வி.ஏ.ஓ தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்

vao

டிஎன்பிஎஸ்சி நடத்தும் வி.ஏ.ஓ தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கிராம நிர்வாக அதிகாரி (வி.ஏ.ஓ.) பதவியில் 813 காலியிடங்களை நிரப்புவதற்கு அடுத்த ஆண்டு பிப்ரவரி 14-ஆம் தேதி போட்டித் தேர்வு நடத்தப்படும் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) அறிவித்துள்ளது. இந்தத் தேர்வை எழுத ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க டிசம்பர் 14-ஆம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விஏஓ பணிக்கு எஸ்.எஸ்.எல்.சி. தேர்ச்சி பெற்றவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். வயது 21 முதல் 30-க்குள் இருக்க வேண்டும். பொதுப்பிரிவினர் நீங்கலாக இதர இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கும், ஆதரவற்ற விதவைகளுக்கும் வயது வரம்பு 40-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தமிழ்வழியில் படித்தவர்களுக்கு அரசுப் பணியில் 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இந்த உத்தரவு விஏஓ பணிக்கும் பொருந்தும் என்பதால் மொத்த காலியிடங்களில் 20 சதவீத இடங்கள் தமிழ்வழியில் எஸ்எஸ்எல்சி முடித்தவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படும். ஆன்லைனில் விண்ணப்பிக்கும்போதே இது குறித்து குறிப்பிட வேண்டும்.

கூடுதல் விவரங்களுக்கு http://www.tnpsc.gov.in என்ற இணையதளத்தை பார்க்கலாம்.

Leave a Reply