மத்திய அமைச்சரவையில் மாற்றம்: 9 புதிய அமைச்சர்கள் யார்?

மத்திய அமைச்சரவையில் மாற்றம்: 9 புதிய அமைச்சர்கள் யார்?

மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு, குடியரசு துணைத்தலைவர் ஆனதால் அவருடைய பொறுப்புகள் உள்பட ஒருசில பொறுப்புகளை பகிர்ந்தளிக்கும் வகையில் மத்திய அமைச்சரவை மாற்றம் செய்யப்படும் என கூறப்பட்டது. ஏற்கனவே 6 அமைச்சர்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்துள்ள நிலையில் இன்று 9 புதிய அமைச்சர்கள் பதவியேற்கவுள்ளனர்.

அஸ்வினிகுமார், ஷிவ் பிரதாப், வீரேந்திர குமார், அனந்த்குமார், ராஜ்குமார் சிங், ஹர்தீப் சிங் புரி, கஜேந்திரசிங் ஷெகாவத், சத்யபால்சிங், அல்போன்ஸ் கண்ணந்தனம் ஆகியோர் புதிய அமைச்சர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். ஆனாலும் இவர்களுக்கு எந்த துறை என்பது குறித்த தகவல் இன்னும் வெளிவரவில்லை

இன்று காலை 10.30 மணிக்கு புதிய மத்திய அமைச்சர்கள் பதவியேற்பு விழா நடைபெறவுள்ளதாகவும், அதற்கு முன்னர் புதிய அமைச்சர்களாக பதவியேற்கவுள்ளவர்கள் பிரதமர் மோடியை சந்திக்கவுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது

 

Leave a Reply