இரட்டை இலை சின்னம்: தேர்தல் ஆணையம் முன் இருதரப்பு வழக்கறிஞர்கள் ஆஜர்

இரட்டை இலை சின்னம்: தேர்தல் ஆணையம் முன் இருதரப்பு வழக்கறிஞர்கள் ஆஜர்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் அதிமுக சசிகலா, அதிமுக ஓபிஎஸ் என இரண்டு அணிகளாக பிரிந்ததை அடுத்து இருவருமே ஒன்றுபட்ட அதிமுகவின் சின்னமான இரட்டை இலை சின்னத்தை கேட்டு தேர்தல் ஆணையத்தில் மனு கொடுத்துள்ளனர்.

இதுகுறித்து தேர்தல் ஆணையத்தில் இன்று விசாரிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து இருதரப்பு வழக்கறிஞர்களும் தேர்தல் ஆணையம் முன் சற்றுமுன்னர் ஆஜராகியுள்ளனர்.

வைத்தியநாதன், குருகிருஷ்ண குமார், மனோஜ் பாண்டியன் ஆகியோர் ஓபிஎஸ் அணிக்காகவும், மோகன் பராசரண், சல்மான் குர்ஷித் ஆகியோர்களும் வாதாடுகின்றனர். மேலும் மக்களவை துணை சபாநாயகர் தம்பித்துரையும் தேர்தல் ஆணையத்திற்கு வருகை தந்துள்ளார்.

இன்னும் சற்று நேரத்தில் இருதரப்பு வாதங்களையும் கேட்டபின்னர் ‘இரட்டை இலை’ குறித்து தேர்தல் ஆணையம் இறுதி முடிவு எடுக்கவுள்ளது.

Leave a Reply