மேஷம்
எதிர்பார்ப்புகள் நிறைவேறும். பிள்ளைகளால் மதிப்புக் கூடும். பிரபலங்கள் உதவுவார்கள். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பால் தேங்கிக் கிடந்த பணிகளை முடிப்பீர்கள். அதிஷ்ட எண்:4 அதிஷ்ட நிறங்கள்:ஆரஞ்சு, பச்சை
ராசி குணங்கள்
ரிஷபம்
கடந்த இரண்டு நாட்களாக இருந்த மனப்போராட்டங்கள் ஓயும். குடும்பத்தில் அமைதி திரும்பும். எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். பாதியில் நின்ற வேலைகள் முடிவடையும். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். உத்யோகத்தில் புதிய சலுகைகள் கிடைக்கும். அதிஷ்ட எண்:7 அதிஷ்ட நிறங்கள்:மெரூண், ப்ரவுன்
ராசி குணங்கள்
மிதுனம்
சந்திராஷ்டமம் தொடர்வதால் அவசர முடிவுகள் எடுக்காமல் இருப்பது நல்லது. சிக்கலான, சவாலான காரியங்களையெல்லாம் கையில் எடுத்துக் கொண்டிருக்காதீர்கள். அடுத்தவர்களை குறைக் கூறுவதை நிறுத்துங்கள். மறதியால் விலை உயர்ந்தப் பொருட்களை இழக்க நேரிடும். வியாபாரத்தில் ரகசியங்கள் கசியாமல் பார்த்துக் கொள்ளுங்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களை பகைத்துக் கொள்ளாதீர்கள். அதிஷ்ட எண்:2 அதிஷ்ட நிறங்கள்:மெரூண், ஆரஞ்சு
ராசி குணங்கள்
கடகம்
தன் பலம் பலவீனத்தை உணருவீர்கள். சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். கல்யாணப் பேச்சு வார்த்தை சுமூகமாக முடியும். மனைவிவழியில் நல்ல செய்தி உண்டு. வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் உங்கள் ஆலோசனையை ஏற்பார்கள். அதிஷ்ட எண்:8 அதிஷ்ட நிறங்கள்:கிரே, மஞ்சள்
ராசி குணங்கள்
சிம்மம்
குடும்பத்தினருடன் மனம் விட்டு பேசி மகிழ்வீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்யோகத்தில் மேலதிகாரி உங்களிடம் புதிய பொறுப்புகளை ஒப்படைப்பார். திடீர் யோகம் கிட்டும் நாள். அதிஷ்ட எண்:4 அதிஷ்ட நிறங்கள்:ஆரஞ்சு, ஊதா
ராசி குணங்கள்
கன்னி
புதிய முயற்சிகள் யாவும் வெற்றியடையும். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். புது நட்பு மலரும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் உங்களின் நிர்வாகத்திறமை வெளிப்படும். அதிஷ்ட எண்:3 அதிஷ்ட நிறங்கள்:மஞ்சள், கருநீலம்
ராசி குணங்கள்
துலாம்
பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். மகளுக்கு நல்ல வரன் அமையும். தாயாருடன் கருத்து மோதல்கள் வந்து நீங்கும். பணப்பற்றாக்குறை நீடித்தாலும் கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் புது பங்குதாரரை சேர்ப்பீர்கள். உத்யோகத்தில் விமர்சனங்களையும் தாண்டி முன்னேறுவீர்கள். அதிஷ்ட எண்:7 அதிஷ்ட நிறங்கள்:ரோஸ், கிரே
ராசி குணங்கள்
விருச்சிகம்
சவால்கள், விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். அரசால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களை தேடுவீர்கள். உத்யோகத்தில் உங்களின் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். அதிஷ்ட எண்:6 அதிஷ்ட நிறங்கள்:வெள்ளை, மஞ்சள்
ராசி குணங்கள்
தனுசு
கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த பிணக்குகள் நீங்கும். தோற்றப் பொலிவுக் கூடும். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். தாழ்வுமனப்பான்மை நீங்கும். வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்யோகத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். அதிஷ்ட எண்:1 அதிஷ்ட நிறங்கள்:ஊதா, இளஞ்சிவப்பு
ராசி குணங்கள்
மகரம்
ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் புதிய முயற்சிகள் தள்ளிப் போய் முடியும். குடும்பத்தில் சலசலப்புகள் வரும். சிலரின் தவறுகளை சுட்டிக் காட்டுவதன் மூலம் சச்சரவுகளில் சிக்குவீர்கள். மற்றவர்களை சார்ந்து இருக்க வேண்டாம். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பின்மையால் லாபம் குறையும். உத்யோகத்தில் அதிகாரிகளுடன் பனிப்போர் வந்து நீங்கும். அதிஷ்ட எண்:5 அதிஷ்ட நிறங்கள்:மயில் நீலம், ப்ரவுன்
ராசி குணங்கள்
கும்பம்
திட்டமிட்ட காரியங்களை அலைந்து முடிக்க வேண்டி வரும். பிள்ளைகளால் டென்ஷன் அதிகரிக்கும். திடீர் பயணங்கள், செலவுகளால் திணறுவீர்கள். கால் வலி, செரிமானக் கோளாறு வந்து நீங்கும். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களுடன் மோதல்கள் வேண்டாமே. அதிஷ்ட எண்:2 அதிஷ்ட நிறங்கள்:சில்வர் கிரே, பச்சை
ராசி குணங்கள்
மீனம்
குடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும். கண்டும் காணாமல் இருந்தவர்கள் வலிய வந்து பேசுவார்கள். நம்பிக்கைக்குறியவர்களை ஆலோசித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். வாகன வசதிப் பெருகும். புதுத் தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி அடையும். உத்யோகத்தில் திருப்திகரமான சூழ்நிலை உருவாகும். அதிஷ்ட எண்:9 அதிஷ்ட நிறங்கள்:பிங்க், க்ரீம் வெள்ளை