மேஷம்
குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். புதியவரின் நட்பால் ஆதாயமடைவீர்கள். பழைய பிரச்னைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். வியாபாரத்தில் புது முதலீடு செய்வீர்கள். உத்தியோகத்தில் திருப்தி உண்டாகும். அதிர்ஷ்ட எண்:5 அதிர்ஷ்ட நிறங்கள்:அடர்சிவப்பு,கிரே
ராசி குணங்கள்
ரிஷபம்
சந்திராஷ்டமம் நீடிப்பதால் ஒரே நேரத்தில் இரண்டு, மூன்று வேலைகளை இழுத்துப் போட்டு பார்க்க வேண்டி வரும். அக்கம்-பக்கம் இருப்பவர்களை அனுசரித்துப் போங்கள். சிலர் உங்களிடம் நயமாகப் பேசினாலும் சொந்த விஷயங்களை பகிர்ந்துக் கொள்ள வேண்டாம். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களுடன் சச்சரவு வரும். உத்தியோகத்தில் வேலைச்சுமை அதிகமாகும். அதிர்ஷ்ட எண்:6 அதிர்ஷ்ட நிறங்கள்:ரோஸ்,வைலெட்
ராசி குணங்கள்
மிதுனம்
பிள்ளைகளால் மகிழ்ச்சியும், உறவினர்களால் ஆதாயமும் உண்டு. பயணங்களால் புத்துணர்ச்சி பெறுவீர்கள். கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். தாயார் ஆதரித்துப் பேசுவார். வியாபாரத்தில் புது சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் உதவுவார்கள். அதிர்ஷ்ட எண்:2 அதிர்ஷ்ட நிறங்கள்:ஆரஞ்சு,ஊதா
ராசி குணங்கள்
கடகம்
குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும். விருந்தினர்களின் வருகையால் வீடு களைக்கட்டும். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்தியோத்தில் உங்கள் கை ஓங்கும். அதிர்ஷ்ட எண்:4 அதிர்ஷ்ட நிறங்கள்:இளஞ்சிவப்பு,பிங்க்
ராசி குணங்கள்
சிம்மம்
புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். உறவினர்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். அதிர்ஷ்ட எண்:9 அதிர்ஷ்ட நிறங்கள்:ப்ரவுன்,வெளிர் நீலம்
ராசி குணங்கள்
கன்னி
எதிர்பார்த்தவைகளில் சில தள்ளிப் போனாலும், எதிர்பாராத ஒரு வேலை முடியும். தாய்வழி உறவினர்களால் அலைச்சல் ஏற்படும். வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். நட்பு வட்டம் விரியும். வியாபாரத்தில் பங்குதாரர்களின் பிரச்சனை தீரும். உத்தியோகத்தில் அமைதி நிலவும். அதிர்ஷ்டஎண்:2 அதிர்ஷ்ட நிறங்கள்:கிரே,இளஞ்சிவப்பு
ராசி குணங்கள்
துலாம்
குடும்பத்தினருடன் கலந்தாலோசித்து பழைய பிரச்சனைகளுக்கு முக்கிய தீர்வு காண்பீர்கள். சொத்து வாங்குவது குறித்து யோசிப்பீர்கள். சொந்த&பந்தங்கள் தேடி வருவார்கள். புது வாகனம் வாங்குவீர்கள். வியாபாரத்தில் கமிஷன், ஸ்டேஷனரி வகைகளால் லாபமடைவீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். அதிஷ்ட எண்:3 அதிஷ்ட நிறங்கள்:ப்ரவுன்,கிளிப்பச்சை
ராசி குணங்கள்
விருச்சிகம்
கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். அழகு, இளமைக் கூடும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். கடனாக கொடுத்த பணத்தை வசூலிப்பீர்கள். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் மரியாதைக் கூடும். அதிர்ஷ்ட எண்:7 அதிர்ஷ்டநிறங்கள்:சில்வர் கிரே,ஊதா
ராசி குணங்கள்
தனுசு
ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் நினைத்த வேகத்தில் சில வேலைகளை முடிக்க முடியாமல் தடை, தாமதங்கள் ஏற்படும். உறவினர், நண்பர்களுடன் நெருடல்கள் வந்து நீங்கும். மற்றவர்களை சார்ந்து இருக்க வேண்டாம். நெருங்கியவரிடம் உங்களின் மனக்குறைகளை சொல்லி ஆதங்கப்படுவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் கனிவாகப் பழகுங்கள். அதிர்ஷ்ட எண்:5 அதிர்ஷ்ட நிறங்கள்:மஞ்சள்,வெளீர்நீலம்
ராசி குணங்கள்
மகரம்
குடும்பத்தினருடன் வீண் விவாதங்கள் வந்துப் போகும். நெருங்கியவர்கள் சிலர் உங்களை உதாசீனப்படுத்தி பேசுவார்கள். வாகனம் பழுதாகும். யாரையும் பரிந்துரை செய்ய வேண்டாம். வியாபாரத்தில் பாக்கிகளை நயமாகப் பேசி வசூலிக்கப்பாருங்கள். உத்தியோகத்தில் அதிகாரிகளுடன் மோதல்கள் வேண்டாமே. அதிர்ஷ்ட எண்:1 அதிர்ஷ்ட நிறங்கள்:மிண்ட்கிரே,வைலெட்
ராசி குணங்கள்
கும்பம்
குடும்பத்தாரின் ஆதரவுப் பெருகும். மனதிற்கு இதமான செய்தி வரும். நெடுநாட்களாக நீங்கள் பார்க்க நினைத்த ஒருவர் உங்களை தேடி வருவார். பயணங்களால் மகிழ்ச்சி தங்கும். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். வியாபாரத்தில் வி.ஐ.பிகள் வாடிக்கையாளர்களாவார்கள். உத்தியோkத்தில் பாராட்டப்படுவீர்கள். அதிர்ஷ்ட எண்:3 அதிர்ஷ்ட நிறங்கள்:க்ரீம் வெள்ளை,நீலம்
ராசி குணங்கள்
மீனம்
தவறு செய்பவர்களை தட்டிக் கேட்பீர்கள். உடன்பிறந்தவர்கள் பாசமழைப் பொழிவார்கள். நம்பிக்கைக்குறியவர்களை ஆலோசித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். வேற்றுமதத்தவர்கள் உதவுவார்கள். வியாபார ரீதியாக சில முக்கியஸ்தர்களை சந்திப்பீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் உங்கள் ஆலோசனையை ஏற்றுக் கொள்வார்கள். அதிர்ஷ்ட எண்:6 அதிர்ஷ்ட நிறங்கள்:ஆரஞ்சு