தமிழகத்தில் +2 முடிவுகள் இன்று காலை 10 மணிக்கு வெளியாகிறது. இணையதளங்கள் மற்றும் எஸ்.எம்.எஸ் மூலமும் தேர்வு முடிவை மாணவர்கள் தெரிந்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
+2 தேர்வு முடிவுகள் இன்று காலை 10 மணிக்கு சென்னை டி.பி.ஐ. வளாகத்தில் உள்ள அரசு தேர்வுகள் இயக்குனரகத்தில் இருந்து வெளியிடப்படுகிறது. இந்த தேர்வை 8 லட்சத்து 75 ஆயிரம் மாணவ&மாணவிகள் எழுதியுள்ளனர். தேர்வு எழுதியிருக்கும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாணவர்கள் தேர்வு முடிவுக்காக பரபரப்புடன் காத்திருக்கின்றனர்.
தனித்தேர்வர்கள் அவர்கள் தேர்வெழுதிய மையங்களில் இன்றே (வெள்ளிக்கிழமை) மதிப்பெண் சான்றிதழ்களைப் பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விடைத்தாள் நகல் மற்றும் மதிப்பெண் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவ மாணவிகள் தங்கள் பள்ளிகள் மூலம் இன்று முதலே விண்ணப்பம் செய்யலாம். விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கு 5 நாட்கள் வரை தேர்வுத்துறை இயக்ககம் அனுமதி கொடுத்துள்ளது.
இந்த தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் வரும் ஜூன் மாதத்தில் நடைபெறும் சிறப்பு துணைத்தேர்வில் கலந்துகொள்ளலாம் என்றும், அதற்குரிய விண்ணப்பங்களை வரும் 12ஆம் தேதி முதல் 16ஆம் தேதிக்குள் அவர்கள் தேர்வு எழுதிய மையங்களிலேயே பெற்றுக்கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு கட்டணம் எதுவும் கிடையாது.
தேர்வு முடிவுகள் வெளியாகும் இணையதளங்கள்:
1. http://tnresults.nic.in/
2. http://dge.tn.gov.in/
3. http://www.dge1.tn.nic.in/
4. http://dge2.tn.nic.in/
5. http://www.dge3.tn.nic.in/
எஸ்.எம்.எஸ் மூலம் தேர்வு முடிவுகள் தெரிந்துகொள்ள
9282232585
TNBOARD space EXAM NO. space BIRTH DATE