இன்றைய ராசிபலன்கள் 19/01/2017

இன்றைய ராசிபலன்கள் 19/01/2017

மேஷம்
எதிர்பாராத பணவரவு உண்டு. உறவினர், நண்பர்களால் ஆதாயமடைவீர்கள். மனதிற்கு இதமான செய்தி வரும். பயணங்களால் மகிழ்ச்சி தங்கும். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களை தேடுவீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும் படி நடந்துக் கொள்வீர்கள். அதிஷ்ட எண்: 9 அதிஷ்ட நிறங்கள்: மஞ்சள், பிங்க்
 
 
ராசி குணங்கள்
ரிஷபம்
புதிய திட்டங்கள் நிறைவேறும். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள். நட்பால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் உதவுவார்கள். அதிஷ்ட எண்: 8 அதிஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, ப்ரவுன்
 
 
ராசி குணங்கள்
மிதுனம்
பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். எதிர்பார்த்த தொகை வராவிட்டாலும் எதிர்பாராத வகையில் பணம் வரும். தாய்வழி உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். வாகனத்தை சீர் செய்வீர்கள். தொழிலில் லாபம் அதிகரிக்கும். உத்யோகத்தில் புதிய சலுகைகள் கிடைக்கும். அதிஷ்ட எண்: 1 அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, பச்சை
 
 
ராசி குணங்கள்
கடகம்
குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். உறவினர்கள் மதிப்பார்கள். சொத்து பிரச்னையில் நல்ல தீர்வு கிடைக்கும். வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்யோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். அதிஷ்ட எண்: 5 அதிஷ்ட நிறங்கள்: மெரூண், ப்ரவுன்
 
 
ராசி குணங்கள்
சிம்மம்
சுறுசுறுப்புடன் செயல்பட்டு தேங்கிக் கிடந்த வேலைகளை முடிப்பீர்கள். பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். அழகு, இளமைக் கூடும். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. உத்யோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவுக் கிட்டும். அதிஷ்ட எண்: 3 அதிஷ்ட நிறங்கள்: மெரூண், ஆரஞ்சு
 
 
ராசி குணங்கள்
கன்னி
மாலை 6.15 மணி வரை ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் நினைத்த வேகத்தில் சில வேலைகளை முடிக்க முடியாமல் தடை, தாமதங்கள் ஏற்படும். உறவினர்கள், நண்பர்களுடன் உரிமையுடன் பேசி பெயரை கெடுத்துக் கொள்ளாதீர்கள். முன்கோபத்தால் நல்லவர்களின் நட்பை இழக்க வேண்டி வரும். வியாபாரத்தில் அவசர முடிவுகளை தவிர்க்கவும். உத்யோகத்தில் ஈகோ அதிகரிக்கும். அதிஷ்ட எண்: 7 அதிஷ்ட நிறங்கள்: கிரே, மஞ்சள்
 
 
ராசி குணங்கள்
துலாம்
குடும்பத்தைப் பற்றிய கவலைகள் வந்து நீங்கும். அநாவசியச் செலவுகளை குறைக்கப்பாருங்கள். உறவினர்களால் சங்கடங்கள் வரும். வாகனத்தை எடுக்கும் முன் எரிபொருள் இருக்கிறதா என பார்த்துக் கொள்ளுங்கள். வியாபாரத்தில் ஓரளவு லாபம் வரும். உத்யோகத்தில் சக ஊழியர்களால் பிரச்னைகள் வரக்கூடும். மாலை 6.15 மணி முதல் ராசி’குள் சந்திரன் நுழைவதால் போராடி வெல்வீர்கள். அதிஷ்ட எண்: 6 அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, ஊதா
 
 
ராசி குணங்கள்
விருச்சிகம்
எதிலும் வெற்றி பெறுவீர்கள். பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். மற்றவர்களுக்காக சில செலவுகளை செய்து பெருமைப்படுவீர்கள். பழைய பிரச்னைகளை தீர்ப்பீர்கள். வியாபாரத்தில் வி.ஐ.பிகள் வாடிக்கையாளர்களாவார்கள். உத்யோகத்தில் உங்களின் ஆலோசனை ஏற்கப்படும். அதிஷ்ட எண்: 9 அதிஷ்ட நிறங்கள்: மஞ்சள், கருநீலம்
 
 
ராசி குணங்கள்
தனுசு
உங்களின் அணுகுமுறையை மற்றவர்களின் ரசனைக்கேற்ப மாற்றியமைத்துக் கொள்வீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். பிரபலங்களால் ஆதாயமடைவீர்கள். சொத்து வாங்குவது குறித்து யோசிப்பீர்கள். வியாபாரம் செழிக்கும். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். அதிஷ்ட எண்: 4 அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், கிரே
 
 
ராசி குணங்கள்
மகரம்
உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். பிள்ளைகளால் மகிழ்ச்சி தங்கும். பணவரவு திருப்தி தரும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் எதிர்பாராத தன லாபம் உண்டு. உத்யோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும். அதிஷ்ட எண்: 2 அதிஷ்ட நிறங்கள்: வெள்ளை, மஞ்சள்
 
 
ராசி குணங்கள்
கும்பம்
மாலை 6.15 மணி வரை சந்திராஷ்டமம் நீடிப்பதால் கொஞ்சம் அலைச்சலும், சிறுசிறு ஏமாற்றமும் வந்து நீங்கும். உங்களை நீங்களே குறைத்து மதிப்பிடாதீர்கள். நீங்கள் சிலருக்கு நல்லது சொல்லப் போய் பொல்லாப்பாக முடியும். வியாபாரத்தில் ரகசியங்களை வெளியிட வேண்டாம். உத்யோகத்தில் கூடுதலாக வேலைப் பார்க்க வேண்டி வரும். அதிஷ்ட எண்: 5 அதிஷ்ட நிறங்கள்: ஊதா, இளஞ்சிவப்பு
 
 
ராசி குணங்கள்
மீனம்
குடும்பத்தில் ஆரோக்யமான விவாதங்கள் வந்துப் போகும். நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். மனைவிவழியில் நல்ல செய்தி உண்டு. வாகனத்தை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் புதிய சலுகைகள் கிடைக்கும். மாலை 6.15 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் எதிலும் நிதானத்துடன் செயல்பட வேண்டும். அதிஷ்ட எண்: 3 அதிஷ்ட நிறங்கள்: மயில் நீலம், ப்ரவுன்
 

Leave a Reply