இன்றைய ராசிபலன் 28/07/2015

astrologyமேஷம்
மதியம் 12.30 மணி வரை சந்திராஷ்டமம் நீடிப்பதால் பழைய பிரச்னைகளுக்கு சுமூக தீர்வு காண்பது நல்லது. வெளிவட்டாரத்தில் பெரிய பொறுப்புகளை உங்களை நம்பி ஒப்படைப்பார்கள். திட்டமிடாத செலவுகளை போராடி சமாளிப்பீர்கள். வியாபாரத்தில் லாபம் சுமாராக இருக்கும். உத்யோகத்தில் சில சூட்சுமங்களைக் கற்றுக் கொள்வீர்கள். மாலைப் பொழுதிலிருந்து தடைப்பட்ட வேலைகள் முடியும். அதிஷ்ட எண்: 2 அதிஷ்ட நிறங்கள்: மஞ்சள், பிங்க்
 
 
ராசி குணங்கள்
ரிஷபம்
குடும்பத்தில் ஆரோக்யமான விவாதங்கள் வந்துப் போகும். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். வியாபாரத்தில் லாபம் வரும். உத்யோகத்தில் உயரதிகாரி ஒத்துழைப்பார். மதியம் 12.30 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் எதிலும் பொறுமையுடன் செயல்படப்பாருங்கள். அதிஷ்ட எண்: 6 அதிஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, ப்ரவுன்
 
 
ராசி குணங்கள்
மிதுனம்
சாமர்த்தியமாகப் பேசி சாதிப்பீர்கள். பிள்ளைகளின் பெருமைகளை மற்றவர்களிடம் சொல்லி மகிழ்வீர்கள். பயணங்களால் புத்துணர்ச்சி பெறுவீர்கள். உங்களால் மற்றவர்கள் பயனடைவார்கள். வியாபாரத்தில் இரட்டிப்பு லாபம் உண்டு. உத்யோகத்தில் அதிகாரிகள் புது பொறுப்பை ஒப்படைப்பார்கள். அதிஷ்ட எண்: 4 அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, பச்சை
 
 
ராசி குணங்கள்
கடகம்
புதிய திட்டங்கள் நிறைவேறும். உங்களுடைய கருத்துகள் எல்லோரும் ஏற்கும்படி இருக்கும். பழைய கடன் பிரச்னையில் ஒன்று தீரும். நட்பால் ஆதாயமடைவீர்கள். வியாபாரத்தில் அதிரடியான செயல்களால் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். அதிஷ்ட எண்: 7 அதிஷ்ட நிறங்கள்: மெரூண், ப்ரவுன்
 
 
ராசி குணங்கள்
சிம்மம்
எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். வெளியூர் பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டாகும். விருந்தினர்களின் வருகை உண்டு. புது வேலைக்கு முயற்சி செய்வீர்கள். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவுக் கிடைக்கும். அதிஷ்ட எண்: 9 அதிஷ்ட நிறங்கள்: மெரூண், ஆரஞ்சு
 
 
ராசி குணங்கள்
கன்னி
இன்றைய தினம் தன்னிச்சையாக செயல்படத் தொடங்குவீர்கள். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். அரசால் ஆதாயம் உண்டு. வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். அதிஷ்ட எண்: 8 அதிஷ்ட நிறங்கள்: கிரே, மஞ்சள்
 
 
ராசி குணங்கள்
துலாம்
இங்கிதமாகப் பேசி எல்லோரையும் கவருவீர்கள். பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். பாதியில் நின்ற வேலைகளையெல்லாம் விரைந்து முடிப்பீர்கள். வாகனப் பழுது நீங்கும். வியாபாரத்தில் புது முதலீடு செய்வீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். அதிஷ்ட எண்: 3 அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, ஊதா
 
 
ராசி குணங்கள்
விருச்சிகம்
மதியம் 12.30 மணி வரை ராசிக்குள் சந்திரன் இருப்பதால் உங்களைப் பற்றிய வதந்திகளை முறியடித்து முன்னேறுவீர்கள். பழைய நினைவுகளில் மூழ்குவீர்கள். மற்றவர்களுடன் உங்களை ஒப்பிட்டுக் கொண்டிருக்க வேண்டாம். வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் பெறுவீர்கள். உத்யோகத்தில் ஓரளவு வேலைச்சுமை குறையும். மாலைப் பொழுதிலிருந்து எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். அதிஷ்ட எண்: 1 அதிஷ்ட நிறங்கள்: மஞ்சள், கருநீலம்
 
 
ராசி குணங்கள்
தனுசு
கணவன்-மனைவிக்குள் மனஸ்தாபம் வந்து நீங்கும். யாருக்காகவும் சாட்சி கையப்பமிட வேண்டாம். மறதியால் விலை உயர்ந்தப் பொருட்களை இழக்க நேரிடும். வியாபாரத்தில் வேலையாட்களால் பிரச்னைகள் வரும். உத்யோகத்தில் உயரதிகாரிகளுடன் மோதல்கள் வரக்கூடும். மதியம் 12.30 மணி முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் எதிலும் எச்சரிக்கையுடன் செயல்படப்பாருங்கள். அதிஷ்ட எண்: 3 அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், கிரே
 
 
ராசி குணங்கள்
மகரம்
எதிலும் வெற்றி பெறுவீர்கள். உறவினர், நண்பர்கள் மத்தியில் பெருமையாகப் பேசப்படுவீர்கள். பணவரவு அதிகரிக்கும். வேற்றுமதத்தவர்களின் அறிமுகம் கிடைக்கும். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். அதிஷ்ட எண்: 5 அதிஷ்ட நிறங்கள்: வெள்ளை, மஞ்சள்
 
 
ராசி குணங்கள்
கும்பம்
மற்றவர்களின் ரசனைக்கேற்ப உங்களின் அணுகுமுறையை மாற்றிக் கொள்வீர்கள். சகோதரங்களால் பயனடைவீர்கள். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்யோகத்தில் உங்களின் நிர்வாகத்திறமை வெளிப்படும். அதிஷ்ட எண்: 2 அதிஷ்ட நிறங்கள்: ஊதா, இளஞ்சிவப்பு
 
 
ராசி குணங்கள்
மீனம்
சொன்ன சொல்லைக் காப்பாற்றத் துடிப்புடன் செயல்படுவீர்கள். உறவினர், நண்பர்களுடன் மனம் விட்டு பேசுவீர்கள். சிலர் உங்களை நம்பி பெரிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் தலைமையின் நம்பிக்கையைப் பெறுவீர்கள். அதிஷ்ட எண்: 4 அதிஷ்ட நிறங்கள்: மயில் நீலம், ப்ரவுன்

Leave a Reply