இந்தியாவில் மட்டும் பெட்ரோல் விலை உயராதது ஏன்?

பெட்ரோல் மற்றும் டீசல் விலை கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக உயரவில்லை என்பதை பார்த்து வருகிறோம்.

இந்த நிலையில் இன்றும் சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயரவில்லை என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

இதனால் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூபாய் 101.40 எனவும் டீசல் விலை லிட்டருக்கு ரூபாய் 91.43 எனவும் விற்பனையாகி வருகிறது.

மூன்று மாதங்களாக உயராமல் இருந்தாலும் போர் காரணமாக இன்னும் ஓரிரு நாளில் பெட்ரோல் டீசல் விலை உயர வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது