டெல்லியில் ஏற்பட்ட சுனாமி அடுத்த ஆண்டு தமிழகத்திலும் ஏற்படும். அன்புமணி

1anbumaniடெல்லியில் நேற்று அரவிந்த் கெஜ்ரிவாலின் வெற்றியை நாடே பாராட்டிக்கொண்டிருக்கும் நிலையில் ஆம் ஆத்மி வெற்றி குறித்து கருத்து கூறிய பாமக நிறுவனரின் மகனும் முன்னாள் மத்திய அமைச்சருமான அன்புமணி, ‘டெல்லியில் இன்று கெஜ்ரிவால் சுனாமி, அடுத்த ஆண்டு தமிழகத்தில் பா.ம.க சுனாமி” என்று தெரிவித்துள்ளார். அவருடைய கருத்து காரணமாக பாமக தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

70 சட்டசபை உறுப்பினர்களை கொண்ட டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி 67 இடங்களில் வெற்றி பெற்று எதிர்க்கட்சியே இல்லாத அளவுக்கு வரலாற்று சாதனை வெற்றி பெற்றுள்ளது.

இது குறித்து தனது டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள அன்புமணி, “ஆம் ஆத்மி கட்சி மிகப் பெரிய வெற்றியை பெற்றுள்ளது. டெல்லி தேர்தலில் ஆம் ஆத்மி சாதித்ததுபோல 2016-ல் தமிழக தேர்தலில் பாமக சாதிக்கும்.

இன்று டெல்லியில் கெஜ்ரிவால் சுனாமி, அடுத்த ஆண்டு தமிழகத்தில் பா.ம.க சுனாமி” என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply