கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயரவில்லை என்று பார்த்தோம்
இந்த நிலையில் இனியும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர வாய்ப்பில்லை என கூறப்படுகிறது
இந்தியாவுக்கு சலுகை விலையில் கச்சா எண்ணெய் விற்பனை செய் ஒப்புக் கொண்டுள்ளதால் இந்தியாவில் பெட்ரோல் விலை உயராது என்றும் மாறாக குறைய வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இந்த நிலையில் சென்னையில் இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு இல்லை என்றும் சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய் 101.40 என்றும் ஒரு லிட்டர் டீசல் விலை ரூபாய் 91.43 எனவும் விற்பனையாகி வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது