இன்றைய ராசிபலன்கள் 19/02/2017

இன்றைய ராசிபலன்கள் 19/02/2017

 மேஷம்
சந்திராஷ்டமம் தொடர்வதால் சந்தேகப்படுவதை முதலில் நிறுத்துங்கள். குடும்பத்தில் பல விஷயங்களையும் நீங்களே பார்க்க வேண்டி வரும். மற்றவர்களைப் பற்றி வீண் விமர்சனங்களை தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் போட்டிகள் அதிகரிக்கும். உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் தாமதமாக கிடைக்கும். அதிஷ்ட எண்: 4 அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், வைலெட்
 
 
ராசி குணங்கள்
ரிஷபம்
உங்கள் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். கல்யாண பேச்சு வார்த்தை வெற்றியடையும். வியாபாரத்தில் புது சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்யோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். அதிஷ்ட எண்: 7 அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, ஊதா
 
 
ராசி குணங்கள்
மிதுனம்
எதிர்பாராத பணவரவு உண்டு. உறவினர்கள், நண்பர்களால் ஆதாயம் உண்டு. அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்யோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும் படி நடந்துக் கொள்வீர்கள். அதிஷ்ட எண்: 2 அதிஷ்ட நிறங்கள்: இளஞ்சிவப்பு, பிங்க்
 
 
ராசி குணங்கள்
கடகம்
புதிய முயற்சிகள் யாவும் வெற்றியடையும். உறவினர்களில் உண்மையானவர்களை கண்டறிவீர்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். செலவுகளை குறைக்க திட்டமிடுவீர்கள். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். அதிஷ்ட எண்: 8 அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், வெளிர் நீலம்
 
 
ராசி குணங்கள்
சிம்மம்
எதிர்ப்புகள் அடங்கும். பிள்ளைகளால் நிம்மதி அடைவீர்கள். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். தாயாருடன் வீண் விவாதம் வந்துப் போகும். வியாபாரத்தில் பங்குதாரர்கள் ஒத்துழைப்பார்கள். உத்யோகத்தில் சூழ்ச்சிகளை தாண்டி முன்னேறுவீர்கள். அதிஷ்ட எண்: 4 அதிஷ்ட நிறங்கள்: கிரே, இளஞ்சிவப்பு
 
 
ராசி குணங்கள்
கன்னி
குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும். அரசால் ஆதாயம் உண்டு. பிரபலங்களின் நட்பு கிட்டும். உறவினர்கள் பாராட்டும்படி நடந்துக் கொள்வீர்கள். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் உங்களை நம்பி மூத்த அதிகாரி சில பொறுப்புகளை ஒப்படைப்பார். அதிஷ்ட எண்: 3 அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், கிளிப்பச்சை
 
 
ராசி குணங்கள்
துலாம்
கடந்த இரண்டு நாட்களாக கணவன்- மனைவிக்குள் இருந்த பிணக்குகள் நீங்கும். எதிர்பார்த்த உதவிகள் தக்க சமயத்தில் கிடைக்கும். சில வேலைகளை விட்டுக் கொடுத்து முடிப்பீர்கள். நட்பு வட்டம் விரியும். வியாபாரத்தில் புது முதலீடு செய்வீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரி ஒத்துழைப்பார். அதிஷ்ட எண்: 7 அதிஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, ஊதா
 
 
ராசி குணங்கள்
விருச்சிகம்
ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் வேலைச்சுமையால் உடல் அசதி, மனச் சோர்வு வந்து நீங்கும். குடும்பத்தில் சலசலப்புகள் வந்து விலகும். அனுஷம் நட்சத்திரக்காரர்களுக்கு அலைச்சல் அதிகரிக்கும். யாரையும் தூக்கி எறிந்து பேசாதீர்கள். வியாபாரத்தில் புதியவர்களை நம்பி ஏமாற வேண்டாம். உத்யோகத்தில் ஈகோ அதிகரிக்கும். அதிஷ்ட எண்: 6 அதிஷ்ட நிறங்கள்: மஞ்சள், வெளீர்நீலம்
 
 
ராசி குணங்கள்
தனுசு
சில காரியங்களை அலைந்து, திரிந்து முடிக்க வேண்டி வரும். உறவினர்களால் சங்கடங்கள் வரும். நெருங்கியவர்கள் சிலர் உங்களை உதாசீனப்படுத்தி பேசுவார்கள். வியாபாரத்தில் வேலையாட்களை அனுசரித்துப் போங்கள். உத்யோகத்தில் மேலதிகாரியுடன் மோதல்கள் வேண்டாமே. அதிஷ்ட எண்: 1 அதிஷ்ட நிறங்கள்: மிண்ட்கிரே, வைலெட்
 
 
ராசி குணங்கள்
மகரம்
நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். பெற்றோரின் ஆதரவுக் கிட்டும். நெருங்கியவர்களை சந்தித்து எதிர்காலம் குறித்து ஆலோசிப்பீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் முன்வைத்த கோரிக்கைகள் நிறைவேறும். அதிஷ்ட எண்: 5 அதிஷ்ட நிறங்கள்: க்ரீம் வெள்ளை, நீலம்
 
 
ராசி குணங்கள்
கும்பம்
எதையும் சாதிக்கும் தன்னம்பிக்கை வரும். உறவினர்கள், நண்பர்கள் உங்கள் வேலைகளை பகிர்ந்துக் கொள்வார்கள். சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யாகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். அதிஷ்ட எண்: 2 அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, கிரே
 
 
ராசி குணங்கள்
மீனம்
கடந்த இரண்டு நாட்களாக இருந்த சலிப்பு, சோர்வு, கோபம் யாவும் நீங்கும். குடும்பத்தில் நிம்மதி உண்டு. எதிர்பார்ப்புகள் தடையின்றி முடியும். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். அதிஷ்ட எண்: 9 அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், கிளிப் பச்சை

Leave a Reply