இன்று உலக தாய்மொழி தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. உலகில் உள்ள எல்லா மக்களுக்கும் தாய்மொழி மேல் அளவு கடந்த பற்று இருக்கும். ஒவ்வொருவரும் தங்கள் தாய்மொழிக்காக இன்று ஒருதினம் ஒதுக்கி, தாய்மொழியில் மட்டுமே பேசுவோம் என உறுதிமொழி எடுக்கவேண்டிய தினம் இன்று.
சர்வதேச தாய்மொழி தினம் முதன்முதலாக கடந்த 2000ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. அன்றைய ஒருநாள் தாய்மொழி மற்றும் கலாச்சாரத்தை உலகெங்கிலும் உள்ள மக்கள் நினைவு கூறவேண்டும் என்பதற்காகவே UNESCO பிப்ரவரி 21ஆம் தேதியை உலக தாய்மொழி தினமாக கொண்டாட முடிவு செய்தது.
உலகில் உள்ள அனைவரும் இன்று தாய்மொழியின் பெருமையை உணர்ந்து செயல்படுவது போன்று உலகெங்கிலும் உள்ள தமிழ் மக்கள் இன்று ஒருநாள் தமிழில் மட்டும் பேசி உலக தாய்மொழி தினத்தை கொண்டாடுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
உலகில் பல நாடுகளில் வாழும் தமிழர்கள் இன்றைய தாய்மொழி தினத்தை நினைவு கூறுமாறு தமிழ் அறிஞர்கள் இணையதளங்கள் மூலம் கேட்டுக்கொண்டுள்ளனர்.