இன்றைய ராசிபலன் 16/12/2015

இன்றைய ராசிபலன் 16/12/2015
astrology
மேஷம்
திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக முடிப்பீர்கள். உறவினர்கள், நண்பர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். புது வேலை அமையும். நெருங்கியவர்களை சந்தித்து எதிர்காலம் குறித்து ஆலோசிப்பீர்கள். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். அதிஷ்ட எண்: 9 அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், மஞ்சள்
 
 
ராசி குணங்கள்
ரிஷபம்
கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். நேர்மறை எண்ணங்கள் தோன்றும். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கிகாரம் கிடைக்கும். அதிஷ்ட எண்: 7 அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், ப்ரவுன்
 
 
ராசி குணங்கள்
மிதுனம்
மதியம் 1 மணி வரை சந்திராஷ்டமம் நீடிப்பதால் ஒரு விஷயத்தை நினைத்து அதிகளவில் குழப்பம் அடைவீர்கள். பிள்ளைகளிடம் எதிர்மறையாக பேசாதீர்கள். சந்தேகப் புத்தியால் நல்லவர்களை இழக்க வேண்டி வரும். வியாபாரத்தில் பழைய சரக்குகளை போராடி விற்பீர்கள். உத்யோகத்தில் மறைமுக விமர்சனங்கள் உண்டு. அதிஷ்ட எண்: 4 அதிஷ்ட நிறங்கள்: வைலெட், இளஞ்சிவப்பு
 
 
ராசி குணங்கள்
கடகம்
பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக் கொள்வார்கள். ஆடை, ஆபரணம் சேரும். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். மனைவி வழியில் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். மதியம் 1 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் எதிலும் கவனமுடன் செயல்பட வேண்டும். அதிஷ்ட எண்: 2 அதிஷ்ட நிறங்கள்: க்ரீம் வெள்ளை, ப்ரவுன்
 
 
ராசி குணங்கள்
சிம்மம்
குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். நீண்ட நாட்களாக பார்க்க நினைத்தவரை சந்தித்து மகிழ்வீர்கள். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்யோகத்தில் உங்களின் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். அதிஷ்ட எண்: 5 அதிஷ்ட நிறங்கள்: மஞ்சள், பிங்க்
 
 
ராசி குணங்கள்
கன்னி
குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். ஆடம்பரச் செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். நட்பு வட்டம் விரியும். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். அதிஷ்ட எண்: 3 அதிஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, ப்ரவுன்
 
 
ராசி குணங்கள்
துலாம்
எதிர்பார்ப்புகள் தடையின்றி முடியும். அரசு அதிகாரிகளின் உதவியால் சில காரியங்களை முடிப்பீர்கள். தாய்வழி உறவினர்களால் அலைச்சல் ஏற்படும். யோகா, தியானம் என மனம் செல்லும். வியாபாரத்தில் புது பங்குதாரரை சேர்ப்பீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களால் நிம்மதி கிட்டும். அதிஷ்ட எண்: 1 அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, பச்சை
 
 
ராசி குணங்கள்
விருச்சிகம்
குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளைப் புரிந்துக் கொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றிக் கொள்வீர்கள். அரசால் ஆதாயம் உண்டு. சொத்துப் பிரச்சனையில் நல்ல தீர்வு கிடைக்கும். வியாபாரத்தில் சில மாற்றம் செய்வீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரிகள் உங்கள் கோரிக்கையை ஏற்பர். அதிஷ்ட எண்: 6 அதிஷ்ட நிறங்கள்: மெரூண், ப்ரவுன்
 
 
ராசி குணங்கள்
தனுசு
இங்கிதமாகப் பேசி கடினமான காரியங்களையும் சாதிப்பீர்கள். பிள்ளைகளால் மதிப்புக் கூடும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரம் சூடுபிடிக்கும். உத்யோகத்தில் சூட்சுமங்களை உணர்வீர்கள். அதிஷ்ட எண்: 9 அதிஷ்ட நிறங்கள்: மெரூண், ஆரஞ்சு
 
 
ராசி குணங்கள்
மகரம்
மதியம் 1 மணி வரை ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் மனதில் இனம்புரியாத பயம் வந்துப் போகும். குடும்பத்தினர் சிலர் உங்களைப் புரிந்துக் கொள்ளாமல் நடந்துக் கொள்வார்கள். நன்றி மறந்த ஒருவரை நினைத்து வருத்தமடைவீர்கள். வியாபாரத்தில் லாபம் மந்தமாக இருக்கும். உத்யோகத்தில் வளைந்து கொடுத்துப் போவது நல்லது. அதிஷ்ட எண்: 8 அதிஷ்ட நிறங்கள்: கிரே, மஞ்சள்
 
 
ராசி குணங்கள்
கும்பம்
கணவன்-மனைவிக்குள் அனுசரித்துப் போவது நல்லது. சகோதர வகையில் மனவருத்தம் வரும். பணப்பற்றாக்குறையால் பிறரிடம் கைமாற்றாக வாங்க வேண்டி வரும். திடீர் பயணங்கள் உண்டு. வியாபாரத்தில் புது முதலீடு செய்யலாம். உத்யோகத்தில் மேலதிகாரியுடன் விவாதம் வேண்டாம். மதியம் 1 மணி முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் எதிலும் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். அதிஷ்ட எண்: 5 அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, ஊதா
 
 
ராசி குணங்கள்
மீனம்
தன்னம்பிக்கையுடன் பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். பெற்றோர் ஒத்துழைப்பார்கள். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்யாகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். அதிஷ்ட எண்: 2 அதிஷ்ட நிறங்கள்: மஞ்சள், கருநீலம்

English Summary: Today Astrology 16/12/2015

Leave a Reply