மேஷம்
இன்று பல்வேறு விதமான வேலைகளையும் பொறுப்புகளையும் ஏற்பீர்கள். உடல் சோர்வோடு பிடிமானமில்லா மனநிலையும் தான் மிச்சம் என்றிருந்தது. இனி கவலை வேண்டாம். புதிய வழிமுறைகளில் நூதனமாக காரியம் சாதிக்க பொறுமையாக அடியெடுத்து வைக்கப் போகிறீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9
ரிஷபம்
இன்று உயர் படிப்புகளை நீங்கள் விரும்பும் துறையில் தொடரலாம். கலை மற்றும் நுண்கலைத் துறைகளில் தேர்ந்தெடுத்தால் சிறந்து விளங்கலாம். சற்று வருத்தமான மனநிலை இருக்கும். ஜுரம், மன அழுத்தம் போன்ற பிரச்னைகள் வரலாம். பொறுமை தேவை.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 7
மிதுனம்
இன்று எதிர்கால நோக்கங்களை கருத்தில் கொண்டு உழைக்கத் தயாராகிவிடுவீர்கள். உங்களின் பொறுமையான செயல்பாடுகள் நல்ல பலனை அளிக்கும். எந்த முதலீடு பற்றியும் வாழ்க்கைத் துணையுடன் ஆலோசித்து முடிவெடுக்கவும். திடீர் கலகங்களை சந்திக்க வேண்டியிருக்கும். பேச்சில் மிகுந்த எச்சரிக்கை தேவை.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 7
கடகம்
இன்று குடும்பப் பிரச்னைகளை மனதில் கொண்டு வியாபாரம், அலுவலக இடங்களில் அதை வெளிப்படுத்த வேண்டாம். பெரிய மனிதர்களின் தொடர்புகளால் வியாபாரத்தில் முதலீடுகள் செய்து மேன்மை பெறலாம். பொறுமை தேவை. கூட்டுத் தொழில் செய்யும் முன் தகுந்த ஆலோசனைகளைப் பெறவும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 1, 6, 9
சிம்மம்
இன்று இடம், மனை வாங்க கடன் பெறும் வாய்ப்புகள் கிடைக்கும். பலனை எதிர்பாருங்கள். தங்கள் பிள்ளைகளுக்கு நல்ல வேலை கிடைக்கும். தாங்களும் அரசின் உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். ஷேர் முதலீடுகள் செய்ய ஏற்ற காலமும் இதுதான். மனைவிக்கு மருத்துவச் செலவுகள் கூடும். பூர்வீகச் சொத்து சம்பந்தமான பிரச்னைகளை பேசித் தீர்த்துக் கொள்வது நல்லது.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம், வெள்ளை
அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9
கன்னி
இன்று அலங்கார பதவிகள் வந்து சேரும். பொருளாதாரம் சம்பந்தப்பட்ட பிரச்னைகளில் மாட்டிக் கொள்ள நேரும். சொத்துப் பிரச்னைகள் இருந்தால் ஆரம்பத்தில் முன்கூட்டியே சரி செய்துவிடுங்கள். உங்களுடைய குணம் உங்களை பிரபலமடையச் செய்யும்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெள்ளை
அதிர்ஷ்ட எண்கள்: 1, 7, 9
துலாம்
இன்று எவருக்கும் கடன் தரவேண்டாம். பிரயாணங்களில் முழு எச்சரிக்கை தேவை. தீக்காயம், விஷபயம் ஏற்படும். உயர்கல்வி மற்றும் வெளியிடங்களில் படிக்கும் இந்த ராசி குழந்தைகளின் பெற்றோர் அடிக்கடி சந்தித்து குடும்ப சூழ்நிலை குறித்துச் சொல்லி, அவர்கள் தவறான வழிகளில் செல்லாமல் பார்த்துக் கொள்வது அவசியம்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள்
அதிர்ஷ்ட எண்கள்: 2, 6
விருச்சிகம்
இன்று திறமைகள் வெளிப்படும். தான தருமங்களில் விருப்பம் உண்டாகும். உறவினர்களின் அர்த்தமற்ற எதிர்ப்புகளால் பட்ட கஷ்டங்கள் நீங்கும். அளவுக்கதிகமாக உள்ள குடும்பக் கடன்கள் தீரும். நீங்கள் விரும்பியபடி வாழ்க்கைத்துணை அமையும். ஸ்திர சொத்துக்களை வாங்குவதிலும் விற்பதிலும் பிரச்னைகள் வரக்கூடும். சகோதரர்களுடன் விவாதம் வேண்டாம்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண்கள்: 2, 9
தனுசு
இன்று நல்ல தன்னம்பிக்கையுடன் திடமான மனதும் இருக்கும். புதிய தொழில் தொடர்பாக வாழ்க்கைத்துணையுடன் பிரச்னைகள் ஏற்படும். எனவே உண்மை நிலையை அமைதியுடன் சமாளிக்கவும். நீங்கள் யோக, தியானங்களில் மனதை செலுத்துவது நல்ல பலன் தரும். மிகுந்த பலமுள்ளவராகவும் அனைத்து போட்டிகளிலும் ஜெயிப்பவராகவும் இருப்பீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 1, 5
மகரம்
இன்று செலவுகளைக் கட்டுப்படுத்தப்பட வேண்டிய நேரம் இது. குடும்பம் மகிழ்ச்சியாக இருக்கும். நீண்ட நாட்களாக குழந்தை பாக்யம் வேண்டி காத்திருப்பவர்களுக்கு நற்பலன் கிட்டும் நேரம். சகோதர சகோதரிகள் உதவுவார்கள். கூட்டுக் குடும்பமாக மகிழ்ச்சியாக இருக்கலாம். தங்களைப் பிரிந்து படிப்புக்காக வெளியில் செல்ல வேண்டியது இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள்
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9
கும்பம்
இன்று மூத்த சகோதரர்களின் உதவியுடன் அனைத்து பிரச்னைகளும் தீரும். அதிகாரிகள் சற்றே எதிர்பார்ப்புடன் காணப்படுவார்கள். செலவுகள் வந்தாலும் புகழும் சேர்ந்து வரும். அலுவலக வேலைகளில் முதன்மையானவர் என்று பெயரெடுக்கலாம். உடல்நிலை காரணமாக அதிக செலவு ஏற்படலாம்.
அதிர்ஷ்ட நிறம்: ஊதா, மஞ்சள்
அதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 9
மீனம்
இன்று எந்த அலுவலக வழக்கு விவகாரங்களிலும் ஈடுபடாதீர்கள். பிரச்னை வரலாம். அலுவலக அலைச்சல் அதிகமாகும். ஆய்வுகளுக்கு தங்களின் உதவி தேவைப்படும். தங்களின் திறமை மேலோங்கி நற்பெயர் பெறுவீர்கள். எடுத்த காரியங்கள் அனைத்திலும் வெற்றியை காணலாம்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், இளஞ்சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 2, 5.