இன்னும் சற்று நேரத்தில் தீர்ப்பு. பெங்களூரில் இனிப்புடன் காத்திருக்கும் அதிமுகவினர்.

judgement dayஅதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பு இன்று காலை 11மணியளவில்  வெளியாகவுள்ள நிலையில் ஆயிரக்கணக்கான அதிமுக தொண்டர்கள் பல லட்சம் மதிப்புள்ள பட்டாசு மற்றும் இனிப்புகளுடன் பெங்களூரு நகரில் நேற்று முதல் குவிந்துள்ளனர். தீர்ப்புக்கு பின்னர் அசம்பாவிதம் எதுவும் நடைபெறாமல் இருக்க துணை ராணுவ படையினர் உட்பட 1500 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

நூற்றுக்கணக்கான கார், வேன், மற்றும் பேருந்துகளில் ஏராளமான அதிமுக தொண்டர்கள் நேற்று முன் தினம் முதலே பெங்களூரு வர தொடங்கிவிட்டனர். சிவாஜிநகர், சாந்திநகர், காந்தி நகர், எம்ஜி ரோடு, பிரிகேட் ரோடு ஆகிய இடங்களில் உள்ள அனைத்து லாட்ஜ்களூம் நிரம்பியுள்ளது. ஆனால் அமைச்சர்கள் உள்பட முக்கிய அதிமுக தலைவர்கள் யாரும் பெங்களூருக்கு வரவில்லை என கூறப்படுகிறது. ஜெயலலிதா கேட்டுக்கொண்டதை அடுத்தே அமைச்சர்கள் உள்பட முக்கிய தலைவர்கள் பெங்களூருக்கு செல்லவில்லை என கூறப்படுகிறாது.

இதனிடையே’ பெங்களூருவில் சுமார் 5 ஆயிரத்துக்கும் அதிகமான அதிமுகவினர் திரண்டுள்ளதால் தீர்ப்பு வெளியான பின்னர் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக உளவுத்துறை  எச்சரிக்கை விடுத்துள்ளதால் பாதுகாப்பு பலப்படுத்துள்ளது. பெங்களூரு மாநகர காவல் சட்டம் ஒழுங்கு கூடுதல் ஆணையர் நேற்று கர்நாடக மாநில அதிமுக செயலாளர் வா.புகழேந்தியை வர வழைத்து ஆலோசனை நட‌த்தியதாகவும், தீர்ப்பு வெளியாகும்போது சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படக் கூடாது, நீதிமன்ற வளாகத்தில் பட்டாசு வெடிக்கக்கூடாது, கூட்டம் போடவோ, பேரணியாக செல்லவோ கூடாது என அப்போது அவர் அறிவுறுத்தியதாகவும் கூறப்படுகிறது. அதற்கு புகழேந்தி, “அதிமுக தொண்டர்கள் சட்டம் ஒழுங்குக்கு எவ்வித இடையூறு செய்ய மாட்டார்கள்” என உறுதியளித்துள்ளார்.

Leave a Reply