனுகூலம் உண்டு. சகோதரர் பாசமழை பொழிவார். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்யோகத்தில் உங்களின் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். அதிஷ்ட எண்: 5 அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், ப்ரவுன்
ராசி குணங்கள்
மிதுனம்
புதிய முயற்சிகள் யாவும் வெற்றியடையும். பிள்ளைகளின் தனித்திறமைகளை கண்டறிவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவுப் பெருகும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். புதுத் தொழில் தொடங்குவீர்கள். உத்யோகத்தில் தலைமையின் ஆதரவு கிடைக்கும். அதிஷ்ட எண்: 6 அதிஷ்ட நிறங்கள்: வைலெட், இளஞ்சிவப்பு
ராசி குணங்கள்
கடகம்
எதிர்ப்புகள் அடங்கும். நட்பு வட்டம் விரியும். தாய்வழி உறவினர்களால் அலைச்சல் ஏற்படும். வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த ஒப்பந்தம் உங்களுக்குக் கிடைக்கும். உத்யோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். அதிஷ்ட எண்: 3 அதிஷ்ட நிறங்கள்: க்ரீம் வெள்ளை, ப்ரவுன்
ராசி குணங்கள்
சிம்மம்
தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் கௌரவப் பொறுப்புகள் தேடி வரும். அதிஷ்ட எண்: 4 அதிஷ்ட நிறங்கள்: மஞ்சள், பிங்க்
ராசி குணங்கள்
கன்னி
குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். நேர்மறை எண்ணங்கள் பிறக்கும். உறவினர்கள் ஒத்துழைப்பார்கள். நீண்ட நாள் பிரச்னைகளுக்கு தீர்வு கிட்டும். வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். அதிஷ்ட எண்: 8 அதிஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, ப்ரவுன்
ராசி குணங்கள்
துலாம்
மாலை 6. 15 மணி வரை ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் புது முதலீடுகளை தவிர்க்கவும். குடும்பத்தினர் சிலர் உங்கள் மனம் நோகும்படி பேசுவார்கள். உதவி செய்வதாக வாக்குக் கொடுத்தவர்கள் இழுத்தடிப்பார்கள். வியாபாரத்தில் வேலையாட்களை பகைத்துக் கொள்ளாதீர்கள். உத்யோகத்தில் மறைமுக நெருக்கடிகள் வந்து நீங்கும். அதிஷ்ட எண்: 7 அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, பச்சை
ராசி குணங்கள்
விருச்சிகம்
குடும்பத்தைப் பற்றிய கவலைகள் வந்து நீங்கும். எதிர்மறை எண்ணங்கள் வந்து விலகும். சகோதர வகையில் மனவருத்தம் ஏற்படும். உடல் நலம் பாதிக்கும். வியாபாரத்தில் புது முதலீடு செய்யலாம். உத்யோகத்தில் மேலதிகாரியால் பிரச்னைகள் வரக்கூடும். மாலை 6. 15 மணி முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் எதிலும் கவனமுடன் செயல்பட வேண்டும். அதிஷ்ட எண்: 2 அதிஷ்ட நிறங்கள்: மெரூண், ப்ரவுன்
ராசி குணங்கள்
தனுசு
குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். சொந்த-பந்தங்கள் வீடு தேடி வருவார்கள். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் புது சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்யோகத்தில் மூத்த அதிகாரிகள் முக்கிய அறிவுரைகள் தருவார்கள். அதிஷ்ட எண்: 6 அதிஷ்ட நிறங்கள்: மெரூண், ஆரஞ்சு
ராசி குணங்கள்
மகரம்
தன்னம்பிக்கையுடன் பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். பிள்ளைகளால் மதிப்புக் கூடும். சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள். அதிஷ்ட எண்: 9 அதிஷ்ட நிறங்கள்: கிரே, மஞ்சள்
ராசி குணங்கள்
கும்பம்
கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். அரைக்குறையாக நின்ற வேலைகள் முடியும். பிரபலங்களால் ஆதாயம் உண்டு. பள்ளிப் பருவ உறவுகளை சந்திப்பீர்கள். தொழிலில் லாபம் அதிகரிக்கும். உத்யோகத்தில் புது பொறுப்புகள் தேடி வரும். அதிஷ்ட எண்: 4 அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, ஊதா
ராசி குணங்கள்
மீனம்
மாலை 6. 15 மணி வரை சந்திராஷ்டமம் நீடிப்பதால் எடுத்த வேலையை முழுமையாக முடிக்க முடியாமல் அவதிக்குள்ளாவீர்கள். பிள்ளைகளிடம் கோபத்தை காட்ட வேண்டாம். விமர்சனங்களை கண்டு அஞ்சாதீர்கள். வியாபாரத்தில் பங்குதாரர்களுடன் போராட வேண்டி வரும். உத்யோகத்தில் அதிகாரிகளுடன் பனிப்போர் வந்து நீங்கும். அதிஷ்ட எண்: 8 அதிஷ்ட நிறங்கள்: மஞ்சள், கருநீலம்