இன்றைய ராசிபலன் 07/10/2015
மேஷம்
புதிய கோணத்தில் சிந்தித்து பழைய சிக்கலை தீர்ப்பீர்கள். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். தாய்வழி உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். திடீர் பயணங்கள் உண்டு. வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். அதிஷ்ட எண்: 3 அதிஷ்ட நிறங்கள்: மயில்நீலம், பிங்க்
ராசி குணங்கள்
ரிஷபம்
துணிச்சலாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். பிள்ளைகளின் பெருமைகளை மற்றவர்களிடம் சொல்லி மகிழ்வீர்கள். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். வியாபாரத்தில் புதிய சரக்குகள் கொள்முதல் செய்வீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகளுக்கு பல ஆலோசனைகள் தருவீர்கள். அதிஷ்ட எண்: 1 அதிஷ்ட நிறங்கள்: ஆலிவ்பச்சை, ரோஸ்
ராசி குணங்கள்
மிதுனம்
குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். செலவுகளைக் குறைக்க திட்டமிடுவீர்கள். உறவினர்கள் உங்களைப் புரிந்துக் கொள்வார்கக். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களால் நினைத்ததை முடிப்பீர்கள். அதிஷ்ட எண்: 8 அதிஷ்ட நிறங்கள்: இளஞ்சிவப்பு, க்ரீம்வெள்ளை
ராசி குணங்கள்
கடகம்
ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் பழைய கசப்பான சம்பவங்களைப் பற்றி யாரிடமும் விவாதிக்க வேண்டாம். உதவிக் கேட்டு உறவினர்களும் தர்மசங்கடத்திற்கு ஆளாக்குவார்கள். சிலர் உங்களிடம் நயமாகப் பேசினாலும் சொந்த விஷயங்களை பகிர்ந்துக் கொள்ள வேண்டாம். வியாபாரத்தில் வேலையாட்களின் தொந்தரவுகளை விட்டுப் பிடிப்பது நல்லது. உத்யோகத்தில் அதிகாரிகள் குறைக் கூறுவார்கள். அதிஷ்ட எண்: 6 அதிஷ்ட நிறங்கள்: அடர்சிவப்பு, கிரே
ராசி குணங்கள்
சிம்மம்
குடும்பத்தினரை அனுசரித்துப் போங்கள். ஆடம்பரச் செலவுகளால் சேமிப்புகள் கரையும். யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள். சகோதர வகையில் மனத்தாங்கல் வரும். சாலைகளை கவனமாக கடந்துச் செல்லுங்கள். வியாபாரத்தில் பாக்கிகளை கறாராகப் பேசி வசூலிப்பீர்கள். உத்யோகத்தில் மறைமுகப் பிரச்னைகள் வந்து நீங்கும். அதிஷ்ட எண்: 5 அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், வைலெட்
ராசி குணங்கள்
கன்னி
சின்ன சின்ன சந்தர்ப்பங்களையும், வாய்ப்புகளையும் பயன்படுத்திக் கொள்வீர்கள். பெற்றோரின் ஆதரவுப் பெருகும். உங்களால் வளர்ச்சியடைந்த சிலரை இப்பொழுது சந்திக்க நேரிடும். பழைய கடன் பிரச்னை கட்டுப்பாட்டிற்குள் வரும். வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். உத்யோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். அதிஷ்ட எண்: 3 அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, ஊதா
ராசி குணங்கள்
துலாம்
சாதிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். உறவினர், நண்பர்கள் உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். காணாமல் போன முக்கிய ஆவணம் கிடைக்கும். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் மூத்த அதிகாரிகள் உங்களுக்கு முன்னுரிமைத் தருவார்கள். அதிஷ்ட எண்: 1 அதிஷ்ட நிறங்கள்: இளஞ்சிவப்பு, பிங்க்
ராசி குணங்கள்
விருச்சிகம்
சோர்வு நீங்கி துடிப்புடன் செயல்படத் தொடங்குவீர்கள். புது முடிவுகள் எடுப்பீர்கள். பணப்புழக்கம் கணிசமாக உயரும். விருந்தினர் வருகை அதிகரிக்கும். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். அதிஷ்ட எண்: 9 அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், வெளிர் நீலம்
ராசி குணங்கள்
தனுசு
சந்திராஷ்டமம் நீடிப்பதால் உங்களை அறியாமலேயே ஒருவித படபடப்பு, தாழ்வுமனப்பான்மை வந்துச் செல்லும். தன்னம்பிக்கை குறையும். பிள்ளைகளிடம் கோபப்படாதீர்கள். நீங்கள் ஒன்று பேசப் போய் மற்றவர்கள் அதை வேறு விதமாகப் புரிந்துக் கொள்வார்கள். வியாபாரத்தில் இழப்புகள் ஏற்படும். உத்யோகத்தில் சக ஊழியர்களால் அலைக்கழிக்கப்படுவீர்கள். அதிஷ்ட எண்: 2 அதிஷ்ட நிறங்கள்: கிரே, இளஞ்சிவப்பு
ராசி குணங்கள்
மகரம்
உங்களின் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். சகோதர வகையில் ஆதாயமடைவீர்கள். மனைவிவழியில் ஆதரவுப் பெருகும். வியாபாரத்தில் சந்தை ரகசியங்களை தெரிந்து கொள்வீர்கள். புது ஏஜென்சி எடுப்பீர்கள். உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். அதிஷ்ட எண்: 4 அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், கிளிப்பச்சை
ராசி குணங்கள்
கும்பம்
குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்றுக் கொள்வார்கள். மற்றவர்களுக்காக சில செலவுகளை செய்து பெருமைப்படுவீர்கள். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். அதிஷ்ட எண்: 6 அதிஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, ஊதா
ராசி குணங்கள்
மீனம்
குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள். அக்கம்&பக்கம் வீட்டாரின் ஆதரவுப் பெருகும். புதுப் பொருள் சேரும். வியாபாரத்தில் புகழ் பெற்ற நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். உத்யோகத்தில் அமைதி நிலவும். அதிஷ்ட எண்: 7 அதிஷ்ட நிறங்கள்: மஞ்சள், வெளீர்நீலம்