பொறியியல் கல்லூரிகளில் விண்ணப்பம் செய்ய இன்றே கடைசி நாள்.

தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பொறியியல் கல்லூரிகள், மற்றும் தனியார் சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் விண்ணப்பிக்க இன்று கடைசி நாள். கடந்த 20ஆம் தேதி கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டு பின்னர் ஒருவார காலம் நீட்டிப்பு வழங்கப்பட்டது. நீட்டிக்கப்பட்ட காலம் இன்றுடன் முடிவடைவதால் பொறியியல் கல்லூரியில் சேர விரும்பும் மாணவர்கள் இன்று மாலைக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறனர்.

தமிழகத்தில் மொத்தம் மொத்தம் 570 அரசு, அரசு உதவியுடன் இயங்கும் மற்றும் சுயநிதி இன்ஜினியரிங்  உள்ளன. இந்த கல்லூரிகளில் 2014-2015 ஆம் கல்வி ஆண்டில் B.E படிப்பில் சேர்வதற்கு, கடந்த 3 ஆம் தேதி முதல் விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகின்றது. அண்ணா பல்கலைகழகம் உள்பட மாநிலம் முழுவதும் மொத்தம் 60 மையங்களில் இந்த விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வந்தன.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை மே 20ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்கவேண்டும் என முதலில் அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. பின்னர் மாணவர்களின் வசதிக்காக ஒருவார காலம் நீட்டிப்பு செய்து மே 27 வரை விண்ணப்பிக்கலாம் என்று மறு அறிவிப்பு செய்யப்பட்டது. இந்த கால நீட்டிப்பு இன்றுடன் முடிகிறது.

இன்ஜினியரிங்  கல்லூரிகளில் சேருவதற்கு தற்போது வரை 2,10,144 விண்ணப்பங்கள் விற்பனையாகியுள்ளது. ஆனால் இதுவரை 1,56,000 விண்ணப்பங்கள் மட்டுமே பூர்த்தி செய்யப்பட்டு சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. இன்று கடைசி நாள் என்பதால் அதிக விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply