பிரபல கார்பந்தய வீரர் மைகேல் ஷூமேக்கர் கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு பனிச்சறுக்கு விளையாட்டில் ஈடுபட்ட போது பனிப்பாறை ஒன்று மோதியதால் தலையில் பலத்த காயமடைந்து கோமா நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருடைய மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் மருத்துவமனையில் அவரை கவனித்து வருகின்றனர்.
இந்நிலையில் கோமா நிலையில் இருக்கும் மைக்கேல் ஷூமேக்கருக்கு இன்று 45வது பிறந்தநாள். உலகெங்கிலும் உள்ள அவரது ரசிகர்கள் அவர் கூடியவிரைவில் குணமடைய ஃபேஸ்புக் மற்றும் டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்
மைக்கேல் ஷூமேக்கர் இதுவரை உலக அளவில் ஒன்பது சாம்பியன் பட்டங்களை பெற்றுள்ளார். கடந்த 2012ஆம் ஆண்டு கார் பந்தய போட்டியில் இருந்து அவர் ஓய்வு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
அவருக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்கள் ஷூமேக்கர் இன்னும் அபாய கட்டத்தை தாண்டவில்லை என்றும் கோமா நிலையில் இருந்து அவர் எழுந்தால் மட்டுமே அவருடைய உடல்நிலை குறித்து உறுதியாக எதுவும் கூறமுடியும் என்றும் இந்த விபத்தில் அவருடைய மூளைப்பகுதி கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதாகவும் கூறியுள்ளனர்.