பழைய ரூபாய் நோட்டுக்களை இன்று முதல் மாற்றிக்கொள்ளலாம்

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் 2005ஆம் ஆண்டுக்கு முந்தைய ரூபாய் நோட்டுக்களை ஏப்ரல் 1ஆம் தேதி முதல் வங்கிகளில் கொடுத்து மாற்றிக்கொள்ளலாம் என ரிசர்வ் வங்கி அறிவித்திருந்தது. தற்போது இந்த அறிவித்தலில் சிறிய மாற்றம் செய்து இன்று முதல் பழைய ரூபாய் நோட்டுக்களை வங்கிகளில் மாற்றிக்கொள்ளலாம் என கூறியுள்ளது.

உலகின் பல நாடுகளிலும் அவ்வப்போது பழைய ரூபாய் நோட்டுக்களை திரும்பப்பெறுவது வழக்கமான நடைமுறைதான் என்றும் இந்த அறிவிப்புக்கு எவ்வித அரசியல் காரணங்களும் இல்லை என ரிசர்வ் வங்கி விளக்கம் அளித்துள்ளது. 2005ஆம் ஆண்டுக்கு முந்தைய ரூபாய் நோட்டுக்களை பொதுமக்கள் தங்கள் வசதிப்படி எப்பொழுது வேண்டுமானாலும் வங்கிகளில் கொடுத்து மாற்றிக்கொள்ளலாம் என்றும், இது குறித்து ஏற்படும் சிரமங்கள் குறித்து பொதுமக்கள் தாராளமாக வங்கி அதிகாரிகளிடம் கருத்து தெரிவிக்கலாம் என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

எனவே பொதுமக்கள் இதுகுறித்து அச்சப்பட தேவையில்லை என்றும் அவசரமில்லாமல் பொதுமக்கள் தங்களுக்கு நேரம் கிடைக்கும்போது பழைய ரூபாய் நோட்டுக்களை எவ்வித சிரமம் இன்றி மாற்றிக்கொள்ளலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

Leave a Reply