தினகரன் இன்று அறிவிப்பது புதிய கட்சியா? புதிய அணியா?
இன்று தினகரன் புதிய கட்சியை ஆரம்பிக்கவுள்ளதாகவும், இல்லை இல்லை அவர் அதிமுகவின் ஒரு புதிய அணியைத்தான் தொடங்கவுள்ளதாகவும் அரசியல் வட்டாரத்தில் பேச்சு அடிபடும் நிலையில் இதுகுறித்து தினகரனே தனது பேட்டியில் விளக்கியுள்ளளஅர்.
டெல்லியில் நேற்று செய்தியாளர்கள் முன் பேசிய தினகரன், ‘இன்றைய தினம் புதிய அணியின் பெயரை மட்டுமே அறிவிக்க உள்ளேன். புதிய கட்சி தொடங்கவில்லை. இன்று நடைபெற உள்ள கூட்டத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கானோர் இதில் பங்கேற்பார்கள்’ என்று கூறினார்.
அனைத்திந்திய அண்ணா அம்மா திராவிட முன்னேற்றக் கழகம், எம்ஜிஆர் அம்மா திராவிட முன்னேற்றக் கழகம், எம்ஜிஆர் அம்மா திராவிட கழகம் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை தனது அணியின் பெயராக இன்று தினகரன் அறிவிக்கவுள்ளார். இந்த புதிய அணி பெயர் மற்றும் கொடியை அறிமுகப்படுத்தும் விழா மதுரை மாவட்டம், மேலூரில் இன்று காலை நடைபெற உள்ளது. மேலூர்-அழகர் கோவில் ரோட்டில் எஸ்.பி.ஆர். திடலில் இதற்காக பிரமாண்ட பொதுக்கூட்ட மேடை அமைக்கப்பட்டுள்ளது.