பெட்ரோல் டீசல் விலை: சர்வதேச அளவில் படுவீழ்ச்சி, ஆனால் சென்னையில் 5 காசுகள் மட்டுமே குறைவு

பெட்ரோல் டீசல் விலை: சர்வதேச அளவில் படுவீழ்ச்சி, ஆனால் சென்னையில் 5 காசுகள் மட்டுமே குறைவு

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக உலகமெங்கும் விமானங்கள் உள்பட வாகனங்கள் அனைத்தும் பயன்படுத்துவது குறைந்துள்ளதால் பெட்ரோல் டீசலுக்கான தேவை குறைந்துள்ளது

இதனை அடுத்து கச்சா எண்ணெய் விலை சர்வதேச அளவில் வீழ்ச்சி அடைந்துள்ளது முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு கச்சா எண்ணெய் விலை கிடுகிடு என குறைந்து வருவதால் அதிர்ச்சி அடைந்த கச்சா எண்ணெய் உற்பத்தியாளர்கள் உற்பத்தியை குறைக்க முடிவு செய்துள்ளனர்

இந்த நிலையில் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி அடைந்தாலும், இந்தியாவில் குறிப்பாக சென்னையில் பெட்ரோல் டீசல் விலை பெரிய அளவில் குறையவில்லை

செனையில் இன்றைய பெட்ரோல் விலை 5 காசுகள் மட்டுமே குறைந்து ரூ.74.23-க்கும், டீசல் 8 காசுகள் மட்டுமே குறைந்து ரூ.67.57-க்கும் விற்பனை ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply