இன்றைய முழு அடைப்பில் கலந்துகொள்ளும் அமைப்புகள் எவை எவை?

இன்றைய முழு அடைப்பில் கலந்துகொள்ளும் அமைப்புகள் எவை எவை?

bandhகாவிரி நீர் பிரச்சனை காரணமாக பெங்களூர் உள்பட கர்நாடகாவின் பல பகுதிகளில் தமிழர்கள் தாக்கப்பட்டதைக் கண்டித்துத் தமிழகத்தில் இன்று முழு அடைப்பு நடைபெற்று வருகிறது.. விவசாய சங்கங்கள் அழைப்பு விடுத்த இந்த முழு அடைப்பிற்கு தி.மு.க., காங்கிரஸ், தே.மு.தி.க., ம.தி.மு.க., பா.ம.க., விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, மாக்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய அரசியல் கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. இந்நிலையில் இன்றைய முழு அடைப்பில் கலந்துகொள்ளும் கட்சிகள், அமைப்புகள் என்னென்ன என்பது குறித்து தற்போது பார்ப்போம்

1. அரசு பேருந்துகள் ஓடும். தனியார் பேருந்துகள் ஓடாது. எனினும் தி.மு.க., இடதுசாரி கட்சிகள் உள்ளிட்ட தொழிற்சங்கத்தைச் சேர்ந்த ஓட்டுநர், நடத்துநர்கள் பணிக்கு வரமாட்டார்கள் என்பதால் குறைந்த அளவில் பேருந்துகள் இயக்கப்படும் என தெரிகிறது.

2. அரசு பள்ளி கல்லூரிகள் இயங்கும், தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை

3. தமிழகம் முழுவதும் லாரி, வேன், ஆட்டோ, ஷேர் ஆட்டோ, வாடகைக் கார்கள் ஆகிய வாகனங்கள் இயங்காது.

4. வணிகர் சங்கங்கள் இந்த முழு அடைப்பிற்கு ஆதரவு கொடுத்துள்ளதால் பெரும்பாலான கடைகள் மூடப்படுகிறது. ஆனால் அதே நேரத்தில் ஓட்டல் சங்கம் இந்த முழு அடைப்பிற்கு ஆதரவு தெரிவிக்கவில்லை. எனவே சென்னை உள்பட தமிழகம் முழுவதும் ஓட்டல்கள் இயங்கும்

5. பெட்ரோல் பங்குகள் மூடப்பட்டிருக்கும். அதேபோல் குழந்தைகள் மற்றும் முதியோர்களின் நலனை கருத்தில் கொண்டு காலை 6 மணி முதல் 9 மணி வரை 3 மணி நேரம் மட்டும் பால் விற்பனை செய்யப்படும்

6. மத்திய, மாநில அரசு அலுவலகங்கள் வழக்கம்போல் இயங்கும்.

7. இந்த முழு அடைப்பிற்கு மத்திய அரசு ஊழியர்கள் ஆதரவு இல்லை என்பதால் ரயில்கள், தபால் நிலையங்கள், வங்கிகள் வழக்கம்போல் செயல்படும்

8. திரையரங்குகளில் காலை மற்றும் மதிய காட்சிகள் ரத்து. மாலை 6 மணிக்கு மேல் காட்சிகள் ஓடும்

Leave a Reply