இன்றைய ராசிபலன் 17/10/2015

இன்றைய ராசிபலன் 17/10/2015
astrology
மேஷம்
சந்திராஷ்டமம் நீடிப்பதால் திடீர்திடீரென்று எதையோ இழந்ததைப் போல் இருப்பீர்கள். உறவினர், நண்பர்களின் பேச்சும், செயல்பாடுகளும் உங்களுக்கு பிடிக்காமல் போகும். அநாவசியமாக யாருக்காகவும் எந்த உறுதிமொழியும் தர வேண்டாம். வியாபாரத்தில் வேலையாட்களால் விரயம் வரும். உத்யோகத்தில் அதிகாரிகளுடன் அளவாகப் பழகுங்கள். அதிஷ்ட எண்: 5 அதிஷ்ட நிறங்கள்: மெரூண், ஆரஞ்சு
 
 
ராசி குணங்கள்
ரிஷபம்
பிள்ளைகள் உங்கள் பேச்சிற்கு மதிப்பளிப்பார்கள். மனைவிவழியில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வாகனத்தை சரி செய்வீ£களள். பயணங்களால் பயனடைவீர்கள். வியாபாரத்தில் வே¬லாயட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். உத்யோகத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். அதிஷ்ட எண்: 6 அதிஷ்ட நிறங்கள்: கிரே, மஞ்சள்
 
 
ராசி குணங்கள்
மிதுனம்
குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்றுக் கொள்வார்கள். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்யோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும்படி நடந்துக் கொள்வீர்கள். அதிஷ்ட எண்: 2 அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, ஊதா
 
 
ராசி குணங்கள்
கடகம்
புதிய திட்டங்கள் நிறைவேறும். பழைய சொந்த&பந்தங்கள் தேடி வருவார்கள். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். யோகா, தியானத்தில் மனம் லயிக்கும். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். அதிஷ்ட எண்: 4 அதிஷ்ட நிறங்கள்: மஞ்சள், கருநீலம்
 
 
ராசி குணங்கள்
சிம்மம்
நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். தாய்வழி உறவினர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். சில வேலைகளை விட்டுக் கொடுத்து முடிப்பீர்கள். பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். வியாபாரத்தில் சூட்சுமங்களை உணருவீர்கள். உத்யோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். அதிஷ்ட எண்: 9 அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், கிரே
 
 
ராசி குணங்கள்
கன்னி
குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். சொத்துப் பிரச்னையில் நல்ல தீர்வு கிடைக்கும். திருமணப் பேச்சு வார்த்தைக் கூடி வரும். வாகன வசதிப் பெருகும். உறவினர்கள் முக்கியத்துவம் தருவார்கள். வியாபாரத்தில் சில மாற்றம் செய்வீர்கள். உத்யோகத்தில் உங்கள் கருத்திற்கு ஆதரவுப் பெருகும். அதிஷ்ட எண்: 2 அதிஷ்ட நிறங்கள்: வெள்ளை, மஞ்சள்
 
 
ராசி குணங்கள்
துலாம்
கணவன்&மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். சோர்வு நீங்கி உற்சாகமடைவீர்கள். ஆடை, ஆபரணம் சேரும். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். அதிஷ்ட எண்: 3 அதிஷ்ட நிறங்கள்: ஊதா, இளஞ்சிவப்பு
 
 
ராசி குணங்கள்
விருச்சிகம்
ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் சிக்கலான, சவாலான காரியங்களையெல்லாம் கையில் எடுத்துக் கொண்டிருக்காதீர்கள். சிலர் உங்களை குறைக் கூறினாலும் அதைப் பெரிதாக்க வேண்டாம். பணப்பற்றாக்குறையால் பிறரிடம் கைமாற்றாக வாங்க வேண்டி வரும். வியாபாரத்தில் பழைய சரக்குகளை போராடி விற்பீர்கள். உத்யோகத்தில் மறதியால் பிரச்னைகள் வந்து நீங்கும். அதிஷ்ட எண்: 7 அதிஷ்ட நிறங்கள்: மயில் நீலம், ப்ரவுன்
 
 
ராசி குணங்கள்
தனுசு
எடுத்த வேலைகளை முடிப்பதற்குள் அலைச்சல் அதிகரிக்கும். சகோதர வகையில் பிரச்னைகள் வரும். செலவுகள் கட்டுக்கடங்காமல் போகும். அசதி, சோர்வு வந்து நீங்கும். வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் பெறுவீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரியை அனுசரித்துப் போங்கள். அதிஷ்ட எண்: 5 அதிஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, பச்சை
 
 
ராசி குணங்கள்
மகரம்
குடும்பத்தாரின் ஆதரவுப் பெருகும். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு உயரும். நெடுநாட்களாக நீங்கள் பார்க்க நினைத்த ஒருவர் உங்களை தேடி வருவார். சிலர் சொத்து வாங்குவீர்கள். வியாபாரத்தில் புது தொழில் தொடங்குவீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார். அதிஷ்ட எண்: 1 அதிஷ்ட நிறங்கள்: பிங்க், க்ரீம் வெள்ளை
 
 
ராசி குணங்கள்
கும்பம்
எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உறவினர்கள், நண்பர்கள் உங்களிடம் முக்கிய விஷயங்களை பகிர்ந்துக் கொள்வார்கள். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரிகள் உங்கள் கோரிக்கையை ஏற்பார்கள். அதிஷ்ட எண்: 3 அதிஷ்ட நிறங்கள்: பிஸ்தா பச்சை, மஞ்சள்
 
 
ராசி குணங்கள்
மீனம்
குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். வர வேண்டிய பணம் கைக்கு வரும். உறவினர்கள் உங்களைப் புரிந்துக் கொள்வார்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். பயணங்களால் புத்துணர்ச்சி பெறுவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் மதிப்பார்கள். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். அதிஷ்ட எண்: 6 அதிஷ்ட நிறங்கள்: மெரூண், வெள்ளை

Leave a Reply