மேஷம்
உங்களின் அணுகுமுறையை மற்றவர்களின் ரசனைக்கேற்ப மாற்றியமைத்துக் கொள்வீர்கள். உடன்பிறந்தவர்கள் பாசமழைப் பொழிவார்கள். சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். வியாபாரத்தில் புதுத் தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி அடையும். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். அதிஷ்ட எண்:2 அதிஷ்ட நிறங்கள்:பிஸ்தா பச்சை, மஞ்சள்
ராசி குணங்கள்
ரிஷபம்
நீண்ட நாள் ஆசையில் ஒன்று நிறைவேறும். உறவினர், நண்பர்களால் ஆதாயம் உண்டு. விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். திடீர் சந்திப்புகள் நிகழும். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். அதிஷ்ட எண்:6 அதிஷ்ட நிறங்கள்:மெரூண், வெள்ளை
ராசி குணங்கள்
மிதுனம்
மதியம் 12.30 மணி வரை சந்திராஷ்டமம் தொடர்வதால் முடிந்த வரை சகிப்புத்தன்மையுடனும், விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையுடனும் நடந்துக் கொண்டால் நல்லது. திட்டமிடாத செலவுகளை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். தடைப்பட்ட வேலைகளை மாறுபட்ட அணுகுமுறையால் முடித்துக் காட்டுவீர்கள். வியாபாரத்தில் பற்று வரவு சுமார்தான். உத்யோகத்தில் விமர்சனங்களை ஏற்றுக் கொள்வது நல்லது. மாலையிலிருந்து மகிழ்ச்சி தொடங்கும். அதிஷ்ட எண்:4 அதிஷ்ட நிறங்கள்:மயில்நீலம், பிங்க்
ராசி குணங்கள்
கடகம்
குடும்பத்தில் ஆரோக்யமான விவாதங்கள் வந்துப் போகும். தாயாரின் உடல் நலம் சீராகும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். வியாபாரத்தில் லாபம் வரும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். மதியம் 12.30 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் எதிலும் முன்யோசனையுடன் செயல்படப்பாருங்கள். அதிஷ்ட எண்:7 அதிஷ்ட நிறங்கள்:ஆலிவ்பச்சை, ரோஸ்
ராசி குணங்கள்
சிம்மம்
இதமாகவும், இங்கிதமாகவும் பேசி காரியம் சாதிப்பீர்கள். பிள்ளைகளின் பெருமைகளை மற்றவர்களிடம் சொல்லி மகிழ்வீர்கள். உங்களால் மற்றவர்கள் ஆதாயமடைவார்கள். நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். வியாபாரம் செழிக்கும். உத்யோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். அதிஷ்ட எண்:9 அதிஷ்ட நிறங்கள்:இளஞ்சிவப்பு, க்ரீம்வெள்ளை
ராசி குணங்கள்
கன்னி
மாறுபட்ட யோசனைகள் மனதில் தோன்றும். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவுப் பெருகும். நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். அதிஷ்ட எண்:8 அதிஷ்ட நிறங்கள்:அடர்சிவப்பு, கிரே
ராசி குணங்கள்
துலாம்
எதிர்பார்த்த உதவிகள் கிடைக்காவிட்டாலும் திடீர் உதவிகள் புது வகையில் வந்து சேரும். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் வந்துப் போகும். கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலமாக லாபமடைவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களால் நிம்மதி கிட்டும். அதிஷ்ட எண்:3 அதிஷ்ட நிறங்கள்:ரோஸ், வைலெட்
ராசி குணங்கள்
விருச்சிகம்
திடமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். பிள்ளைகள் குடும்ப சூழ்நிலையறிந்து செயல்படுவார்கள். பயணங்களால் மகிழ்ச்சி தங்கும். கௌரவப் பொறுப்புகளுக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். புது ஏஜென்சி எடுப்பீர்கள். வியாபாரத்தில் இரட்டிப்பு லாபம் உண்டு. உத்யோகத்தில் அதிகாரிகளுக்கு ஆலோசனைகள் தருவீர்கள். அதிஷ்ட எண்:1 அதிஷ்ட நிறங்கள்:ஆரஞ்சு, ஊதா
ராசி குணங்கள்
தனுசு
சோர்வு நீங்கி துடிப்புடன் செயல்படத் தொடங்குவீர்கள். விருந்தினர்களின் வருகையால் வீட்டில் உற்சாகமடைவீர்கள். காணாமல் போன முக்கிய ஆவணம் ஒன்று கிடைக்கும். மனதில் இருந்த சலனம் நீங்கும். வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவுக் கிட்டும். அதிஷ்ட எண்:3 அதிஷ்ட நிறங்கள்:இளஞ்சிவப்பு, பிங்க்
ராசி குணங்கள்
மகரம்
இன்றும் மதியம் 12.30 மணி வரை ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் முன்கோபத்தை தவிர்க்கப்பாருங்கள். திட்டமிடாத செலவுகளும், பயணங்களும் குறுக்கிட்டாலும் சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். யோகா, தியானத்தில் மனம் லயிக்கும். வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் பணிகளை போராடி முடிப்பீர்கள். மாலைப் பொழுதிலிருந்து தடைகள் உடைபடும். அதிஷ்ட எண்:5 அதிஷ்ட நிறங்கள்:ப்ரவுன், வெளிர் நீலம்
ராசி குணங்கள்
கும்பம்
குடும்பத்தினருடன் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கப்பாருங்கள். மற்றவர்கள் விஷயத்தில் அநாவசியமாக தலையிட வேண்டாம். பழைய கடனைப் பற்றி அவ்வப்போது யோசிப்பீர்கள். வியாபாரம் சுமாராக இருக்கும். உத்யோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் வந்துப் போகும். மதியம் 12.30 மணி முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் எதிலும் எச்சரிக்கையுடன் செயல்படப்பாருங்கள். அதிஷ்ட எண்:2 அதிஷ்ட நிறங்கள்:கிரே, இளஞ்சிவப்பு
ராசி குணங்கள்
மீனம்
எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உங்களால் வளர்ச்சியடைந்த சிலரை சந்திக்க நேரிடும். வீட்டை விரிவுப்படுத்துவது குறித்து யோசிப்பீர்கள். உறவினர்கள் வீடு தேடி வருவார்கள். வியாபாரத்தில் சில நுணுக்கங்களைக் கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டும்படி நடந்துக் கொள்வீர்கள். அதிஷ்ட எண்:4 அதிஷ்ட நிறங்கள்:ப்ரவுன், கிளிப்பச்சை