இன்றைய ராசிபலன் 18/04/2016
மேஷம்
குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லை குறையும். உறவினர்கள் வீடு தேடி வருவார்கள். வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் மதிக்கப்படுவீர்கள். அதிஷ்ட எண்: 1 அதிஷ்ட நிறங்கள்: வெளிர் மஞ்சள், ப்ரவுன்
ராசி குணங்கள் ரிஷபம்
நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். தாய்வழி உறவினர்களால் வீண் செலவுகள் ஏற்படும். பழைய கடனைப் பற்றி அவ்வப்போது யோசிப்பீர்கள். சகோதரி உதவுவார். வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் லாபமடைவீர்கள். உத்யோகத்தில் அமைதி நிலவும். அதிஷ்ட எண்: 7 அதிஷ்ட நிறங்கள்: ஆலிவ் பச்சை, வெள்ளை
ராசி குணங்கள் மிதுனம்
குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். உறவினர்கள் பாராட்டும்படி நடந்துக் கொள்வீர்கள். அரசால் ஆதாயம் உண்டு. வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் உங்கள் கருத்திற்கு ஆதரவுப் பெருகும். அதிஷ்ட எண்: 9 அதிஷ்ட நிறங்கள்: அடர் சிவப்பு, இளம்மஞ்சள்
ராசி குணங்கள் கடகம்
கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். நீண்ட நாள் பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். அதிஷ்ட எண்: 5 அதிஷ்ட நிறங்கள்: ஊதா, ரோஸ்
ராசி குணங்கள் சிம்மம்
ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் சில வேலைகளை உங்கள் பார்வையிலேயே முடிப்பது நல்லது. யாரையும் நம்பி பொறுப்புகளை ஒப்படைக்காதீர்கள். சின்ன சின்ன பிரச்னைகள் குடும்பத்தில் தலைத்தூக்கும். உங்களைப் பற்றி தவறாக சிலர் பேசினாலும் அதற்காக வருத்தப்படாதீர்கள். வியாபாரத்தில் போட்டிகளால் லாபம் குறையும். உத்யோகத்தில் அதிகாரிகளுடன் அளவாகப் பழகுங்கள். அதிஷ்ட எண்: 8 அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், கிரே
ராசி குணங்கள் கன்னி
கணவன்-மனைவிக்குள் வீண் விவாதங்கள் வந்துப் போகும். விலை உயர்ந்தப் பொருட்களை கவனமாக கையாளுங்கள். எவ்வளவு பணம் வந்தாலும் பற்றாக்குறை நீடிக்கும். திடீர் பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். வியாபாரத்தில் பாக்கிகளை போராடி வசூலிப்பீர்கள். உத்யோகத்தில் வேலைச்சுமையால் சோர்வு வந்து நீங்கும். அதிஷ்ட எண்: 6 அதிஷ்ட நிறங்கள்: க்ரீம் வெள்ளை, ஆரஞ்சு
ராசி குணங்கள் துலாம்
குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். உங்களால் பயனடைந்தவர்கள் இப்போது உங்களுக்கு உதவி செய்வார்கள். விருந்தினர்களின் வருகையால் வீடு களைக்கட்டும். சகோதர வகையில் நன்மை உண்டு. வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். அதிஷ்ட எண்: 4 அதிஷ்ட நிறங்கள்: வெள்ளை, நீலம்
ராசி குணங்கள் விருச்சிகம்
உங்கள் செயலில் வேகம் கூடும். உறவினர், நண்பர்கள் உங்களிடம் முக்கிய விஷயங்களை பகிர்ந்து கொள்வார்கள். உங்களால் மற்றவர்கள் ஆதாயமடைவார்கள். வியாபாரத்தில் அதிரடியான செயல்களால் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் உங்கள் கோரிக்கையை ஏற்பார்கள். அதிஷ்ட எண்: 3 அதிஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, மயில் நீலம்
ராசி குணங்கள் தனுசு
குடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். வர வேண்டிய பணம் கைக்கு வரும். புது நட்பு மலரும். புதிய முடிவுகள் எடுப்பீர்கள். எதிர்பாராத சந்திப்பு நிகழும். வியாபாரத்தில் இழந்ததை மீட்பீர்கள். உத்யோகத்தில் புது வாய்ப்புகள் வரும். அதிஷ்ட எண்: 1 அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், மஞ்சள்
ராசி குணங்கள் மகரம்
சந்திராஷ்டமம் நீடிப்பதால் பல வேலைகளை இழுத்துப் போட்டு பார்க்க வேண்டி வரும். உறவினர்களில் ஒருசிலர் நன்றி மறந்து பேசுவார்கள். அநாவசியமாக யாருக்காகவும் எந்த உறுதிமொழியும் தர வேண்டாம். யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறையும். உத்யோகத்தில் மறதியால் பிரச்னை வந்து நீங்கும். அதிஷ்ட எண்: 2 அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், ப்ரவுன்
ராசி குணங்கள் கும்பம்
பிள்ளைகளால் மகிழ்ச்சியும், உறவினர்களால் ஆதாயமும் உண்டு. விலை உயர்ந்த ஆபரணங்கள் வாங்குவீர்கள். வாகனப் பழுதை சரி செய்வீர்கள். தாயார் ஆதரித்துப் பேசுவர். யோகா, தியானத்தில் மனம் லயிக்கும். வியாபாரத்தில் புது சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள். அதிஷ்ட எண்: 4 அதிஷ்ட நிறங்கள்: வைலெட், இளஞ்சிவப்பு
ராசி குணங்கள் மீனம்
குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும். பிரபலங்கள் ஆதரவாக இருப்பார்கள். நெடுநாட்களாக நீங்கள் பார்க்க நினைத்த ஒருவர் உங்களை தேடி வருவார். வியாபாரத்தில் கமிஷன், ஸ்டேஷனரி வகைகளால் லாபமடைவீர்கள். உத்யோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். அதிஷ்ட எண்: 6 அதிஷ்ட நிறங்கள்: க்ரீம் வெள்ளை, ப்ரவுன்