ஜெயலலிதா வழக்கில் இன்று தீர்ப்பு. பெங்களூரில் பெரும் பதட்டம்.

judgement 2 பல வருடங்களாக பெங்களூரில் நடைபெற்று வரும் ஜெயலலிதாவின் சொத்துக்குவிப்பு வழக்கின் இறுதி தீர்ப்பு இன்று வழங்கப்பட இருக்கும் நிலையில் பெங்களூரிலும், தமிழகத்திலும் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த தீர்ப்பு எவ்வாறு இருக்கும் என்பதை கேட்க தமிழக அமைச்சர்களும், எம்.எல்.ஏ.க்கள் மட்டுமின்றி தமிழகம் முழுவதிலும் இருந்தும் நிர்வாகிகளும் தொண்டர்களும் பெங்களூரை நோக்கி படையெடுத்து வருகின்றனர். இதற்கான பாதுகாப்புப் பணியில் சுமார் 6,000 போலீஸார் ஈடுபட்டுள்ளனர். ஆளுங்கட்சி தொண்டர்கள் மட்டுமின்றி எதிர்க்கட்சி தொண்டர்களும் பெங்களூரை முற்றுகையிட்டுள்ளனர்.

கர்நாடக காவல்துறையினர் ஆலோசனை ஆலோசனை நடத்தி அதிகமாக குவிய இருக்கும் கும்பலை கட்டுப்படுத்த வியூகம் அமைத்து வருகின்றனர். இதுபற்றி பெங்களூரு நகர கூடுதல் கமிஷனர் ஹரிசேகரன், ‘‘கர்நாடக, தமிழ்நாடு நல்லிணக்க நட்புறவுக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் எந்த ஒரு அசம்பாவிதமும் நடைப்பெறாத வகையில் பிரதமருக்கு இணையான உச்சக்கட்ட பாதுகாப்பு கொடுத்திருக்கிறோம்.

இந்தப் பாதுகாப்பில் கர்நாடக போலீஸார் 6,000-க்கும் மேற்பட்டவர்கள் ஈடுபட்டுள்ளனர். நாளை காலை தனி விமானம் மூலம் பெங்களூரு ஹெச்.ஏ.எல்., விமான நிலையத்துக்கு வரும் ஜெயலலிதா, கான்வாய் மூலம் பரப்பன அக்ரஹாரா சிறைச்சாலை வளாகத்தில் உள்ள நீதிமன்றத்திற்கு வர இருக்கிறார். அந்த நேரத்தில் அந்த வழியாக மற்ற போக்குவரத்துக்கள் அனைத்தும் நிறுத்தப்படும்.

judgement1

ஹெச்.ஏ.எல்., விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் பரப்பன அக்ரஹாரா நீதிமன்றத்துக்கு ஜெயலலிதா வரும் வகையிலும் இன்னொரு ஏற்பாடு முன்னெச்செரிக்கையாகச் செய்யப்பட்டுள்ளது. தேவைப்பட்டால் 144  தடைச் சட்டமும் போட்டு தமிழகத்தில் இருந்து வரும் வாகனங்களை எல்லை பகுதியிலேயே நிறுத்தப்படும்’’ என்றார்.

இந்தியா முழுவதும் உள்ள ஊடகங்கள் நீதிமன்ற நிகழ்ச்சியை நேரடி ஒளிபரப்பு செய்வதற்கான அனுமதி அட்டையை கமிஷனர் அலுவலகத்தில் வாங்கி இருப்பதால், பெங்களூர் முழுவதும் பெரும் பரபரப்பில் உள்ளது. பெங்களூரு பத்திரிகையாளர்களும் தங்கள் நேரடி கவரேஜ்ஜுக்கான ஓ.பி. வேன்களோடு ஆஜராகி விட்டார்கள்.
ஜெயலலிதா வழக்கு நடைபெற்று வந்த சிட்டி சிவில் கோர்ட்டில் இருந்து ஆவணங்கள், பரப்பன அக்ரஹாரா நீதிமன்றத்துக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது.

விமான நிலையத்தில் இருந்து நீதிமன்றத்துக்கு ஜெயலலிதா வர இருக்கும் கார், இப்போதே பெங்களூரு வந்துவிட்டது. தமிழக முதல்வரின் சிறப்பு பாதுகாப்புப் படை போலீஸாரும் வந்துவிட்டார்கள். பல அமைச்சர்கள் விமானம் மூலம் பெங்களூரு வந்து ரூம் எடுத்து தங்கிவிட்டார்கள். அவர்களுக்கு பாதுகாப்பு கொடுக்கும் வகையில் கர்நாடக காவல்துறை பெங்களூரில் உள்ள அனைத்து ஹோட்டல்களையும் மஃப்டியில் கண்காணித்து வருகிறார்கள்.

Leave a Reply