இன்றைய ராசிபலன் 12/05/2016
மேஷம்
எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். தாயாருக்கு மருத்துவச் செலவுகள் வந்துப் போகும். பயணங்களால் மகிழ்ச்சி தங்கும். அரசு அதிகாரிகளின் உதவியால் சில காரியங்களை முடிப்பீர்கள். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். அதிஷ்ட எண்: 5 அதிஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, பச்சை
ராசி குணங்கள் ரிஷபம்
துணிச்சலாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் வேலைகளை பகிர்ந்துக் கொள்வார்கள். அரசால் ஆதாயம் உண்டு. விருந்தினர்களின் வருகை அதிகரிக்கும். வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களை தேடுவீர்கள். உத்யோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். அதிஷ்ட எண்: 6 அதிஷ்ட நிறங்கள்: பிங்க், க்ரீம் வெள்ளை
ராசி குணங்கள் மிதுனம்
கடந்த இரண்டு நாட்களாக இருந்த காரியத் தடைகள் நீங்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். வராது என்றிருந்த பணம் கைக்கு வரும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். உறவினர்கள் மதிப்பார்கள். வியாபாரத்தில் லாபம் வரும். உத்யோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும். அதிஷ்ட எண்: 2 அதிஷ்ட நிறங்கள்: பிஸ்தா பச்சை, மஞ்சள்
ராசி குணங்கள் கடகம்
ராசிக்குள் சந்திரன் நுழைவதால் பல வேலைகளையும் நீங்களே பார்க்க வேண்டி வரும். நண்பர்கள், உறவினர்களால் செலவினங்கள் அதிகரிக்கும். சிறுசிறு அவமானங்கள் வந்து நீங்கும். கோபத்தால் இழப்புகள் ஏற்படும். புதியவர்களை நம்பி ஏமாற வேண்டாம். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களுடன் சச்சரவு வரும். உத்யோகத்தில் அலுவலக ரகசியங்களை வெளியிட வேண்டாம். அதிஷ்ட எண்: 4 அதிஷ்ட நிறங்கள்: மெரூண், வெள்ளை
ராசி குணங்கள் சிம்மம்
சின்ன சின்ன வேலைகளையும் அலைந்து முடிக்க வேண்டி வரும். பிள்ளைகளால் டென்ஷன் அதிகரிக்கும். வாகனத்தில் அதிக வேகம் வேண்டாம். ஆடம்பரச் செலவுகளால் சேமிப்புகள் கரையும். வியாபாரத்தில் கணிசமாக லாபம் உயரும். உத்யோகத்தில் மற்றவர்களை விமர்சிக்க வேண்டாம். அதிஷ்ட எண்: 9 அதிஷ்ட நிறங்கள்: மயில் நீலம், பிங்க்
ராசி குணங்கள் கன்னி
குடும்பத்தினருடன் மனம் விட்டு பேசி மகிழ்வீர்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். பழைய கடன் பிரச்னை கட்டுப்பாட்டிற்குள் வரும். வேற்றுமதத்தவர் உதவுவார். வியாபாரத்தில் புது சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்யோகத்தில் மூத்த அதிகாரிகள் முக்கிய அறிவுரைத் தருவார்கள். அதிஷ்ட எண்: 2 அதிஷ்ட நிறங்கள்: ஆலிவ் பச்சை, ரோஸ்
ராசி குணங்கள் துலாம்
எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். உங்களால் பயனடைந்தவர்கள் இப்போது உங்களுக்கு உதவி செய்வார்கள். பொது காரியங்களில் ஈடுபடுவீர்கள். வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்துக் கொள்வீர்கள். உத்யோகத்தில் உங்களின் நிர்வாகத்திறமை வெளிப்படும். அதிஷ்ட எண்: 3 அதிஷ்ட நிறங்கள்: இளஞ்சிவப்பு, க்ரீம் வெள்ளை
ராசி குணங்கள் விருச்சிகம்
கடந்த இரண்டு நாட்களாக கணவன்- மனைவிக்குள் இருந்த மோதல்கள் விலகும். பணவரவு திருப்தி தரும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். வியாபாரத்தில் போட்டிகள் குறையும். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். அதிஷ்ட எண்: 7 அதிஷ்ட நிறங்கள்: அடர் சிவப்பு, கிரே
ராசி குணங்கள் தனுசு
சந்திராஷ்டமம் தொடங்குவதால் புதிய முயற்சிகள் தள்ளிப் போய் முடியும். குடும்பத்தில் சிறு வார்த்தைகள் கூட பெரிய தகராறில் போய் முடியும். தர்மசங்கடமான சூழ்நிலைகளில் அவ்வப்போது சிக்குவீர்கள். தாழ்வுமனப்பான்மை வந்து நீங்கும். வியாபாரத்தில் வேலையாட்கள் விரயம் வரும். உத்யோகத்தில் சக ஊழியர்களை குறைக் கூறிக் கொண்டிருக்க வேண்டாம். அதிஷ்ட எண்: 5 அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், வைலெட்
ராசி குணங்கள் மகரம்
சவாலாகத் தெரிந்த சில வேலைகள் சாதாரணமாக முடியும். பிள்ளைகளால் அந்தஸ்து உயரும். கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். மனைவிவழியில் நல்ல செய்தி உண்டு. வியாபாரத்தில் வேலையாட்களின் ஆதரவுக் கிட்டும். உத்யோகத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். அதிஷ்ட எண்: 1 அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, ஊதா
ராசி குணங்கள் கும்பம்
குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்றுக் கொள்வார்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். வியாபாரத்தில் உத்யோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும் படி நடந்து கொள்வீர்கள். அதிஷ்ட எண்: 3 அதிஷ்ட நிறங்கள்: இளஞ்சிவப்பு, பிங்க்
ராசி குணங்கள் மீனம்
புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். பிள்ளைகளின் வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறைவேறும். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். நட்பு வட்டம் விரிவடையும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். அதிஷ்ட எண்: 6 அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், வெளிர் நீலம்