இன்றைய ராசிபலன். 17/05/2015

rasipalan
ராசி குணங்கள்
மேஷம்
ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் பல வேலைகளையும் நீங்களே பார்க்க வேண்டி வரும். உறவினர், நண்பர்களில் சிலர் நன்றி மறந்துப் பேசுவார்கள். யாரையும் முழுமையாக நம்ப வேண்டாம். சிறுசிறு அவமானம் வந்து நீங்கும். யாருக்கும் பணம், நகை வாங்கித் தருவதில் ஈடுபட வேண்டாம். வியாபாரத்தில் வேலையாட்கள் அதிருப்தி அடைவார்கள். உத்யோகத்தில் அவசர முடிவுகள் எடுக்க வேண்டாம். அதிஷ்ட எண்:9 அதிஷ்ட நிறங்கள்:மயில்நீலம்,பிங்க்
 
 
ராசி குணங்கள்
ரிஷபம்
குடும்பத்தைப் பற்றிய கவலைகள் வந்து நீங்கும். செலவுகள் கட்டுக்கடங்காமல் போகும். சாலைகளை கவனமாக கடந்துச் செல்லுங்கள். அரசு விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம். வியாபாரத்தில் போராடி லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களால் சங்கடங்கள் வரும். அதிஷ்ட எண்:8 அதிஷ்ட நிறங்கள்:ஆலிவ்பச்சை,ரோஸ்
 
 
ராசி குணங்கள்
மிதுனம்
குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். பழைய பிரச்னைகளை தீர்ப்பீர்கள். வீட்டை அழகுப்படுத்துவீர்கள். பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள். அதிஷ்ட எண்:1 அதிஷ்ட நிறங்கள்:இளஞ்சிவப்பு,க்ரீம்வெள்ளை
 
 
ராசி குணங்கள்
கடகம்
கடந்த கால சுகமான அனுபவங்களை, சாதனைகளை அவ்வப்போது நினைத்து மகிழ்வீர்கள். உடன்பிறந்தவர்கள் பாசமழைப் பொழிவார்கள். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்யோகத்தில் மூத்த அதிகாரிகள் முக்கிய அறிவுரைகள் தருவார்கள். அதிஷ்ட எண்:5 அதிஷ்ட நிறங்கள்:அடர்சிவப்பு,கிரே
 
 
ராசி குணங்கள்
சிம்மம்
உணர்ச்சிப்பூர்வமாகப் பேசுவதை விட்டு அறிவுப் பூர்வமாகப் பேசுவீர்கள், செயல்படுவீர்கள். திடீர் முடிவுகள் எடுப்பீர்கள். பிள்ளைகளால் மதிப்புக் கூடும். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். அலுவலகத்தில் அமைதி நிலவும். அதிஷ்ட எண்:3 அதிஷ்ட நிறங்கள்:ரோஸ்,வைலெட்
 
 
ராசி குணங்கள்
கன்னி
சந்திராஷ்டமம் தொடர்வதால் வேலைச்சுமையால் உடல் அசதி, மனச்சோர்வு வந்து நீங்கும். பிள்ளைகளிடம் எதிர்மறையாகப் பேச வேண்டாம். சில விஷயங்களுக்கு அனுபவ அறிவை பயன்படுத்துவது நல்லது. பணப்பற்றாக்குறையால் பிறரிடம் கைமாற்றாக வாங்க வேண்டி வரும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை கடிந்துக் கொள்ளாதீர்கள். உத்யோகத்தில் யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள். அதிஷ்ட எண்:7 அதிஷ்ட நிறங்கள்:ஆரஞ்சு,ஊதா
 
 
ராசி குணங்கள்
துலாம்
உற்சாகமாக எதையும் முன்னின்று செய்வீர்கள். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். மனைவிவழியில் ஆதரவுப் பெருகும். வாகனத்தை சரி செய்வீர்கள். தாயாரின் உடல் நிலை சீராகும். வியாபாரத்தில் வேலையாட்கள் மதிப்பார்கள். உத்யோகத்தில் உங்களின் நிர்வாகத்திறமை வெளிப்படும். அதிஷ்ட எண்:6 அதிஷ்ட நிறங்கள்:இளஞ்சிவப்பு,பிங்க்
 
 
ராசி குணங்கள்
விருச்சிகம்
குடும்பத்தாரின் எண்ணங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். வெளியூரிலிந்து நல்ல செய்தி வரும். சில வேலைகளை விட்டுக் கொடுத்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களை தேடுவீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார். அதிஷ்ட எண்:9 அதிஷ்ட நிறங்கள்:ப்ரவுன்,வெளிர் நீலம்
 
 
ராசி குணங்கள்
தனுசு
புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். பிள்ளைகளால் மகிழ்ச்சியும், உறவினர்களால் ஆதாயமும் உண்டு. நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். புதியவர்கள் நண்பர்களாவார்கள். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்யோகத்தில் புதிய சலுகைகள் கிடைக்கும். அதிஷ்ட எண்:4 அதிஷ்ட நிறங்கள்:கிரே,இளஞ்சிவப்பு
 
 
ராசி குணங்கள்
மகரம்
எதிர்ப்புகள் அடங்கும். தாய்வழி உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். பழைய கடனைப் பற்றி அவ்வப்போது யோசிப்பீர்கள். நவீன சாதனங்கள் வாங்குவீர்கள். பணப்பற்றாக்குறையை சமாளிப்பீர்கள். வியாபாரத்தில் புது பங்குதாரரை சேர்ப்பீர்கள். உத்யோகத்தில் சூட்சுமங்களை உணர்வீர்கள். அதிஷ்ட எண்:2 அதிஷ்ட நிறங்கள்:ப்ரவுன்,கிளிப்பச்சை
 
 
ராசி குணங்கள்
கும்பம்
துணிச்சலாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். பூர்வீக சொத்து பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். அரசால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரி உங்களிடம் புதிய பொறுப்புகளை ஒப்படைப்பார். அதிஷ்ட எண்:5 அதிஷ்ட நிறங்கள்:சில்வர் கிரே,ஊதா
 
 
ராசி குணங்கள்
மீனம்
குடும்பத்தாரின் ஆதரவுப் பெருகும். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். உறவினர்கள் வீடு தேடி வருவார்கள். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் உயரதிகாரி உங்களை முழுமையாக நம்புவார். அதிஷ்ட எண்:3 அதிஷ்ட நிறங்கள்:மஞ்சள்,வெளீர்நீலம்

Leave a Reply