இன்றைய ராசிபலன்கள் 14/11/2016
மேஷம்
ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் ஒரே நாளில் முக்கியமான நான்கைந்து வேலைகளை பார்க்க வேண்டி வரும். இதை முதலில் முடிப்பதா, அதை முதலில் முடிப்பதா என்ற ஒரு டென்ஷன் இருக்கும். உறவினர், நண்பர்களைப் பகைத்துக் கொள்ளாதீர்கள். யாரையும் யாருக்கும் நீங்கள் சிபாரிசு செய்ய வேண்டாம். வியாபாரத்தில் இழப்புகள் ஏற்படும். உத்யோகத்தில் மேலதிகாரியுடன் அளவாகப் பழகுங்கள். அதிஷ்ட எண்: 1 அதிஷ்ட நிறங்கள்: மஞ்சள், பிங்க்
ராசி குணங்கள் ரிஷபம்
கணவன்-மனைவிக்குள் அனுசரித்துப் போவது நல்லது. யாரையும் தாக்கிப் பேச வேண்ட்£ம். சகோதர வகையில் ஆரோக்யமான விவாதங்கள் வரும். அரசாங்க விஷயம் தாமதமாகி முடியும். வியாபாரத்தில் பாக்கிகளை போராடி வசூலிப்பீர்கள். உத்யோகத்தில் மறைமுக தொந்தரவுகள் வந்து நீங்கும். அதிஷ்ட எண்: 7 அதிஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, ப்ரவுன்
ராசி குணங்கள் மிதுனம்
எதிர்பார்ப்புகள் நிறைவேறும். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். ஆன்மிகப் பெரியோரின் ஆசி கிட்டும். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். பழைய சிக்கலில் ஒன்று தீரும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்கள் விரும்பி வருவார்கள். உத்யோகத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். அதிஷ்ட எண்: 9 அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, பச்சை
ராசி குணங்கள் கடகம்
உங்கள் போக்கில் கொஞ்சம் மாற்றம் செய்வீர்கள். உறவினர், நண்பர்களால் அனுகூலம் உண்டு. பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். உங்களை தவறாக நினைத்துக் கொண்டிருந்தவர்கள் சிலரின் மனசு மாறும். வியாபாரத்தில் வேலையாட்கள் மதிப்பார்கள். உத்யோகத்தில் உங்களின் நிர்வாகத்திறமை வெளிப்படும். அதிஷ்ட எண்: 5 அதிஷ்ட நிறங்கள்: மெரூண், ப்ரவுன்
ராசி குணங்கள் சிம்மம்
குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். எதிர்பார்த்த வகையில் பணம் வரும். நவீன மின்னணு சாதனங்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் சூட்சுமங்களை உணருவீர்கள். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். அதிஷ்ட எண்: 8 அதிஷ்ட நிறங்கள்: மெரூண், ஆரஞ்சு
ராசி குணங்கள் கன்னி
சந்திராஷ்டமம் நீடிப்பதால் சாதாரணமாகப் பேசப் போய் சண்டையில் முடியும். பிள்ளைகள் பிடிவாதமாக இருப்பார்கள். நெருங்கியவரிடம் உங்களின் மனக்குறைகளை சொல்லி ஆதங்கப்படுவீர்கள். வாகனத்தை எடுக்கும் முன் எரிபொருள் இருக்கிறதா என பார்த்துக் கொள்ளுங்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த பணம் தாமதமாக வரும். உத்யோகத்தில் அதிகாரிகளிடம் அதிக உரிமை எடுத்துக் கொள்ளாதீர்கள். அதிஷ்ட எண்: 6 அதிஷ்ட நிறங்கள்: கிரே, மஞ்சள்
ராசி குணங்கள் துலாம்
சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். பிள்ளைகளின் பெருமைகளை மற்றவர்களிடம் சொல்லி மகிழ்வீர்கள். வாகனத்தை சீர் செய்வீர்கள். தாயாரின் உடல் நிலை சீராகும். வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்யோகத்தில் புது சலுகைகள் கிடைக்கும். அதிஷ்ட எண்: 4 அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, ஊதா
ராசி குணங்கள் விருச்சிகம்
குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்க்ள. சொந்த-பந்தங்களில் சிலர் கேட்ட உதவியை செய்வீர்கள். வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்யோகத்தில் அதிகாரிகள் மத்தியில் உங்களைப் பற்றி நல்ல இமேஜ் உண்டாகும். அதிஷ்ட எண்: 3 அதிஷ்ட நிறங்கள்: மஞ்சள், கருநீலம்
ராசி குணங்கள் தனுசு
புதிய திட்டங்கள் நிறைவேறும். பிள்ளைகளின் உயர்கல்வி, உத்யோகம் குறித்து யோசிப்பீர்கள். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். வேற்றுமதத்தவர் உதவுவார். வியாபாரத்தில் கூடுதல் லாபம் வரும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் உங்கள் வேலைகளைப் பகிர்ந்துக் கொள்வார்கள். அதிஷ்ட எண்: 1 அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், கிரே
ராசி குணங்கள் மகரம்
எதிர்பார்த்தவைகளில் சில தள்ளிப் போனாலும், எதிர்பாராத ஒரு வேலை முடியும். தாய்வழி உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். பயணங்களால் ஆதாயமடைவீர்கள். வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் லாபமடைவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களால் நிம்மதி கிட்டும். அதிஷ்ட எண்: 2 அதிஷ்ட நிறங்கள்: வெள்ளை, மஞ்சள்
ராசி குணங்கள் கும்பம்
சவால்கள், விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். சொத்துப் பிரச்னைக்கு சுமூக தீர்வு கிடைக்கும். அரசால் அனுகூலம் உண்டு. வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்யோகத்தில் உங்கள் கருத்திற்கு ஆதரவுப் பெருகும். அதிஷ்ட எண்: 4 அதிஷ்ட நிறங்கள்: ஊதா, இளஞ்சிவப்பு
ராசி குணங்கள் மீனம்
கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். வர வேண்டிய பணம் கைக்கு வரும். விலகிச் சென்ற உறவினர்கள் வலிய வந்துப் பேசுவார்கள். அழகு, இளமைக் கூடும். புது ஏஜென்சி எடுப்பீர்கள். வியாபாரத்தில் பற்று வரவு கணிசமாக உயரும். உத்யோகத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். அதிஷ்ட எண்: 6 அதிஷ்ட நிறங்கள்: மயில் நீலம், ப்ரவுன்