தமிழகம் முழுவதும் இன்று முழு அடைப்பு. சட்டசபை கூட்டமும் ஒத்திவைப்பு.

bandhகாவிரியின் குறுக்கே மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று தமிழகம் முழுவதும் முழு அடைப்பு நடத்தப்படுகிறது. இதில் பல்வேறு கட்சிகளும் இணைத்துக் கொண்டுள்ளன. எனவே, சட்டசபைக்கும் இன்று விடுமுறை அளிக்க வேண்டும் என தி.மு.க. உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் கோரிக்கை விடுத்திருந்ததை அடுத்து இன்று நடக்கவிருந்த தமிழக சட்டசபை கூட்டம் வரும் திங்கள் கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக சட்டப்பேரவை செயலாளர் ஜமாலுதீன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு ஒன்றில், ‘மார்ச் 28ஆம் தேதி நடைபெறுவதாக இருந்த சட்டசபைக் கூட்டம் வரும் திங்கள் கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மார்ச் 30, 31 மற்றும் ஏப்ரல் 1ஆம் தேதியில் சட்டசபைக் கூட்டம் நடக்கும் திட்டமிட்டபடி நடைபெறும்.

சட்டசபையில் இன்று நடைபெற இருந்த அலுவல்கள் திங்கள் கிழமை நடைபெறும். அதேபோல், மார்ச் 30, 31ஆம் தேதிகளில் நடைபெற இருந்த அலுவல்கள் மார்ச் 31, ஏப்ரல் 1ஆம் தேதி நடைபெறும்” எனக் கூறியுள்ளார்.

Leave a Reply