மேஷம்
மதியம் 1.30 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் உணர்ச்சிவசப்படாமல் அறிவுப்பூர்வமாக முடிவெடுக்கப்பாருங்கள். சகோதர வகையில் அன்புத்தொல்லைகள் வந்துப் போகும். வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி ஓரளவு லாபம் வரும். உத்தியோகத்தில் பணிகளை போராடி முடிப்பீர்கள். மாலையிலிருந்து மகிழ்ச்சி தொடங்கும். அதிர்ஷ்ட எண்:4 அதிர்ஷ்ட நிறங்கள்:வெள்ளை, நீலம்
ராசி குணங்கள்
ரிஷபம்
குடும்பத்தில் ஆரோக்யமான விவாதங்கள் வந்துப் போகும். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். எதிர்பாராத இடத்திலிருந்த உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் வரும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். மதியம் 1.30 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் எதிலும் எச்சரிக்கையுடன் செயல்படப்பாருங்கள். அதிர்ஷ்ட எண்:2 அதிர்ஷ்ட நிறங்கள்:சில்வர் கிரே, மயில் நீலம்
ராசி குணங்கள்
மிதுனம்
கனிவாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். பிள்ளைகளால் மதிப்புக் கூடும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள். அதிர்ஷ்ட எண்:1 அதிர்ஷ்ட நிறங்கள்:ப்ரவுன், மஞ்சள்
ராசி குணங்கள்
கடகம்
மற்றவர்களை நம்பி எந்த வேலைகளையும் ஒப்படைக்கக் கூடாது என்று முடிவெடுப்பீர்கள். நட்பு வழியில் நல்ல செய்தி கேட்பீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவுப் பெருகும். வியாபாரத்தில் வேலையாட்கள் மதிப்பார்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். அதிர்ஷ்ட எண்:7 அதிர்ஷ்ட நிறங்கள்:ரோஸ், ப்ரவுன்
ராசி குணங்கள்
சிம்மம்
எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். பழைய கடனைப் பற்றி அவ்வப்போது யோசிப்பீர்கள். யோகா, தியானத்தில் மனம் லயிக்கும். பணப்பற்றாக்குறையை சமாளிப்பீர்கள். வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்துக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் நிம்மதி உண்டு. அதிர்ஷ்ட எண்:8 அதிர்ஷ்ட நிறங்கள்:வைலெட், இளஞ்சிவப்பு
ராசி குணங்கள்
கன்னி
குடும்பத்தாரின் எண்ணங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். அரசால் ஆதாயம் உண்டு. உறவினர், நண்பர்கள் உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். பேச்சில் கம்பீரம் பிறக்கும். வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களை தேடுவீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். அதிர்ஷ்ட எண்:5 அதிர்ஷ்ட நிறங்கள்:க்ரீம் வெள்ளை, ப்ரவுன்
ராசி குணங்கள்
துலாம்
இங்கிதமாகப் பேசி கடினமான காரியங்களையும் சாதிப்பீர்கள். பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். அதிர்ஷ்ட எண்:3 அதிர்ஷ்ட நிறங்கள்:மஞ்சள், பிங்க்
ராசி குணங்கள்
விருச்சிகம்
மதியம் 1.30 மணி வரை ராசிக்குள் சந்திரன் இருப்பதால் கடந்த காலத்தை நினைத்து அவ்வப்போது கொஞ்சம் டென்ஷனாவீர்கள். நல்ல வாய்ப்புகளையெல்லாம் பயன்படுத்தாமல் விட்டுவிட்டோமே என்றெல்லாம் வருத்தப்படுவீர்கள். சில வேலைகளை இரண்டு, மூன்று முறை போராடி முடிக்க வேண்டி வரும். வியாபாரத்தில் லாபம் மந்தமாக இருக்கும். உத்தியோகத்தில் ஓரளவு வேலைச்சுமை குறையும். அதிர்ஷ்ட எண்:6 அதிர்ஷ்ட நிறங்கள்:சில்வர் கிரே, ப்ரவுன்
ராசி குணங்கள்
தனுசு
கணவன்-மனைவிக்குள் அனுசரித்துப் போவது நல்லது. யாரையும் பகைத்துக் கொள்ள வேண்டாம். விலை உயர்ந்தப் பொருட்களை கவனமாக கையாளுங்கள். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்தியோகத்தில் பொறுப்புகள் கூடும். மதியம் 1.30 மணி முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் எதிலும் நிதானித்து செயல்படப்பாருங்கள். அதிர்ஷ்ட எண்:9 அதிர்ஷ்ட நிறங்கள்:ஆரஞ்சு, பச்சை
ராசி குணங்கள்
மகரம்
உங்களின் இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். சொந்த-பந்தங்களின் சுயரூபம் தெரிந்து செயல்படத் தொடங்குவீர்கள். பயணங்களால் மகிழ்ச்சி தங்கும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். வியாபாரம் செழிக்கும். உத்தியோகத்தில் மரியாதைக் கூடும். அதிர்ஷ்ட எண்:6 அதிர்ஷ்ட நிறங்கள்:மெரூண், ப்ரவுன்
ராசி குணங்கள்
கும்பம்
திடீர் முடிவுகள் எடுப்பீர்கள். சகோதரங்களின் அரவணைப்பு அதிகரிக்கும். செலவுகளை குறைக்க திட்டமிடுவீர்கள். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். புதுத் தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி அடையும். உத்தியோகத்தில் சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். அதிர்ஷ்ட எண்:7 அதிர்ஷ்ட நிறங்கள்:மெரூண், ஆரஞ்சு
ராசி குணங்கள்
மீனம்
உங்களின் அணுகுமுறையை மற்றவர்களின் ரசனைக்கேற்ப மாற்றியமைத்துக் கொள்வீர்கள். பிள்ளைகள் பொறுப்புணர்ந்து செயல்படுவார்கள். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். பிரபலங்கள் உதவுவார்கள். வியாபாரம் செழிக்கும். உத்தியோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கிகாரம் கிடைக்கும். அதிர்ஷ்ட எண்:1 அதிர்ஷ்ட நிறங்கள்:கிரே, மஞ்சள்