இன்றைய ராசிபலன் 30/09/2016

இன்றைய ராசிபலன் 30/09/2016

astrologyமேஷம்
எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். உறவினர், நண்பர்களால் ஆதாயம் உண்டு. அரசாங்க விஷயம் சாதகமாக முடியும். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களை தேடுவீர்கள். உத்யோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். அதிஷ்ட எண்: 1 அதிஷ்ட நிறங்கள்: வெளிர் மஞ்சள், ப்ரவுன்

ராசி குணங்கள் ரிஷபம்
புதிய முயற்சிகள் யாவும் வெற்றியடையும். பிள்ளைகளின் தனித்திறமைகளை கண்டறிவீர்கள். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவுக் கிட்டும். அதிஷ்ட எண்: 7 அதிஷ்ட நிறங்கள்: ஆலிவ் பச்சை, வெள்ளை

ராசி குணங்கள் மிதுனம்
எதிர்ப்புகள் அடங்கும். நட்பு வட்டம் விரியும். அரசு அதிகாரிகளின் உதவியால் சில காரியங்களை முடிப்பீர்கள். தாயாருடன் வீண் விவாதம் வந்துப் போகும். வேற்றுமதத்தவர் அறிமுகமாவார். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை கவர சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்யோகத்தில் அமைதி நிலவும். அதிஷ்ட எண்: 9 அதிஷ்ட நிறங்கள்: அடர் சிவப்பு, இளம்மஞ்சள்

ராசி குணங்கள் கடகம்
உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். உடன்பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். அரசால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். உத்யோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். அதிஷ்ட எண்: 5 அதிஷ்ட நிறங்கள்: ஊதா, ரோஸ்

ராசி குணங்கள் சிம்மம்
கடந்த இரண்டு நாட்களாக குடும்பத்தில் இருந்து வந்த கூச்சல், குழப்பம் விலகும். வர வேண்டிய பணம் கைக்கு வரும். அழகு, இளமைக் கூடும். வாகனப் பழுது நீங்கும். உறவினர்கள் மதிப்பார்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள். உத்யோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும். அதிஷ்ட எண்: 8 அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், கிரே

ராசி குணங்கள் கன்னி
ராசிக்குள் சந்திரன் நுழைவதால் வேலைச்சுமையால் பதட்டம் அதிகரிக்கும். அக்கம்&பக்கம் இருப்பவர்களை அனுசரித்துப் போங்கள். உங்களைப் பற்றி அவதூறாகப் பேசுவார்கள். அதை பெரிது படுத்த வேண்டாம். அநாவசியமாக மற்றவர்கள் விஷயத்தில் தலையிட வேண்டாம். வியாபாரத்தில் வேலையாட்களுடன் போராட வேண்டி வரும். உத்யோகத்தில் முக்கிய கோப்புகளை கையாளும் போது அலட்சியம் வேண்டாம். அதிஷ்ட எண்: 6 அதிஷ்ட நிறங்கள்: க்ரீம் வெள்ளை, ஆரஞ்சு

ராசி குணங்கள் துலாம்
திட்டமிட்ட காரியங்களை அலைந்து முடிக்க வேண்டி வரும். பிள்ளைகள் பிடிவாதமாக இருப்பார்கள். வாகனத்தை இயக்கும் போது அலைப்பேசியில் பேச வேண்டாம். அரசாங்க விஷயம் தாமதமாகும். வியாபாரத்தில் வேலையாட்களை அனுசரித்துப் போங்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களிடம் விவாதம் வேண்டாம். அதிஷ்ட எண்: 4 அதிஷ்ட நிறங்கள்: வெள்ளை, நீலம்

ராசி குணங்கள் விருச்சிகம்
ஆன்மிகப் பெரியோரின் ஆசி கிட்டும். பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். பிரபலங்களால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் புதுத் தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி அடையும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் மத்தியில் பாராட்டப்படுவீர்கள். அதிஷ்ட எண்: 3 அதிஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, மயில் நீலம்

ராசி குணங்கள் தனுசு
நீண்ட நாள் ஆசையில் ஒன்று நிறைவேறும். பழைய உறவினர், நண்பர்கள் தேடி வந்துப் பேசுவார்கள். சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். வாகன வசதிப் பெருகும். வியாபாரத்தில் வேலையாட்களால் ஆதாயம் உண்டு. உத்யோகத்தில் மேலதிகாரிகள் உங்கள் ஆலோசனையை ஏற்பார்கள். அதிஷ்ட எண்: 1 அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், மஞ்சள்

ராசி குணங்கள் மகரம்
கடந்த இரண்டு நாட்களாக இருந்த மனஉளைச்சல் நீங்கி தெளிவு பிறக்கும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள். வியாபாரத்தில் ஏற்பட்ட இழப்புகளை சரி செய்வீர்கள். அதிஷ்ட எண்: 2 அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், ப்ரவுன்

ராசி குணங்கள் கும்பம்
சந்திராஷ்டமம் தொடங்குவதால் அவசர முடிவுகள் எடுக்காமல் இருப்பது நல்லது. குடும்பத்தில் ஒருவரை மாற்றி ஒருவர் குறைக் கூறிக் கொண்டிருக்காதீர்கள். நீங்கள் சிலருக்கு நல்லது சொல்லப் போய் பொல்லாப்பாக முடியும். யாருக்கும் ஜாமீன் கையெழுத்திட வேண்டாம். வியாபாரத்தில் ஒப்பந்தங்கள் தள்ளிப் போகும். உத்யோகத்தில் அதிகாரிகளைப் பகைத்துக் கொள்ளாதீர்கள். அதிஷ்ட எண்: 4 அதிஷ்ட நிறங்கள்: வைலெட், இளஞ்சிவப்பு

ராசி குணங்கள் மீனம்
உங்களின் திறமையை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். சகோதர வகையில் நன்மை உண்டு. கல்யாண முயற்சிகள் பலிதமாகும். மனைவிவழியில் ஆதரவுப் பெருகும். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் புது அதிகாரி உங்களை மதிப்பார். அதிஷ்ட எண்: 6 அதிஷ்ட நிறங்கள்: க்ரீம் வெள்ளை, ப்ரவுன்

Leave a Reply