இன்றைய ராசிபலன்கள் 21.08.2017
மேஷம்
நீண்ட நாட்களாக தள்ளிப் போன காரியங்கள் இன்று முடியும். வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். தாய்வழி உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்களால் நிம்மதி கிட்டும். அதிஷ்ட எண்: 1 அதிஷ்ட நிறங்கள்: மயில்நீலம், பிங்க்
ராசி குணங்கள் ரிஷபம்
குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளைப் புரிந்துக் கொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றிக் கொள்வீர்கள். புது வாகனம் வாங்குவீர்கள். உறவினர்கள் மதிப்பார்கள். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்களை தீட்டுவீர்கள். உத்யோகத்தில் உங்களின் திறமையைக் கண்டு மேலதிகாரி வியப்பார். அதிஷ்ட எண்: 5 அதிஷ்ட நிறங்கள்: ஆலிவ்பச்சை, ரோஸ்
ராசி குணங்கள் மிதுனம்
கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். முகப்பொலிவுக் கூடும். சில வேலைகளை விட்டுக் கொடுத்து முடிப்பீர்கள். நண்பர்களின் ஆதரவுக் கிட்டும். வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கிகாரம் கிடைக்கும். அதிஷ்ட எண்: 6 அதிஷ்ட நிறங்கள்: இளஞ்சிவப்பு, க்ரீம்வெள்ளை
ராசி குணங்கள் கடகம்
மாலை 5.09 மணி வரை ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் உங்களை அறியாமலேயே தாழ்வு மனப்பான்மை தலைத் தூக்கும். மற்றவர்களுடன் உங்களை ஒப்பிட்டுக் கொண்டிருக்க வேண்டாம். உங்களின் அணுகு முறையை மாற்றுங்கள். வியாபாரத்தில் வேலையாட்களால் விரயம் வரும். உத்யோகத்தில் யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள். அதிஷ்ட எண்: 3 அதிஷ்ட நிறங்கள்: அடர்சிவப்பு, கிரே
ராசி குணங்கள் சிம்மம்
குடும்பத்தில் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. விலை உயர்ந்தப் பொருட்களை கவனமாக கையாளுங்கள்-. உறவினர், நண்பர்களுடன் விரிசல்கள் வரக்கூடும். வியாபாரத்தில் பங்குதாரர்களை அனுசரித்துப் போங்கள். உத்யோகத்தில் மேலதிகாரியால் பிரச்னைகள் வரக்கூடும். மாலை 5.09 மணி முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் போராடி வெல்வீர்கள். அதிஷ்ட எண்: 4 அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், வைலெட்
ராசி குணங்கள் கன்னி
பிரச்னைகளின் ஆணிவேரை கண்டறிவீர்கள். பிள்ளைகளால் சமூக அந்தஸ்து உயரும். அரசால் அனுகூலம் உண்டு. நம்பிக்கைக்குரியவர்கள் கைக்கொடுத்து உதவுவார்கள். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் அதிகாரிகள் முன்வைத்த கோரிக்கைகள் நிறைவேறும். அதிஷ்ட எண்: 8 அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, ஊதா
ராசி குணங்கள் துலாம்
சொன்ன சொல்லை காப்பாற்றுவீர்கள். உடன்பிறந்தவர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். சேமிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். எதிர்பாராத சந்திப்பு நிகழும். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் மதிப்புக் கூடும். அதிஷ்ட எண்: 7 அதிஷ்ட நிறங்கள்: இளஞ்சிவப்பு, பிங்க்
ராசி குணங்கள் விருச்சிகம்
குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். பணவரவு திருப்தி தரும். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். நேர்மறை எண்ணங்கள் பிறக்கும். பழைய சிக்கல்கள் தீரும். வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் தலைமையின் நம்பிக்கையை பெறுவீர்கள். அதிஷ்ட எண்: 2 அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், வெளிர் நீலம்
ராசி குணங்கள் தனுசு
மாலை 5.09 மணி வரை சந்திராஷ்டமம் தொடர்வதால் பல வேலைகளையும் இழுத்துப் போட்டு பார்க்க வேண்டி வரும். பண விஷயத்தில் கறாராக இருங்கள். சிலர் உங்களை தாழ்த்திப் பேசினாலும் கலங்காதீர்கள். எதிர்பார்த்த உதவிகள் தாமதமாகும். வியாபாரத்தில் பழைய சரக்குகளை போராடி விற்பீர்கள். உத்யோகத்தில் மற்றவர்களை விமர்சிக்க வேண்டாம். அதிஷ்ட எண்: 6 அதிஷ்ட நிறங்கள்: கிரே, இளஞ்சிவப்பு
ராசி குணங்கள் மகரம்
சாதுர்யமாகப் பேசுவீர்கள். பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக் கொள்வார்கள். மனைவிவழியில் ஆதாயம் உண்டு. வாகனத்தை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் வி. ஐ. பிகள் வாடிக்கையாளர்களாவார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் உதவுவார்கள். மாலை 5.09 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் எதிலும் நிதானத்துடன் செயல்பட வேண்டும். அதிஷ்ட எண்: 9 அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், கிளிப்பச்சை
ராசி குணங்கள் கும்பம்
பணப்புழக்கம் அதிகரிக்கும். உங்களிடம் பழகும் நண்பர்கள், உறவினர்களின் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். சிலர் வீடு, மனை வாங்குவீர்கள். மற்றவர்களுக்காக சில உதவிகள் செய்வீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். உத்யோகத்தில் பாராட்டப்படுவீர்கள். அதிஷ்ட எண்: 4 அதிஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, ஊதா
ராசி குணங்கள் மீனம்
குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவுப் பெருகும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். உறவினர்களின் அன்புத் தொல்லை குறையும். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். அதிஷ்ட எண்: 8 அதிஷ்ட நிறங்கள்: மஞ்சள், வெளீர்நீலம்
முகப்பு | நாங்கள் | உங்கள் கருத்து | விளம்பரத்திற்கு | நண்பருக்கு அனுப்ப | உரிமை கைதுறப்பு
Copyright © 2009 Webdunia.com