இன்றைய ராசிபலன். 234/03/2015

astrologyமேஷம்
மதியம் 1 மணி வரை ராசிக்குள் சந்திரன் இருப்பதால் பழைய கசப்பான சம்பவங்களைப் பற்றி விவாதிக்க வேண்டாம். பணப்பற்றாக்குறையால் வெளியில் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். வியாபாரத்தில் பழைய சரக்குகளை போராடி விற்பீர்கள். உத்யோகத்தில் விமர்சனங்களை ஏற்றுக் கொள்வது நல்லது. மாலைப் பொழுதிலிருந்து தடைப்பட்ட வேலைகள் முடியும். அதிஷ்ட எண்: 4 அதிஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, ஊதா
 
 
ராசி குணங்கள்
ரிஷபம்
கணவன்-மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். விலை உயர்ந்தப் பொருட்களை கவனமாக கையாளுங்கள். சிலர் உதவுவதைப் போல் உபத்திரவம் தருவார்கள். யாரையும் யாருக்கும் சிபாரி செய்ய வேண்டாம். வியாபாரம் சுமாராக இருக்கும். உத்யோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் வந்துச் செல்லும். மதியம் 1 மணி முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் எதிலும் எச்சரிக்கையுடன் செயல்படப்பாருங்கள். அதிஷ்ட எண்: 2 அதிஷ்ட நிறங்கள்: மஞ்சள், வெளீர்நீலம்
 
 
ராசி குணங்கள்
மிதுனம்
உங்களின் இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். அனுபவப் பூர்வமாகப் பேசி எல்லோரையும் கவருவீர்கள். பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு உயரும். வியாபாரத்தில் வி.ஐ.பிகளும் வாடிக்கையாளர்களாக அறிமுகமாவார்கள். உத்யோகத்தில் எல்லோரும் பாராட்டும்படி நடந்துக் கொள்வீர்கள். அதிஷ்ட எண்: 1 அதிஷ்ட நிறங்கள்: மிண்ட்கிரே, வைலெட்
 
 
ராசி குணங்கள்
கடகம்
சொன்ன சொல்லை காப்பாற்றுவீர்கள். உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். திடீரென்று அறிமுகமாகுபவரால் பலனடைவீர்கள். பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் மத்தியில் உங்கள் கருத்திற்கு ஆதரவுப் பெருகும். அதிஷ்ட எண்: 7 அதிஷ்ட நிறங்கள்: க்ரீம் வெள்ளை, நீலம்
 
 
ராசி குணங்கள்
சிம்மம்
பிரச்னைகளின் ஆனிவேரைக் கண்டறிந்து சாதுர்யமாக தீர்ப்பீர்கள். பிள்ளைகள் பொறுப்பாக நடந்துக் கொள்வார்கள். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபார ரீதியாக சில முக்கியஸ்தர்களை சந்திப்பீர்கள். உத்யோகத்தில் புதிய பொறுப்புகள் தேடி வரும். அதிஷ்ட எண்: 8 அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, கிரே
 
 
ராசி குணங்கள்
கன்னி
மதியம் 1 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் உணர்ச்சிவசப்படாமல் அறிவுப்பூர்வமாக முடிவெடுக்கப்பாருங்கள். சகோதர வகையில் அலைச்சல் இருக்கும். திட்டமிடாத செலவுகளும், பயணங்களும் குறுக்கிட்டாலும் சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்யோகத்தில் சில சூட்சுங்களைக் கற்றுக் கொள்வீர்கள். மாலையிலிருந்து எதிர்ப்புகள் அடங்கும். அதிஷ்ட எண்: 5 அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், கிளிப் பச்சை
 
 
ராசி குணங்கள்
துலாம்
குடும்பத்தில் ஆரோக்யமான விவாதங்கள் வந்துப் போகும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். மனைவிவழியில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வாகனப் பழுதை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். உத்யோகத்தில் உயரதிகாரிகள் மதிப்பார்கள். மதியம் 1 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் எதிலும் நிதானித்து செயல்படப்பாருங்கள். அதிஷ்ட எண்: 3 அதிஷ்ட நிறங்கள்: வெளிர் மஞ்சள், ப்ரவுன்
 
 
ராசி குணங்கள்
விருச்சிகம்
சாமர்த்தியமாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். பிள்ளைகளின் பெருமைகளை மற்றவர்களிடம் சொல்லி மகிழ்வீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். புது ஏஜென்சி எடுப்பீர்கள். வியாபாரத்தில் இரட்டிப்பு லாபம் உண்டு. உத்யோகத்தில் அதிகாரிகள் அதிசயிக்கும்படி நடந்துக் கொள்வீர்கள். அதிஷ்ட எண்: 6 அதிஷ்ட நிறங்கள்: ஆலிவ் பச்சை, வெள்ளை
 
 
ராசி குணங்கள்
தனுசு
மற்றவர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்கக் கூடாது என்று முடிவெடுப்பீர்கள். உறவினர்களில் உண்மையானவர்களை கண்டறிவீர்கள். நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் உதவுவார்கள். உத்யோகத்தில் புது வாய்ப்புகள் வரும். அதிஷ்ட எண்: 9 அதிஷ்ட நிறங்கள்: அடர் சிவப்பு, இளம்மஞ்சள்
 
 
ராசி குணங்கள்
மகரம்
கடந்த கால சுகமான அனுபவங்களை நினைவுக்கூர்ந்து மகிழ்வீர்கள். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். புது வேலை அமையும். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். அதிஷ்ட எண்: 6 அதிஷ்ட நிறங்கள்: ஊதா, ரோஸ்
 
 
ராசி குணங்கள்
கும்பம்
குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். உறவினர்கள் வீடு தேடி வருவார்கள். வீட்டை விரிவுப்படுத்தி கட்டுவது குறித்து யோசிப்பீர்கள். புது பொறுப்புகளுக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு பாராட்டுக் கிடைக்கும். அதிஷ்ட எண்: 7 அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், கிரே
 
 
ராசி குணங்கள்
மீனம்
இங்கிதமாகப் பேசி கடினமான காரியங்களையும் சாதிப்பீர்கள். பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். கண்டும் காணாமல் சென்றுக் கொண்டிருந்தவர்கள் வலிய வந்துப் பேசுவார்கள். வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். அதிஷ்ட எண்: 1 அதிஷ்ட நிறங்கள்: க்ரீம் வெள்ளை, ஆரஞ்சு

Leave a Reply