ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கு. பகல் 1 மணிக்கு தீர்ப்பு ஒத்திவைப்பு.

judgement
ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் மதியம் 1 மணிக்கு தீர்ப்பு வழங்கும் என கூறப்படுகிறாது.  நீதிமன்றத்தினுள் இருக்கும் அதிமுக வழக்கறிஞர்கள் இந்த தகவலை தெரிவித்ததாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்நிலையில் ஜெயலலிதா தற்போது நீதிமன்றத்தில் ஆஜராகி உள்ளார்.

ஜெயலலிதா தவிர்த்து இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சசிகலாம் சுதாகரன், இளவரசி உள்ளிட்டோரும் ஆஜராகி உள்ளனர்.

இவ்வழக்கை விசாரித்த பெங்களூரு தனி நீதிமன்ற சிறப்பு நீதிபதி குன்ஹா இன்னும் சற்று நேரத்தில், நாடு முழுவதும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள தீர்ப்பை வழங்க உள்ளார். 

Leave a Reply