அரவிந்த் கெஜ்ரிவாலை இன்று சந்திக்கின்றார் சந்திரபாபு நாயுடு: நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவு கேட்கின்றாரா?
ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து தர முடியாது என்று கூறிய மத்திய அரசில் இருந்து சமீபத்தில் வெளியேறிய தெலுங்கு தேச கட்சி தற்போது பாராளுமன்றத்தில் நம்பிக்கை இல்லா தீர்மானத்தை கொண்டு வந்துள்ளது.
இந்த தீர்மானத்திற்கு ஆதரவு கேட்க சந்திரபாபு நாயுடு பல அரசியல் தலைவர்களை சந்தித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று டெல்லி சென்ற சந்திரபாபு நாடு, காங்கிரஸ் கட்சியின் வீரப்ப மொய்லி, தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பவார், அகாலி தள கட்சியை சேர்ந்த, ஹர்சிம்ரத் கவுர் பாதல் ஆகியோரை சந்தித்து மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவதற்கு ஆதரவு கோரினார்.
இந்த நிலையில் இன்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை சந்திக்க அவர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் தேசிய அளவில் மூன்றாவது அணி அமைப்பது குறித்தும் இந்த சந்திப்பின்மூலம் ஆலோசிக்கப்படும் என தெரிகிறது