திருப்பதி ஏழுமலையானுக்கு பட்டு வஸ்திரம் சமர்பிக்க இன்று ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு திருப்பதிக்கு வருகை தரவுள்ளதால் மலைபாதை முழுவதும், நேற்று பலத்த சோதனை செய்யப்பட்டது.
திருப்பதி ஏழுமலையானுக்கு, இன்று முதல் வருடாந்திர பிரம்மோற்சவம் ஆரம்பிக்க உள்ளதையொட்டி இன்று மாலை ஏழுமலையானுக்கு பட்டு வஸ்திரம் சமர்பிக்க, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, திருப்பதிக்கு வருகை தரவுள்ளார்.
முதல்வரின் பயணத்தை ஒட்டி திருப்பதியில் உள்ள விமான நிலையத்திலிருந்து திருமலைக்கு செல்லும் பாதை முழுவதும் போலீஸார் தீவிர சோதனை செய்து வருகின்றனர். கடந்த 2003ம் ஆண்டு அக்டோபர் 1ம் தேதி, திருமலை ஏழுமலையானுக்கு நடைபெற்ற பிரம்மோற்சவத்தின்போது, பட்டு வஸ்திரம் சமர்பிக்க வந்த முதல்வர் சந்திரபாபு நாயுடுவை, மவோயிஸ்டுகள் வெடிகுண்டு மூலம் கொல்ல முயற்சி செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த சம்பவத்தில் சந்திரபாபு நாயுட் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.