இன்று உள்ளாட்சி தேர்தல்: வாக்களிக்க என்னென்ன ஆவணங்கள் வேண்டும்?

இன்று உள்ளாட்சி தேர்தல்: வாக்களிக்க என்னென்ன ஆவணங்கள் வேண்டும்?

தமிழகத்தில் முதல்கட்ட உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு இன்னும் ஒரு சில நிமிடங்களில் ஆரம்பமாக உள்ளது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

இந்த நிலையில் உள்ளாட்சித் தேர்தலில் வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள் என்னென்ன ஆவணங்களை கொண்டு வாக்கு அளிக்கலாம்? என்பது குறித்து தகவலை சற்றுமுன் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது

இதன்படி வரும் உள்ளாட்சித் தேர்தலில் வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள் பாஸ்போர்ட், ஆதார் கார்டு, ஓட்டுனர் உரிமம், அரசு பணியாளர்களின் புகைப்பட அடையாள அட்டை, வங்கி அல்லது அஞ்சல் கணக்கு புத்தகங்கள், 100 நாள் பணிக்கான அட்டை, மருத்துவ காப்பீட்டு ஸ்மார்ட் கார்டு, ஓய்வூதிய ஆவணம், ஸ்மார்ட் ரேஷன் கார்டு, பாராளுமன்ற அல்லது சட்டமன்ற உறுப்பினர் அடையாள அட்டை மற்றும் பான் கார்டு இதில் ஏதாவது ஒரு ஆவணத்தை கொண்டு வாக்காளர்கள் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்யலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது

Leave a Reply