நீட் தேர்வு விலக்கு: இன்று நல்ல செய்தி வரும்: அமைச்சர் விஜயபாஸ்கர்
தமிழக அரசின் நீட் விலக்கு குறித்த அவசர சட்டத்திற்கு மத்திய சட்ட அமைச்சகம் ஒப்புதல் கொடுத்துவிட்டது,. இன்னும் இரண்டு துறைகளான மத்திய உள்துறை அமைச்சகம் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சகம் ஒப்புதல் கொடுத்துவிட்டால் இந்த ஆண்டு தமிழகத்திற்கு நீட் விலக்கு கிடைத்துவிடும்
இதுகுறித்து தமிழக சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியபோது, ‘நீட் தேர்வு விலக்கு குறித்த தமிழகத்தின் அவசர சட்டத்திற்கு மத்திய உள்துறை மற்றும் சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று ஒப்புதல் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக கூறினார். மேலும் ஏற்கனவே, மத்திய சட்ட அமைச்சகம் மற்றும் மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளதாகவும், மத்திய அரசிடம் இருந்து நல்ல செய்தியை இன்று எதிர்பார்க்கலாம் என்றும் அவர் தெரிவித்தார்.
இருப்பினும் அனைத்து துறைகளும் ஒப்புதல் அளித்தாலும் நீட் தேர்வு எழுதியதால் மெடிக்கல் சீட் கிடைக்கும் நிலையில் உள்ள மாணவர்கள் நீதிமன்றத்திற்கு சென்றால் நிலைமை இன்னும் சிக்கலாகும் வாய்ப்பு உள்ளது. ஏற்கனவே நீட் அவசர சட்டம் இயற்றப்பட்டால் அதனை எதிர்த்து வழக்கு தொடர்வே என்று நளினி சிதம்பரம் அவர்கள் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.